இயேசு ஏன் பிறந்தார்மாதிரி
ஆரம்பம்
தேவனுடைய குமாரனாகிய இயேசு கிறிஸ்துவின் சுவிசேஷத்தின் ஆரம்பம்.(மாற்கு1:1)
கிறிஸ்துவின் வருகை ஒரு புதிய ஆரம்பம். இவர் வருகை பிரபஞ்சத்திற்கு ஒரு புதிய ஆரம்பம். இன்று, மாற்கு இந்த ஆரம்பத்தை நமக்கு கொண்டு வருகிறார். இந்த முதல் வசனம் பெரிய தாக்கத்தை கொண்டுள்ளது. தனது கடுமையான பாணியில்-மாற்கு ஒருபோதும் வார்த்தைகளை வீணாக்குகிறவர் அல்ல-இந்த நற்செய்தியை தான், ஆரம்பம் என்று மாற்கு கூறுகிறார். பிறகு நாசரேத்தூரின் மனிதனாகிய இயேசுவை அடையாளம் காட்டி, உடனே அவர் தான் கிறிஸ்து, பூர்வத்தில் வாக்களிக்கப் பட்ட மேசியா என்று கூறுகிறார். பின்னர் அவர் தேவனின் சொந்த குமாரனுக்கு கீழானவர் அல்ல என்று கூறப்படுகிறது. ஒருவர் இந்த வார்த்தைகளை புரிந்து கொள்ள தன் வாழ்க்கை முழுவதையும் செலவிடலாம்.
இந்த ஆரம்பம் எவ்வளவு தூரம் வரை மாற்குவில் நீண்டுள்ளது என்பது உறுதியாக யாருக்கும் தெரியவில்லை. இந்த ஆரம்பம், முதல் அத்தியாயத்திற்கு மாத்திரமானதா? அத்தியாயத்தின் ஒரு பகுதியா? அல்லது முழு புத்தகமே ஆரம்பம் மட்டும் தானா? எதுவாயினும், இயேசு தெரிந்தெடுக்கப்பட்டவர், அபிஷேகம் பண்ணப்பட்டவர் என்ற உறுதியான வாக்குமூலத்தில் தொடங்குகிறது. அவர் இயேசு! அவர் தேவ குமாரன், ஆகையால் அவர் திரியேகத்தின் ஒருவரான, நித்தியமானவராகிய, மனிதனாக பிறந்த இயேசு என்று கண்டு கொள்ளுகிறோம்.
இது நற்செய்தி, ஏனெனில் நட்சத்திரங்கள் நிறைந்த அந்த இரவில் பெத்லேகேமில் பிறந்தவர் நம்மை மீட்க வல்லமையுள்ளவர் என்று கூறுகிறது. மீட்பு தான் நம் ஒவ்வொரொவருடைய கதையின் முடிவு. அது தேவ குமாரனாகிய இயேசுவில் தொடங்குகிறது
வேதவசனங்கள்
இந்த திட்டத்தைப் பற்றி
Why Jesus was born? இயேசு ஏன் பிறந்தார்? இது சிந்திப்பதற்கு மிகவும் எளிய கேள்வியாக தோன்றலாம். இந்த வருஷம் நீங்கள் கிறிஸ்து பிறப்பு நாட்களுக்கு ஆயத்தமாகும்போது, உங்கள் வாழ்க்கைக்கும், முழு உலகத்திற்குமான, இயேசு பிறப்பின் ஆழமான அர்த்தத்தையும், நோக்கத்தையும் சிந்தித்து பாருங்கள். இந்த 5 நாட்கள் தியானம் ஸ்காட் ஹோசி என்பவரால் எழுதப்பட்டது, மேலும் நம்பிக்கை வார்த்தை என்ற தியானத்தில் இருந்து எடுக்கப்பட்ட பகுதி.
More