இயேசு ஏன் பிறந்தார்மாதிரி
பிறப்பு
அவள் தன் முதற்பேறான குமாரனைப் பெற்றாள். (லூக்கா 2:7)
சிறிது காலமாகவாவது கிறிஸ்தவர்களாக இருப்பவர்களுக்கு, இந்த கதை தெரிந்ததுதான். இது தேவாலயங்களில் வைக்கப்படும் குடில் மற்றும் தொட்டில் காட்சிகளுக்கான தூண்டுதல்.நாம் அநேக வழிகளில், பொன்னிற ஒளியில் இதைக் காண்பித்தாலும், அது ஒரு சாதாரண பிறப்பு. இந்த பிரபஞ்சத்திற்கு வருவதற்கான ஒரு தாழ்மையான வழி. ஆனால் அதுதான் எல்லாவற்றிலும் முக்கியமானது. நம்மை உயர்த்த, தேவகுமாரன் தம்மை தாழ்த்தினார்.
எவ்வாறாயினும், லூக்கா இந்த காக்கும் சுவிசேஷ நிகழ்வை வடிவமைப்பதை கவனிக்க வேண்டும். லூக்கா 3ல் இன்னும் அவர் கவனமாக, அன்றைய ரோம படிநிலைகளை மிகவும் விபரமாக அவர் தருகிறார். அகஸ்து ராயன் தன்னை “டொமினஸ் இன் டியோ”, அல்லது “இறைவன் அல்லது கடவுள்” என்று பிரகடனப்படுத்திக் கொண்டான்”. அகுஸ்து ராயன், “குதி” என்று சொன்னால் “எவ்வளவு உயரம்?” என்றுதான் உலகம் பதிலளித்தது. சீசர், குய்ரினியஸ், ஏரோது, பொன்டியஸ் பிலாத்து, இவர்கள் சக்திவாய்ந்த மேல்மட்ட, அன்றைய அரசியல் பிரபலங்கள்.
ஆனால் லூக்கா, அவர்களின் பெயர்களை, துல்லியமான வரலாற்றை விட மேலான விஷயத்திற்காக குறிப்பிடுகிறார். இந்த உலக தலைவர்கள் ஆடம்பரமாய் சுற்றி திரிந்தாலும், அவர்கள் ஒருபோதும் இயேசுவின் அருகில் கூட வரமுடியாது. இறுதியில் வரலாற்று குப்பைத் தொட்டியில் அடிமண்ணாக சீசர் ஆகிவிடுவார். ஆனால் அந்த பெத்லகேம் குழந்தை, நித்திய இராஜாதி இராஜாவாகவும், கர்த்தாதி கர்த்தராகவும் வெளிப்படும். கடவுளுக்கு நன்றி
வேதவசனங்கள்
இந்த திட்டத்தைப் பற்றி
Why Jesus was born? இயேசு ஏன் பிறந்தார்? இது சிந்திப்பதற்கு மிகவும் எளிய கேள்வியாக தோன்றலாம். இந்த வருஷம் நீங்கள் கிறிஸ்து பிறப்பு நாட்களுக்கு ஆயத்தமாகும்போது, உங்கள் வாழ்க்கைக்கும், முழு உலகத்திற்குமான, இயேசு பிறப்பின் ஆழமான அர்த்தத்தையும், நோக்கத்தையும் சிந்தித்து பாருங்கள். இந்த 5 நாட்கள் தியானம் ஸ்காட் ஹோசி என்பவரால் எழுதப்பட்டது, மேலும் நம்பிக்கை வார்த்தை என்ற தியானத்தில் இருந்து எடுக்கப்பட்ட பகுதி.
More