உண்மையான அன்பு என்ன?மாதிரி

What Is True Love?

12 ல் 9 நாள்

உண்மை அன்பில் நடப்பது எப்படி?
வாசிக்க: 1யோவான் 4:16-17; யோவான் 13: 34-35.
அன்பை வெளிப்படுத்துவது எது? நாம் நமது பாவங்களையும், சுய இச்சைகளையும் விட்டு உண்மையான அன்பில் முன் நடப்பது எப்படி?
கிறிஸ்து இல்லாமல், அவரது உதவி இல்லாமல் நாம் இதைச் செய்ய முடியாது. இதில் நமது கவனத்தை இழப்பதும், வழி விலகிச் செல்வதும் மிகவும் எளிது. கிறிஸ்துவின் மீதும், சுவிசேஷத்தின் மீதும்
உள்ள அன்பே நமது ஒரே நம்பிக்கை. பாவம், சாத்தான், மற்றும் மரணத்தை மேற்கொள்ளவே இயேசு இவ்வுலகில் வந்து, வாழ்ந்து, மரித்து, அடக்கம் பண்ணப்பட்டு, மீண்டும் உயிரோடு எழும்பினார். நம்மை நேசித்த தேவ மைந்தன் தன்னையே நமக்கு ஈவாகக் கொடுத்தார். அவரது அன்பினாலே நமக்குமுன் பாதையை அமைத்தார். 'கர்த்தராகிய இயேசுவே, நான் இந்த அன்பில் நடக்க விரும்புகிறேன். உம்மில் என் முழு விசுவாசத்தையும்,
நம்பிக்கையையும், வைக்க, எனக்கு உதவும்.
பழைய பரிசுத்தவான்களின் பாடல்களைப் படிப்பது இந்தப் போராட்டத்தில் நமது மனதை ஒருமுகப்படுத்த உதவும். அவர்களின் இருதயம் கர்த்தரில் மகிழுவதையும், அவர்கள் அவரை வணங்குவதையும், பரிசுத்த வாழ்க்கை வாழ்வதையும், தங்கள் முழு இருதயம், ஆத்துமா, மனம், மற்றும் பலத்தோடும் அவரில் அன்புகூருவதையும், தெளிவாகக் கேட்க முடிகிறது. உதாரணமாக ஐ சக் வாட்ஸ் என்பவரின் 'விழித்தெழு பக்தி வைராக்கியம், விழித்தெழு என் அன்பே' என்ற பாடலின் வரிகளைக் கூறலாம். உங்கள் இருதயம் அதுபோன்று ஆண்டவரிடம் அன்பு செலுத்த விழைகிறதா?

விழித்தெழு பக்தி வைராக்யமே, விழித்திடு என் அன்பே,
என் இரட்சகருக்கு ஊழியத்தைச் செய்யவே,
மேலோக பூரண பரிசுத்தரும், பரிசுத்த தூதர்களும்,
போக முடியாத அந்த பணிகளில்.

என் ஆத்துமாவே நன்றாய் விழி! பசியுள்ள
ஆத்துமாவைப் போஷிக்கவும், எளியோரை உடுத்துவிக்கவும்,
மோட்சத்தில் தேவைகள் தான் இல்லை, அவர்தம்
இதயங்களில் எப்போதும் பூரண நிறைவே.

என் ஆத்துமாவே என் விகாரங்களை அடக்கிடு,
தேவ பணியைத் தொடர, விடாது போராட,
தினமும் என் பாவங்களைக் கட்டுப்படுத்தி,
என் வெற்றிகள் என்றும் புதிதாக.

வெற்றியின் இராஜ்யம் உயரத்தில் உள்ளது
சண்டையிட எதிரிகள் அங்கில்லையே
வாழ்வின் இறுதி வரை வெற்றியே கொள்வேன் இறைவா,
மகிமையான யுத்தத்தை முற்றும் முடிப்பேன்.

பறந்திடும் மணித்துளிகள் சாட்சியிடட்டும், உமது
சுவிசேஷத்தைப் புதியதாகப் பெற்றுக் கொள்கிறேன்
என் வாழ்வும் பணிகளும் முடியும் போது
வாக்குத்தத்தக் கிரீடத்தைப் பெற்றுக்கொள்வேன்.

உண்மையை இதயத்துக்குக் கொண்டு செல்லுதல்.
உங்கள் மனதைப் புதுப்பித்து இருதயத்தை மறுமலர்ச்சியாக்க ஒரு வேத பகுதியைத் தெரிவு செய்து இதயத்துக்குக் கொண்டு செல்லுவோம்.

சுயத்துக்கு மரித்தல்
நீங்கள் குறித்துக் கொண்ட வேத பகுதி உங்கள் வாழ்க்கையிலுள்ள எந்த குறிப்பிட்ட பாவத்தைச் சுட்டிக் காட்டுகிறது? பவுலடியார் நம்முடைய பழைய மனிதனைக் களைவதைக் குறித்து தெளிவாகக் கூறுகிறார்.

உண்மையை நமது வாழ்க்கையோடு தொடர்பு படுத்துதல்.
புதிய மனிதனை அதாவது கிறிஸ்துவைத் தரித்துக் கொள்ளுதல். உங்கள் மனதிலும், உள்ளத்திலும் இந்த உண்மையை நடைமுறையாக்க, உங்கள் சிந்தனை, மனநிலை, மற்றும் நடத்தைகளில், எந்த குறிப்பிட்ட மாற்றங்களைச் செய்ய வேண்டும்?
நாள் 8நாள் 10

இந்த திட்டத்தைப் பற்றி

What Is True Love?

அன்பு என்றால் உண்மையாக என்ன என்று எல்லாரும் அறிய விரும்புகிறோம். ஆனால், அன்பை பற்றி பைபிள் என்ன சொல்லுகிறது என்று சிலர் தான் பார்கின்றனர். அன்பு என்பது வேதாகமத்தின் ஒரு மைய கருத்து, மற்றும் கிறிஸ்தவ வாழ்க்கையின் மிக முக்கியமான குணம். அன்பின் வேதாகம அர்த்தத்தையும், தேவனை மற்றும் மற்றவர்களை எப்படி நேசிப்பது என்றும் திசில்பென்ட் மினிஸ்ட்ரிஸின் இந்த திட்டம் ஆராய்கிறது.

More

இந்த திட்டத்தை வழங்குவதற்காக, திசில்பென்ட் மினிஸ்ட்ரிஸ் க்கு நன்றி தெரிவிக்கிறோம். மேலும் தகவல் அறிய, www.thistlebendministries.org க்கு செல்லவும்.