இயேசு ஏன் பிறந்தார்மாதிரி

Why Jesus Was Born

5 ல் 5 நாள்

இயேசு ஏன் வந்தார்

பாவிகளை இரட்சிக்க கிறிஸ்து இயேசு உலகத்திற்கு வந்தார். (1 தீமோத்தேயு 1:15)

தீமோத்தேயு மற்றும் தீத்துவுக்கு எழுதிய கடிதங்கள் "போதக நிருபங்கள்" என்று அழைக்கப்படுகின்றன, ஏனெனில் பவுல், எபேசு மற்றும் கிரேத்தா தீவின் போதகர்களான, இந்த இளைஞர்களுக்கு எழுதினார். தீமோத்தேயுவும் தீத்துவும் இரண்டாம் தலைமுறை பிரசங்கிகளைப் பிரதிநிதித்துவப்படுத்தினர், மேலும் பவுல் அவர்களுக்கு நற்செய்தி பொறுப்பினை ஒப்படைக்கத் தயாரானபோது, ​​அவர் ஊக்கமளிக்கும் வார்த்தைகளை வழங்கினார்.

பவுல் இந்த இறுதிக் கடிதங்களை எழுதும் போது, ​​பல "விசுவாச வார்த்தைகள்" ஆரம்பகால தேவாலயத்தில் பரவ ஆரம்பித்தன. யாரிடமும் வேதாகமத்தின் நகல் அல்லது எழுதப்பட்ட பொருட்கள் எதுவும் இல்லாததால், ஒப்பீட்டளவில் சில வார்த்தைகளில் சுவிசேஷத்தை சுருக்கமாக மக்கள் மனப்பாடம் செய்ய வேண்டியிருந்தது. மூன்று போதக நிருபங்களிலும், பவுல் அந்த பிரபலமான சொற்களில் சிலவற்றைத் தனிமைப்படுத்தி, அவற்றுக்கு தனது அப்போஸ்தல முத்திரையை அளித்தார். 1 தீமோத்தேயுவின் இந்த ஆரம்ப பகுதியில், பவுல் அத்தகைய நன்கு அறியப்பட்ட ஒரு பழமொழியை மேற்கோள் காட்டுகிறார்: "கிறிஸ்து இயேசு பாவிகளை இரட்சிக்க உலகத்திற்கு வந்தார்."

நற்செய்தியின் சாராம்சமாக அந்த வார்த்தைகளை சுவைப்போம். கிறிஸ்மஸ் நேரத்தில் நாம் எவ்வளவு பாவிகள் என்று எப்போதும் நினைப்பதில்லை. விஷயங்களை மகிழ்ச்சியாகவும் பிரகாசமாகவும் வைத்திருக்க விரும்புகிறோம். ஆனால் பாவத்தினால் தான் இயேசு பெத்லகேமில் பிறந்தார். அதிலிருந்து நம்மைக் காப்பாற்றவே இயேசு பிறந்தார். அதுதான் கிறிஸ்துமஸ்.

நம்மில் சிலருக்கு "இயேசு ஜெபம்" தெரியும் மற்றும் அடிக்கடி ஜெபிப்போம். இது எளிமையானது: "கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவே, தேவனுடைய குமாரனே, பாவியான எனக்கு இரங்கும்." அத்தகைய இரக்கம் கிடைக்கும் என்பதை நாம் அறிவோம். ஏனெனில் "கிறிஸ்து இயேசு பாவிகளை இரட்சிக்க உலகத்தில் வந்தார்."


******

இந்த வேர்ட்ஸ் ஆஃப் ஹோப்பின் தியானம் மாத அட்வென்ட் தியான தொடரின் ஒரு பகுதியாகும். மேலும் படிக்க, வேர்ட்ஸ் ஆஃப் ஹோப் தியான பகுதியில் இன்றே இணையவும் !


வேதவசனங்கள்

நாள் 4

இந்த திட்டத்தைப் பற்றி

Why Jesus Was Born

Why Jesus was born? இயேசு ஏன் பிறந்தார்? இது சிந்திப்பதற்கு மிகவும் எளிய கேள்வியாக தோன்றலாம். இந்த வருஷம் நீங்கள் கிறிஸ்து பிறப்பு நாட்களுக்கு ஆயத்தமாகும்போது, உங்கள் வாழ்க்கைக்கும், முழு உலகத்திற்குமான, இயேசு பிறப்பின் ஆழமான அர்த்தத்தையும், நோக்கத்தையும் சிந்தித்து பாருங்கள். இந்த 5 நாட்கள் தியானம் ஸ்காட் ஹோசி என்பவரால் எழுதப்பட்டது, மேலும் நம்பிக்கை வார்த்தை என்ற தியானத்தில் இருந்து எடுக்கப்பட்ட பகுதி.

More

இந்தத் திட்டத்தைத்தந்த நம்பிக்கையின் வார்த்தைக்கு நன்றி. மேலும் விபரங்களுக்கு, தயவு செய்து செல்க: http://woh.org/youversion

சம்பந்தப்பட்ட திட்டங்கள்