இயேசு ஏன் பிறந்தார்மாதிரி
பிரகாசிக்கிறது
இருளில் ஒளி பிரகாசிக்கிறது. (யோவான் 1:5)
"நற்செய்தியின் ஆரம்பம்" என்பதை மாற்கு எப்படி நமக்கு அறிமுகப்படுத்தினார் என்பதை நாம் முன்பே பார்த்தோம். இன்று யோவான், ஆதியில் என்று தொடங்குவதன் மூலம், ஆதியாகமத்தின் தொடக்கத்திற்கு நம்மை கொண்டு செல்கிறார். யோவான் இயேசுவின் பிறப்பைப் பற்றிய எந்த விவரத்தையும் கொண்டிருக்கவில்லை என்றாலும், அந்த பிறப்புக்கான இறுதி சூழலை, பிரபஞ்சத்தைப் போலவே பரந்த கண்ணோட்டத்துடன் காட்டுகிறார் .
யோவான் கடவுளின் "வார்த்தை" பற்றி பேசுகிறார். கிரேக்க மொழியில் இது Logos என்ற சொல். கிரேக்கர்களுக்கு logos என்றால், இறுதி ஒழுங்கமைக்கும் கொள்கை என்ற அர்த்தமாகும். இங்கே, யோவான் அந்த யோசனையை மிக முக்கியமான மாற்றத்துடன் பயன்படுத்துகிறார். உண்மையான logos சில தெளிவற்ற பிரபஞ்ச சக்தி அல்ல. அது தேவ குமாரன், பிற்காலத்தில் நசரேயனான இயேசு.
ஆதியாகமம் 1ல் நாம் “ஒளி உண்டாகட்டும் . . . பூமி தாவரங்களை துளிர்க்கட்டும். . . ஜலங்கள் ஜீவராசிகளின் கூட்டங்களால் திரளட்டும். . ." என்று தேவனுடைய குமாரன் பேசினார் என்று வாசிக்கிறோம். பிதா, குமாரன் மற்றும் பரிசுத்த ஆவியானவர் பிரபஞ்சத்தின் படைப்பில் ஈடுபட்டு இருந்தனர், ஆனால் logos - கடவுளின் வார்த்தை தான் கட்டளைகளை வழங்குவது.
அவர்தான் பிரபஞ்சத்தின் உயிர். மேலும் அவர் பிரகாசிக்கும் ஒளி. ஃபிரடெரிக் டேல் ப்ரூனர் தனது யோவான் நற்செய்திவர்ணனையில், அந்த வினைச்சொல்லின் நிகழ்காலத்தை வலியுறுத்துகிறார்: ஒளி பிரகாசிக்கிறது. இது நடந்து கொண்டிருக்கும் செயல். அது ஒருபோதும் நிற்காது. தீமையின் இருள் அதை ஒருபோதும் அணைக்காது. சில சமயங்களில் இந்த உலகத்தின் இருள் அதிகமாகத் தோன்றும். ஆனால் இது ஒளிக்கு பொருந்தாது என்று நற்செய்தி சொல்கிறது!
வேதவசனங்கள்
இந்த திட்டத்தைப் பற்றி
Why Jesus was born? இயேசு ஏன் பிறந்தார்? இது சிந்திப்பதற்கு மிகவும் எளிய கேள்வியாக தோன்றலாம். இந்த வருஷம் நீங்கள் கிறிஸ்து பிறப்பு நாட்களுக்கு ஆயத்தமாகும்போது, உங்கள் வாழ்க்கைக்கும், முழு உலகத்திற்குமான, இயேசு பிறப்பின் ஆழமான அர்த்தத்தையும், நோக்கத்தையும் சிந்தித்து பாருங்கள். இந்த 5 நாட்கள் தியானம் ஸ்காட் ஹோசி என்பவரால் எழுதப்பட்டது, மேலும் நம்பிக்கை வார்த்தை என்ற தியானத்தில் இருந்து எடுக்கப்பட்ட பகுதி.
More