இயேசுவைபோல நேசியுங்கள்மாதிரி
வங்கியில் வரிசையில் காத்திருப்பது
நான் எப்போதும் சமூக அந்தஸ்தால் குழப்பமடைவதுண்டு. மனிதர்களாகிய நாம் ஏன் மற்றவர்களை விட்டுவிட்டு சிலரை மட்டும் உயர்த்துகிறோம்? ஒரு சமூகத்தில் மேலிடத்தில் உள்ள ஒருவரின் இடத்தை பாதிக்க பல காரணிகள் இருக்கலாம்: புகழ், செல்வம், திறன்கள், அழகு, ஆளுமை, சிறப்பு, பாரம்பரியம் போன்றவை.
உயர்நிலைப் பள்ளியின் போது தான் நான் பிரபலத்தின் பல்வேறு நிலைகளை முதன்முதலில் கவனித்தேன், ஆனால் மக்கள் கூட்டம் சிலரை ஒருமனதாகப் ஏற்பதையும் மற்றவர்களை புறக்கணிப்பதையும் நான் தொடர்ந்து இளமைப் பருவத்திலும் கவனிக்கிறேன். நாமே படிமுறைப்படுத்தி சிலரை முதலிடத்திலும் மற்றவர்களை கடைசியிலும் வைக்கிறோம்.
ஒரு பெரிய நகரத்திற்கு நான் சென்ற முதல் ஆண்டில், முட்டாள்தனமாக ஒரு சனிக்கிழமையன்று தானியக்க வங்கி இயந்திரம் ATM சென்றேன். நான் விரும்பும் ஒரு நபரை சந்திக்கச் சென்று கொண்டிருந்த வழியில், தங்களது வார இறுதி செலவுக்கு பணம் தேவைப்படும் பொறுமையற்ற நபர்களின் நீண்ட வரிசையில் நானும் இடம் பிடித்தேன். சிந்தனையை சிதற விட்ட நான், முன்புறத்தில் நின்றிருந்த சுமார் எட்டு பேர் நடுவில் வளர்ந்து வரும் குழப்பத்தை உடனடியாக கவனிக்கவில்லை. எவ்வாறாயினும், சோகம் கலந்த ஒரு சாபச்சொல் என் கவனத்தை ஈர்த்தது, சுருள்முடி கொண்ட ஒரு பெண் தன் உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்த முடியாமல், அவளது பரிவர்த்தனையை முடிக்கவும் முடியாமல் போராடுவதை அறிந்தேன். நான் அந்தப் பெண்ணை முறைத்துப் பார்த்தேன், பின்னர் எனக்கு முன்னும் பின்னும் வரிசையில் உள்ளவர்களைப் பார்த்தேன். எல்லோரும் பணிவுடன் (அல்லது வெறுமனே பொறுமையின்றி) அவளை பார்ப்பதை தவிர்த்தனர், மேலும் நெருக்கடியில் இருக்கும் அந்தப் பெண்ணை புறக்கணித்தனர். அந்த பெண்மணி தனது பரிவர்த்தனையை ரத்துசெய்தார், பின்னர் எங்கள் அனைவரிடமும் திரும்பி, “என் தந்தை காலமானார்” என்றார். இது ஒரு மன்னிப்பு என்பதை விட ஒரு விளக்கமாகவே அமைந்தது.. அவளுக்கு எந்த பதிலும் கிடைக்காதபோது, அவள் திரும்பி, இன்னும் அழுது கொண்டே, வாகன நிறுத்துமிடத்திற்கு சென்றாள். யாராவது உண்மையிலேயே ஏதாவது செய்ய வேண்டும் என்று நினைத்து, யாராவது உதவி செய்வார்களாவென்று நான் சுற்றிலும் பார்த்தேன். வளர்ந்து வரும் வரிசையில் எனது இடத்தை நான் இழக்க விரும்பாததால் என் சொந்தக் கால்களே உறுதியாக நிலைப்பட்டிருக்கிறதென்று அறிந்து என் மேலேயே எனக்கு வெறுப்பு ஏற்பட்டது.
