இயேசுவைபோல நேசியுங்கள்மாதிரி
தேவனின் பணி
கர்த்தர் ஒரு பணி மேற்கொண்டிருக்கிறார். இது உறுதியாக எனக்குத் தெரியும். கர்த்தர் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக வேதாகம பதிவுகளில் குறிப்பிட்டிருப்பதைப் போலவே இன்றும் உயிரோடு இருக்கிறார், ஈடுபடுகிறார், வேலை செய்கிறார். ஆரம்பத்தில், அவர் எல்லாவற்றையும் நல்லிணக்கம், வடிவம் மற்றும் அழகின் சீரான நிலையில் படைத்தார். இருப்பினும், அவருடைய படைப்பின் உச்சம் தெய்வீக நெருக்கத்தை நிராகரித்தது. அப்போதிருந்து, கர்த்தர் நம்மை நயந்து வருகிறார். இது கடைசி காதல் கதை. நாம் விழுந்து விடும்போது கர்த்தர் உறைந்த ஏரிக்குள் மூள்குகிறார். நாம் உள்ளே சிக்கிக்கொண்டிருக்கும்போது அவர் எரியும் கட்டிடத்திற்குள் ஓடுகிறார். நம்முடைய சொந்த பயம், வெறுப்பு, அவமானம், அல்லது பாதுகாப்பின்மை ஆகியவற்றிற்குள் நம்மை தனிமையாக இருத்திக் கொள்ளும் போது அவர் நம் இதயங்களின் வலிமையான சுவர்களை உருக்குகிறார். ஆனால் மிகச் சிறந்த அம்சம் என்னவென்றால், இந்த நம்பிக்கையின் பணியில் அவருடன் சேர அவர் நம்மை அழைக்கிறார்.
நாங்கள் ஒரு காலத்தில் கர்த்தரின் எதிரியாக இருந்தோம், பல போலியான கடவுள்களையும் தெரிந்தெடுத்தோம். அவர் நம்மை மிகவும் நேசித்ததால் தனது ஒரே மகனை அனுப்பி வைத்தார். அவருடைய எதிரியான எங்களுக்காக. இது எங்களுக்கு ஏற்படுத்தப்பட்ட உதாரணம். எங்கள் நம்பிக்கையும், சேர அழைக்கப்பட்ட பணியும் நம் எதிரிகளை நேசிப்பதே ஆகும். இதுதான் நாம் எப்போதும் செய்யத்தக்க உயர்ந்த சுவிசேஷ காரியம். இது சொற்களை விடவும் செயல்களை விடவும் மேன்மையானது. இது கர்த்தரின் பணியில் பங்கேற்கும் ஒரு வாழ்க்கை முறை. மக்கள் போராடாமல் இருக்க போதுமான சுய கட்டுப்பாடு, ஒற்றுமையைக் காண தேவையான இரக்கம், பலவீனத்தின் ஆற்றலை உணரப் போதுமான மனத்தாழ்மை ஆகியவற்றைக் கொண்ட ஒரு இயக்கத்தை பார்த்த பின்னர் உலகம் கிறிஸ்துவை அவரது உண்மையான வடிவமாகிய - சிலுவை மீது அறிந்து கொள்ளும்.
ஜோயீ ஆம்ஸ்ட்ராங்
Life.Church Broken Arrow
வேதவசனங்கள்
இந்த திட்டத்தைப் பற்றி
நாம் இயேசுவை முதலாவது நேசிக்காமல் அவரைப்போல வாழ எப்படி கற்றுக்கொள்ளமுடியும்? Life.Church ஊழியர்கள் மற்றும் அவர்கள் தம்பதிகளோடு சேர்ந்து வாசியுங்கள். இதன்மூலம் இயேசுவைபோல் வாழவும் நேசிக்கவும் அவர்களை ஊக்குவிக்கும் வேதவசனங்களையும் அனுபவங்களையும் தெரிந்துகொள்வீர்கள்.
More