திட்ட விவரம்

உண்மையான அன்பு என்ன?மாதிரி

What Is True Love?

12 ல் 11 நாள்

உண்மையான அன்பின் விளைவு? J! O! Y! (மகிழ்ச்சி)



எந்த ஒரு நாளிலும் ஆத்துமா நமக்குள்ளிருக்கும் பாவத்தின் விளைவாக நொந்து போகவும் நமது இருதயம் பலவீனங்களால் துக்கப்படவும் கூடும். "தண்ணீரைப் போல பெலனற்றிருந்தேன்" என்பார் திரு ஜாண் ஓவன். சில தினங்கள் மற்ற நாட்களைவிட மோசமாக இருக்கக் கூடும். நமது வாழ்க்கையில் வீசும் காற்றின் வேகம் மாறுபடுவதால் சோதனைகளாகிய புயல்கள் வருவதும் போவதுமாக இருக்கும். எதிரி குற்றம் சாட்டுகிறான். நமது நம்பிக்கை எங்கே? இயேசுவினிடத்தில்! சோதனைகள் மாதங்களாய், வருடங்களாய், பல்லாண்டுகளாய் சுழன்றடிக்கும்போது அன்பு எங்கே? நம்பிக்கை எங்கே? இயேசுவினிடத்தில் தான்! கடவுளைப் பணியும் நமது எண்ணம் பரீட்சிக்கப்பட்டு சோதிக்கப்படுகிறது. நமது கீழ்ப்படிதல் எங்கே? கிறிஸ்துவின் வழியாக! சோதனையின் உச்ச கட்டத்தில் பல்வேறு எண்ணங்களும் உணர்ச்சிகளும் நமது இதயத்திலும் சிந்தையிலும் முட்டிமோதிக் கொள்ளுகையில் நமது ஆற்றல், பலம், மற்றும் இளமைத் துடிப்பு எங்கே? கிறிஸ்துவுக்குள்!



J - JESUS (இயேசு)

இயேசுவே நமக்கு எல்லாம்; எல்லாவற்றுக்கும் எல்லாம். நாம் சிந்திப்பதையல்ல அல்லது மற்றொருவர் சொல்லுவதையோ நாம் உணருவதையோ அல்ல. அவர் சொல்லுவதை முழுமையாகப் பிடித்துக் கொண்டு விசுவாசிக்க வேண்டும். அவரே நடுநாயகமாக, அடித்தளமாக, முக்கியமானவராக, அனைத்துமாக, ஒப்புயர்வற்றவராக--எல்லாமாக. கிறிஸ்துவின் வாழ்க்கை, மரணம், மற்றும் உயிர்த்தெழுதல் - அனைத்துமே, தகுதியற்ற, முரட்டாட்டமான பாவிகளான, உங்களுக்கும் எனக்குமே. அவர் தனது நிலையையும், தனது மணிமகுடத்தையும், விலக்கி வைத்து, தமது ஜீவனை நமக்காகத் தியாகமாக்கினார். நாமும் கிறிஸ்துவுக்காகவும், பிறருக்காகவும், அவரைப் போன்ற சுயத்துக்கு மரிக்கும் மரணத்திற்காக அழைக்கப்பட்டிருக்கிறோம்.



O - OBEDIENCE (கீழ்ப்படிதல்)

ஆண்டவரின் வார்த்தைக்குக் கீழ்ப்படிந்து, எண்ணம், சொல், செயலில் அவரை விசுவாசிப்பது. இயேசுவையும் அவரது அன்பினையும் இறுகப் பற்றிக் கொள்ளுவது. நமது எண்ணங்களையும், பழைய மனிதனின் சிந்தனைகளையும் விலக்கி வைத்து, விசுவாசத்தைத் தரித்துக் கொண்டு, தேவ வார்த்தையே உண்மை என்று நம்புவது.



உள்ளம் அன்பின் ஊற்றினைப் பின்பற்றி, அவரின் அன்பு நம்மிலும் நம் மூலமும் வழிந்தோடுவதற்கு அனுமதிப்பது எப்படி? இயேசுவின் அருகில் அமர்ந்து, ஆவியானவரின் வழிநடத்துதலின்படி நடந்து, நமது சிந்தனைகளை அல்ல, அவரது தூண்டுதலைப் பின்பற்றுவது எங்ஙனம்?



முதலாவது, அவரின் அன்பின் சிறகின் கீழிருந்து விலகிப் போய் விட்டோமோ என்று சோதித்தறிய வேண்டும். "நான் தெளிவாகக் காண்கிறேனா என்று கேட்க வேண்டும். தேவனே, நான் உமது அடிச்சுவட்டில் நடக்கிறேனா?" நாம் சிறு ஜெபத்தை நம்முடைய பயனுக்காக நாள் முழுவதும் ஜெபிக்கலாம்: "ஆண்டவரே உம்முடைய அன்பை நம்பவும், அந்த அன்பிலே தொடர்ந்து நடக்கவும், உதவி செய்யும். தேவனே, நான் உம்மில் அன்புகூர விரும்புகிறேன். என்னுடைய முழு இருதயத்தோடும், ஆத்துமாவோடும், மனதோடும், பலத்தோடும் உம்மில் அன்பு கூரவும், பிறரை நேசிக்கவும் உதவி செய்யும்."



Y - YOUTH (இளமை)

கழுகுகளைப் போல உங்கள் இளமை புதிதாக்கப்படுகிறது. தேவனில் மன மகிழ்ச்சியும், அந்த மகிழ்ச்சியில் பலத்தையும் பெற்றுக்கொள்ளுகிறீர்கள்!

வேதவசனங்கள்

நாள் 10நாள் 12

இந்த திட்டத்தைப் பற்றி

What Is True Love?

அன்பு என்றால் உண்மையாக என்ன என்று எல்லாரும் அறிய விரும்புகிறோம். ஆனால், அன்பை பற்றி பைபிள் என்ன சொல்லுகிறது என்று சிலர் தான் பார்கின்றனர். அன்பு என்பது வேதாகமத்தின் ஒரு மைய கருத்து, மற்றும் கிறிஸ்தவ வாழ்க்கையின் மிக முக்...

More

இந்த திட்டத்தை வழங்குவதற்காக, திசில்பென்ட் மினிஸ்ட்ரிஸ் க்கு நன்றி தெரிவிக்கிறோம். மேலும் தகவல் அறிய, www.thistlebendministries.org க்கு செல்லவும்.

சம்பந்தப்பட்ட திட்டங்கள்

உங்கள் அனுபவத்தைத் தனிப்பட்டதாக்க யூவெர்ஸன் குக்கீகளைப் பயன்படுத்துகிறது. எங்கள் வலைத்தளத்தைப் பயன்படுத்துவதன் மூலம், எங்கள் தனியுரிமைக் கொள்கையில் விவரிக்கப்பட்டுள்ளபடி குக்கீகளைப் பயன்படுத்துவதை நீங்கள் ஏற்கிறீர்கள்