இயேசு நம்மை அழைக்கும் விதமாக மக்களை நேசிப்பதை விட எத்தனை முறை நம்முடைய சொந்த செயல்திட்டங்களுக்கு முன்னுரிமை அளிக்கிறோம்? கிறிஸ்துவுக்கு விலைமதிப்பற்றவர்களின் மதிப்பை மேலோட்டமாக தீர்மானித்து எவ்வளவு அடிக்கடி நாம் அவர்களை புறக்கணிக்கிறோம். ஏடிஎம்மில் இருந்தும் நான் அந்த தருணத்தில் எங்கோ, யாரோ ஒருவரை ஈர்க்கும் பாதையில் இருந்தேன். இந்த பெண் எனக்கு ஒரு பொருட்டல்ல, அவளுக்கு கொடுக்க எனக்கு நேரமில்லை என்று சுயநலமாக உணர்ந்தேன். ஆனால், வசதியாக இருக்கும்போது மட்டுமே அவரைச் சேவிக்கும்படி கிறிஸ்து நம்மை அழைக்கவில்லை. நம் கவனத்திற்கு தகுதியானவர்கள் என்று நாம் கருதுகிறவர்களை மட்டுமே சேவிக்க நம்மை பணிக்கவில்லை. அவர் நம் முன்னுரிமைகளை தலைகீழாக புரட்டுவார் - உலாவும் இசைவிருந்து ராணி முதல் ஆபாச நட்சத்திரம் அல்லது விளையாட்டு வீரருக்கு அடிமையானவர் வரை - நம் மேலோட்டமான விவரங்கள் இவ்வாறு இருந்தாலும், முந்தினோர் பிந்தினோராயும், பிந்தினோர் முந்தினோராயும் இருப்பார்கள் என்று அறிவிப்பார்.
துக்கமடைந்த பெண் இப்போது தனது காரைத் திறக்க சிரமப்பட்டாள், நான் என்னை அறியாமலேயே அவளை நோக்கி ஓடினேன். என் இதயம் அவள் மீது இரக்கத்தால் நிரம்பியதால் அவள் என் முன்னுரிமையாகிவிட்டாள். அவளுடைய ஆச்சரியம் நிறைந்த பார்வையில், "உங்கள் இழப்புக்கு நான் மிகவும் வருந்துகிறேன்" என்று உண்மையுடன் கூறினேன். அவள் முகம் மீண்டும் சுருங்கியது, நான் அவளைக் கட்டிப்பிடிக்கும்போது அவள் கசந்து அழுதாள். அவள் ஒரு நிமிடம் கழித்து அமைதியாகி விட்டாள், அவள் தன் காரில் ஏறிச் செல்வதற்கு முன் அமைதியுடன் எனக்கு நன்றி சொன்னாள். நான் ஏடிஎம் திரும்பினேன், அங்கு மக்கள் கூட்டம் தங்களது கைபேசிகளை மும்முரமாகப் பற்றிக் கொண்டு என்னை தீவிரமாக அலட்சியப்படுத்தியது.
நான் வரிசையின் பின்புறத்தில் என் இடத்தைப் பிடித்தேன்.
பெத் காசில்
Life.Church Creative Media குழு (வாழ்க்கைத்துணை)
வேதவசனங்கள்
இந்த திட்டத்தைப் பற்றி
நாம் இயேசுவை முதலாவது நேசிக்காமல் அவரைப்போல வாழ எப்படி கற்றுக்கொள்ளமுடியும்? Life.Church ஊழியர்கள் மற்றும் அவர்கள் தம்பதிகளோடு சேர்ந்து வாசியுங்கள். இதன்மூலம் இயேசுவைபோல் வாழவும் நேசிக்கவும் அவர்களை ஊக்குவிக்கும் வேதவசனங்களையும் அனுபவங்களையும் தெரிந்துகொள்வீர்கள்.
More