உண்மையான அன்பு என்ன?மாதிரி

What Is True Love?

12 ல் 6 நாள்

நாம் உணருகிற முறை உண்மையாக இருக்க வேண்டிய அவசியம் இல்லை.
கவனியுங்கள்: நாம் உணருகிற முறை உண்மையாக இருக்க வேண்டிய அவசியம் இல்லை. நாம் நமது உணர்ச்சிகளால் எளிதாக ஏமாற்றப்படுகிறோம். நாம் அன்பு செலுத்துகிறோம் என்பதை நமது உணர்வுகளைக் காட்டிலும் நமது கிரியைகளும் மனநிலைகளும் மிகவும் அதிகமாக வெளிப்படுத்துகின்றன. நாம் நம்மை சுயபரிசோதனை செய்யும் போது கூட, நமது பார்வை சிதைக்கப்பட்டதாகவே உள்ளது. சொற்பமாகவே காணக்கூடிய அந்தகர்களாகவே இருக்கிறோம். நாள் முழுவதும் நம்முடைய விருப்பங்களையும் வேண்டுதல்களையும் நிறைவேற்றிக் கொண்டிருப்பதைக் கவனிக்காமல், இடையில் செய்யும் ஒன்றிரண்டு சுயநலமற்ற செயல்களை முக்கியப் படுத்துகிறோம்.

உங்கள் கிரியைகள் என்ன சொல்லுகின்றன?
சுயத்தை மையப்படுத்திய, சுயத்தில் அன்பு செலுத்துகின்ற உலகில் அவதரித்து ஆளாக்கப்பட்ட நாம், எப்படி உண்மை அன்பை அடைய முடியும்?
நாம் எப்படி வித்தியாசத்தைக் கண்டு கொண்டு, எங்கு ஆரம்பிக்க முடியும்?
தேவன் அன்பாகவே இருப்பதால் நாம் அவரையே நோக்க வேண்டும். அவரே அன்பின் ஆதாரமாகையால் அவருடைய செயல்களும், அவருடைய ஆள்தத்துவமும் அன்பை சரியாய் புரிந்து கொள்ளுவதற்கும், அன்பின் விளக்கமாகவும் உதவுகிறது.
நம்முடைய தகுதிகளின் அடிப்படையில் தேவனின் அன்பு அருளப்படுவதில்லை என்பது ஒரு ஆறுதல். நாம் அனைவருமே அவருடைய அன்பிற்குத் தகுதியற்றவர்களாகையால் அவருடைய இரக்கத்திற்காக அவரைத் துதிப்போம். கிறிஸ்துவில் தேவனின் அன்பு நமக்கு கிருபையாகக் கொடுக்கப்பட்டுள்ளது. அப்படியானால், உண்மை அன்பின் பிறப்பிடத்தை நாம் அறிவோம். இரட்சிப்பின் போது அவருடைய அன்பைப் பெற்றுக்கொண்டோம், கிருபையாக- அவருடைய பரிசுத்த ஆவியானவரின் மூலமாக. எனவே நாம்,
ஆண்டவரில் அன்புகூர முடியும்;
பிறரிடமும் அன்புகூர முடியும்.
அன்பே நமது கிரியைகளின் ஊற்றாக இருக்கிறது என்பது பொருள்.
கிறிஸ்துவின் அன்பை உங்களுக்குத் தெரியுமா?
தேவனுடைய மற்றும் அவரது குமாரன் கிறிஸ்துவின் அன்பைப் பெற்றுக் கொண்டிருக்கிறீர்களா?
நற்செய்தியின் உண்மையை உணர்ந்திருக்கிறீரா?
நாம் தாழ்மையுடன் அவரன்பில் பிரவேசித்து, அவரின் அன்பைப் பெற்றுக்கொள்ள வேண்டுமென்று தேவன் விரும்புகிறார். நாம் இருக்கற இடத்தில் - துக்கமோ மகிழ்ச்சியோ, ஏமாற்றமோ வெற்றியோ - அவர் நம்மை சந்திப்பார். அவர் நம்மீது உண்மையான அன்பு செலுத்துவதை நாம் அறியவேண்டும் என்று விரும்புகிறார். அவரின் அன்பினை நாம் நம்பவும் வேண்டும். நாம் அவரிடத்தில் நமது எல்லா கவலைகளோடும், பயங்களோடும், பாவங்களோடும், பிரச்சினைகளோடும் வந்து, அவற்றை அவரது பாதப்படியில் சமர்ப்பித்து விட்டு, பதிலாக அவரது கிருபை, இரக்கம் மற்றும் அன்பைப் பெற்றுக் கொள்ளுவோமாக.
நாள் 5நாள் 7

இந்த திட்டத்தைப் பற்றி

What Is True Love?

அன்பு என்றால் உண்மையாக என்ன என்று எல்லாரும் அறிய விரும்புகிறோம். ஆனால், அன்பை பற்றி பைபிள் என்ன சொல்லுகிறது என்று சிலர் தான் பார்கின்றனர். அன்பு என்பது வேதாகமத்தின் ஒரு மைய கருத்து, மற்றும் கிறிஸ்தவ வாழ்க்கையின் மிக முக்கியமான குணம். அன்பின் வேதாகம அர்த்தத்தையும், தேவனை மற்றும் மற்றவர்களை எப்படி நேசிப்பது என்றும் திசில்பென்ட் மினிஸ்ட்ரிஸின் இந்த திட்டம் ஆராய்கிறது.

More

இந்த திட்டத்தை வழங்குவதற்காக, திசில்பென்ட் மினிஸ்ட்ரிஸ் க்கு நன்றி தெரிவிக்கிறோம். மேலும் தகவல் அறிய, www.thistlebendministries.org க்கு செல்லவும்.