உண்மையான அன்பு என்ன?மாதிரி

What Is True Love?

12 ல் 3 நாள்

உண்மையான அன்பு கலப்படமற்றது



உண்மையான அன்பு சுவிசேஷத்தின் மையமான இதயத்தில் இருக்கிறது, நற்செய்தி தேவனுடைய அன்பின் வெளிப்பாடாகும். சுவிசேஷம் அன்பின் எல்லை. இந்த உண்மையான அன்பை நாம் நற்செய்தியின் மூலமே பெறு முடியும். நமக்கு தேவன் உண்மையான அன்பை அறிந்துகொள்ளும் திறன், உண்மையான அன்பை அனுபவிக்கும் திறன், உண்மையான அன்பில் வாழும் திறன் மற்றும் கிறிஸ்துவின் உண்மையான அன்பினை மற்றவர்களுக்கு பகிர்ந்தளிக்கும் திறன் ஆகிய அனைத்து திறன்களையும் கொடுத்துள்ளார்.

சுவிசேஷம் என்றால் என்ன?

சுவிசேஷம் என்பது நற்செய்தியாகும், தேவனுக்கு எதிரான நம்முடைய குற்றங்களுக்கு மற்றும் பாவங்களுக்குப் பதில் ஒருவர் தம் மீது அவ்வனைத்து குற்றச்சாட்டுகளையும் பாவங்களையும் எடுத்துக்கொண்டு தண்டனையும் பெற்றுள்ளார். அந்த பாவத்திற்கான தண்டனையோவென்றால்? மரணம், தேவனின் கோபம், நித்திய துன்பம் மற்றும் தேவானிடமிருந்து பிரிக்கப்பட்டு நரகத்தில் தள்ளப்படுவது. நம்முடைய பாவத்திற்காக பணம் செலுத்துபவர் ஒருவரே, நமது இடத்திலே நின்று, நாம் பெற வேண்டிய எல்லா தண்டனையையும் எடுத்துக்கொண்டார். அவர் தான் இயேசு, எந்த பாவமும் செய்யாமல், முழு கர்த்தராக மற்றும் முழு மனிதனாக, நமக்காக அவரது வாழ்க்கையை ஒப்புக்கொடுத்தார். பாவம் இல்லாமல் நமது பாவம் அனைத்தையும் சுமந்தவர், நம்முடைய எல்லா மோசங்களையும், நம்முடைய எல்லாத் தப்பித்தங்களையும், அவருடைய ஏற்றுக்கொண்டு, அதற்கு பதில் அவருடைய பரிசுத்தையும், அவருடைய பாத்திரத்தையும் அவருடைய நீதியையும் நமக்கு கொடுத்தார்.

தம்முடைய வாழ்க்கையைத் ஒப்புக்கொடுத்தவர், இந்த அன்பை நீங்கள் அறிந்து கொள்ளவும் அதை நீங்கள் பெறவும், அதை அனுபவித்து, அதில் வாழவும், அதை மற்றவர்களுக்கு நீங்களும் பகிர்ந்து கொடுக்கவும் விரும்புகிறார்.

இந்த அன்பை நீங்கள் பெற்றிருக்கிறீர்களா? உங்களுக்கு உறுதியாக தெரியவில்லை என்றால், நாங்கள் உங்களை இங்கே கீழே கொடுக்கப்பட்டுள்ளதை படிக்க அழைக்கிறோம்"நமது இரட்சிப்பின் நற்செய்தி." நீங்கள் தேவனுடைய மன்னிப்பை பெற்றிருக்கிறீர்கள் என்றும் கிறிஸ்துவிலும் அவருடைய அன்பையும் விசுவாசித்தால், இப்போது நீங்கள் செய்ய வேண்டியது எங்களோடு சேர்ந்து இந்த சிறிய ஜெபத்தை ஏறெடுங்கள்: "தேவனே நான் உமது வார்த்தைகளைக் கேட்க என் காதுகளைத் திறந்தருளும் உம்மையும் உம் சத்தியத்தையும் பார்க்க என் கண்களைத் திறந்தருளும், நீர் எனக்கு காண்பிக்கும் அனைத்திற்கும் என் இருதயத்தையும் திறந்தருளும். உம்முடைய உண்மையான அன்பைப் புரிந்துகொள்வதற்கும் உமது உண்மையான அன்பைப் பெறுவதற்கும், நீர் செய்வதைப்புரிந்துகொள்வதற்கும் உமது உண்மையான அன்பில் வாழவும் தகுதிப்படுத்தும். ஆமென். "

உங்களுக்கான தேவனுடைய அன்பு அளவற்ற அன்பாகும். அதை புரிந்துகொண்டு, அவருடைய உண்மையான அன்பை பெறுதல் மற்றும் விசுவசித்தலே, நாம் யார் என்பதற்கும் கிறிஸ்துவுடன் நமது உறவு என்ன என்பதற்கும் மற்றும் நமது வாழ்வின் ஒவ்வொரு பகுதிக்கும், நாம் செய்யும் அனைத்து விஷயங்களுக்கும் முக்யமானதாகவும் மற்றும் அடித்தளமாகவும் இருக்கும். மற்றும் நாம் நமக்கான அவரது அன்பில் ஒவ்வொரு தருணமும் நடக்க வேண்டும்.

நாள் 2நாள் 4

இந்த திட்டத்தைப் பற்றி

What Is True Love?

அன்பு என்றால் உண்மையாக என்ன என்று எல்லாரும் அறிய விரும்புகிறோம். ஆனால், அன்பை பற்றி பைபிள் என்ன சொல்லுகிறது என்று சிலர் தான் பார்கின்றனர். அன்பு என்பது வேதாகமத்தின் ஒரு மைய கருத்து, மற்றும் கிறிஸ்தவ வாழ்க்கையின் மிக முக்கியமான குணம். அன்பின் வேதாகம அர்த்தத்தையும், தேவனை மற்றும் மற்றவர்களை எப்படி நேசிப்பது என்றும் திசில்பென்ட் மினிஸ்ட்ரிஸின் இந்த திட்டம் ஆராய்கிறது.

More

இந்த திட்டத்தை வழங்குவதற்காக, திசில்பென்ட் மினிஸ்ட்ரிஸ் க்கு நன்றி தெரிவிக்கிறோம். மேலும் தகவல் அறிய, www.thistlebendministries.org க்கு செல்லவும்.