உண்மையான அன்பு என்ன?மாதிரி

What Is True Love?

12 ல் 12 நாள்

முடிவுரை

கடந்த பல நாட்களாக நாம் வாசித்து, கற்றுக்கொண்டு, ஆராய்ந்த அனைத்தையும் கருதும்போது உண்மையான அன்பிற்கு மற்றும் உண்மையாக தேவனை நேசிப்பதற்கும் உங்கள் உள்ளம் ஏங்குகின்றதா? நமக்கு ஆண்டவர் நிச்சயம் வேண்டும். உண்மையான அன்பு என்றால் என்னவென்றும், நம்மிடம் ஒட்டிக் கொண்டிருக்கும் பாவத்தை விட்டுவிடுவது எவ்வாறென்றும் நமக்குக் காண்பிக்க வல்லவர் அவர் ஒருவரே. சுயத்தை விட்டுவிடுதலும் மாம்சத்திற்கு மரிப்பதும் நமது முழு வாழ்நாள் பணி. அதாவது, நமது சொந்த வழிகளை விட்டு, அனுதினமும் 'விசுவாசித்து நடக்கிறவர்களாக' இருக்க வேண்டும். உண்மையை இருதயத்திற்கு நெருக்கமாக்கி, அதனை தினசரி வாழ்க்கையின் உயிரூட்டமாக்குவதைப் பழக்கமாக்க வேண்டும். உலகம், மாம்சம், பிசாசின் பொய்களை விலக்கி வேத வசனத்தின் உண்மையை பரிசுத்த ஆவியானவரின் துணை கொண்டு அணிந்துகொள்ள வேண்டும். இந்த உலகத்தின் வழிகளையும், சொகுசுகளையும் விட்டுவிடுவதற்கு எவ்வளவாய்க் கற்றுக் கொள்ளுகிறோமோ அவ்வளவாய் கிறிஸ்துவின் பிரசன்னத்தையும் அவரது மகிழ்ச்சியையும் அனுபவிக்கவும், அவரை ஆழமாய் அறிந்து கொள்ளவும் முடியும். இருதயமும் மனமும் புதிதாகிறதினாலே நாம் மறுரூபமாவோம். நமது பழைய வழிகளை விட்டுவிட்டு, கிறிஸ்துவுக்குள்ளான சுகங்களையும் அவரது வழிகளையும் பற்றிக்கொள்வதால், உண்மையான அன்பால் விளையும் சந்தோஷங்களையும், மனமகிழ்ச்சியையும் முழுமையாக அறிந்து கொள்ளுவோம். அவருடைய அன்பினை நம்மிலும், நம் மூலமும் அனுபவித்து, நம்மைக் குறித்த கடவுளின் நோக்கமென வெஸ்ட்மினிஸ்டர் நற்கருணை தெளிவாகக் கூறுவதை நிறைவேற்றுவோம்: 'மனிதவாழ்வின் முக்கியமான நோக்கம் என்ன? மனிதனின் முக்கிய நோக்கம் தேவனை மகிமைப் படுத்துவதும் நித்தியமாக அவரில் மகிழ்ந்திருத்தலுமே!'

நாம் ஜெபிக்கலாம், "என்னுடைய சத்தத்தைக் கேட்டு, நான் இரக்கத்திற்க்குக் கெஞ்சுவதைக் கவனிக்கின்றதால் நான் உம்மை நேசிக்கிறேன் தேவனே. எனக்கு வழங்கப்பட்டுள்ள பரிசுத்த ஆவியானவரின் நிறைவால் உம்முடைய அன்பு என் இருதயத்தில் ஊற்றப்பட்டிருப்பதற்காக, உமக்கு நன்றி!".

உண்மையை இருதயத்திற்கு எடுத்துச்செல்லுதல்:
இன்றைய வேத வாசிப்பின் ஒரு பகுதியை மனப்பாடம் செய்தல்.

சுயத்தை அழித்தல்:
இன்றைய வேத பகுதி, உங்கள் வாழ்க்கையிலுள்ள எந்த பாவத்தைச் சுட்டிக் காட்டுகிறது?

உண்மையை வாழ்வில் நடைமுறைப்படுத்துதல்:
கடவுளுக்குக் கீழ்ப்படிவதற்காக, உங்கள் சிந்தனை, மனப்பான்மை, அல்லது நடத்தையில் எந்த குறிப்பிட்ட மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும்?
நாள் 11

இந்த திட்டத்தைப் பற்றி

What Is True Love?

அன்பு என்றால் உண்மையாக என்ன என்று எல்லாரும் அறிய விரும்புகிறோம். ஆனால், அன்பை பற்றி பைபிள் என்ன சொல்லுகிறது என்று சிலர் தான் பார்கின்றனர். அன்பு என்பது வேதாகமத்தின் ஒரு மைய கருத்து, மற்றும் கிறிஸ்தவ வாழ்க்கையின் மிக முக்கியமான குணம். அன்பின் வேதாகம அர்த்தத்தையும், தேவனை மற்றும் மற்றவர்களை எப்படி நேசிப்பது என்றும் திசில்பென்ட் மினிஸ்ட்ரிஸின் இந்த திட்டம் ஆராய்கிறது.

More

இந்த திட்டத்தை வழங்குவதற்காக, திசில்பென்ட் மினிஸ்ட்ரிஸ் க்கு நன்றி தெரிவிக்கிறோம். மேலும் தகவல் அறிய, www.thistlebendministries.org க்கு செல்லவும்.