இயேசு ஏன் பிறந்தார்மாதிரி

Why Jesus Was Born

5 ல் 3 நாள்

உனக்காக

“இன்று கர்த்தராகிய கிறிஸ்து என்னும் இரட்சகர் உங்களுக்கு……. பிறந்திருக்கிறார்.” (‭‭லூக்கா‬ ‭2‬:‭11)‬

30 வருடங்களுக்கு முன் இந்த நாளில் தான் என் மகள் பிறந்தாள். ஞாயிற்றுக் கிழமை விடியற்காலையில் அவள் பிறந்ததால், அன்று எனக்கு பதிலாக இன்னொரு ஒய்வு பெற்ற போதகர் பிரசங்கம் செய்தார். ஆராதனையின் ஆரம்பத்தில், “கனம். ஹோசி மற்றும் ரோஸ்மேரிக்கு இன்று காலை பெண் குழந்தை பிறந்திருக்கிறது” என்று அறிவிக்கப்பட்டது. “இன்று காலை உங்களுக்கு பெண் குழந்தை பிறந்திருக்கிறது” என்று அவர் சபையில் அறிவித்திருந்தால், அது எவ்வளவு விந்தையாக இருந்திருக்கும். என் மகள் எனக்கும் என் மனைவிக்கும் பிறந்தவள். அவள் முழு சபைக்கோ ்அல்லது வேறு யாருக்கோ பிறந்தவள் அல்ல.

ஆனால், அது தான் பிரமித்து நடுங்கி கொண்டிருந்த மேய்ப்பர்களிடம் சொல்லப் பட்டது: உங்களுக்கு ஒரு இரட்சகர் பிறந்திருக்கிறார். அது எப்படி அர்த்தமுள்ளதாக இருக்கும்? அது மரியாள் மற்றும் யோசேப்பின் குழந்தையும் தான் (வழக்கமான அர்த்தத்தில் இல்லையென்றாலும்). ஆனால், அது மேய்ப்பர்களின் குழந்தை அல்ல. அவர்கள் அந்த குழந்தையின் அரைக்கச்சையை மாற்ற மாட்டார்கள். அதற்கு உணவளித்து வளர்க்க மாட்டார்கள். அவர்கள் அந்த குழந்தையை பார்த்துவிட்டு, தங்கள் மந்தைக்கு திரும்பி செல்வார்கள்.

இயேசு சாதாரண குழந்தை இல்லை என்பதை தவிர. அவர் எல்லாருக்காகவும் வந்தார். அவர் நம்மெல்லாருக்காகவும் பிறந்தார். அவர், அந்த மேய்ப்பவர்களின் குழந்தை அல்ல, இரட்சகர். அவர், அந்த நாட்களில் ஒதுக்கப்பட்ட, தாழ்ந்த, இழிந்த நிலையிலுள்ள, “உங்களுக்காக” வந்தார். நாம் மிக எளிதாக இந்த வார்த்தைகளை கடந்து போய்விடுகிறோம். ஆனால் சுவிசேஷத்தின் சாராம்சம் இந்த வார்த்தைகளில் இருக்கிறது!

வேதவசனங்கள்

நாள் 2நாள் 4

இந்த திட்டத்தைப் பற்றி

Why Jesus Was Born

Why Jesus was born? இயேசு ஏன் பிறந்தார்? இது சிந்திப்பதற்கு மிகவும் எளிய கேள்வியாக தோன்றலாம். இந்த வருஷம் நீங்கள் கிறிஸ்து பிறப்பு நாட்களுக்கு ஆயத்தமாகும்போது, உங்கள் வாழ்க்கைக்கும், முழு உலகத்திற்குமான, இயேசு பிறப்பின் ஆழமான அர்த்தத்தையும், நோக்கத்தையும் சிந்தித்து பாருங்கள். இந்த 5 நாட்கள் தியானம் ஸ்காட் ஹோசி என்பவரால் எழுதப்பட்டது, மேலும் நம்பிக்கை வார்த்தை என்ற தியானத்தில் இருந்து எடுக்கப்பட்ட பகுதி.

More

இந்தத் திட்டத்தைத்தந்த நம்பிக்கையின் வார்த்தைக்கு நன்றி. மேலும் விபரங்களுக்கு, தயவு செய்து செல்க: http://woh.org/youversion

சம்பந்தப்பட்ட திட்டங்கள்