இயேசுவைபோல நேசியுங்கள்மாதிரி

Love Like Jesus

13 ல் 12 நாள்

இதை எனக்காக செய்தாய்

பிப்ரவரி மாதத்தின் அந்த குளிர்ச்சியான மாலை நேரத்தில் ஒரு நாள் எங்கள் வீட்டிற்கு அருகில் காரில் வந்து கொண்டிருந்தோம். ரோட்டின் ஓரத்தில் ஒரு இளம் பெண் கையில்லாத சட்டை ஒன்றும் கால் சட்டையும் அணிந்து கொண்டு பரிதாபமாக அழுது கொண்டிருந்தாள். நாங்கள் காரை நிறுத்தி, நான் வெளியேறி, அந்த பெண்ணிடம் சென்று, "நான் உனக்கு எப்படி உதவட்டும்?" என்று கேட்டேன்.

"அவன் என்னை வெளியே தள்ளிவிட்டான். நான் கர்ப்பமாக இருக்கிறேன், என்னை என் காதலன் வெளியே தள்ளிவிட்டான்.” என்று முணுமுணுத்தாள்.

நான் என்ன சொல்வது என்று யோசிக்கையில், எனக்கு தோன்றிய ஒரே சிந்தனை, அவள் ஒரு மனுஷி, அவளுக்கு மரியாதை காட்டு. எனவே, "உன் பெயர் என்ன?" என்று கேட்டேன்.

"பிரிட்னி" என்றாள்.

"உன்னை சந்தித்ததில் மகிழ்ச்சி, பிரிட்னி. நீங்கள் செல்லும் இடத்திற்கு உங்களை கொண்டு விட விரும்புகிறீர்களா?”

“ஆம், என் பாட்டி அருகில் வாழ்கிறார்கள்." என்று சொன்னாள்.

நாங்கள் காருக்கு நடந்து சென்றோம், என் கணவர் எங்கள் இரு பிள்ளைகளுடன் காரின் பின் இருக்கைக்கு உட்கார சென்றார். எங்கள் பிள்ளைகள் இருவரும் ஆச்சரியத்தில் மூள்கி உட்கார்ந்திருந்தனர். ஒரு நொடியில், பிரிட்னியை அனேக ஆண்டுகள் நான் அறிந்தது போல, என் குடும்பத்தை அவளுக்கு அறிமுகம் செய்தேன்.

“பிரிட்னி, நான் உனக்கு சில துணிகளை கொடுக்கட்டுமா? நான் வீட்டுக்கு சென்று உடனே கொண்டு வருகிறேன். ”

“ஆம், எனக்கு ரொம்ப குளிருகிறது.”

என் வீட்டுக்கு முன் காரை நிறுத்தி விட்டு உள்ளே சென்றேன். நான் எதிர்பாராத விதமாக, என் பின்னே வந்தாள் பிரிட்னி. ஒரு நீண்ட கை கொண்ட சட்டையையும், கம்பிளி காற்சட்டைகளையும், செருப்புகளையும் எடுத்தேன். அவற்றை அவளிடம் கொடுத்தேன், அவள் பாத்ரூமுக்கு உடையை மாற்ற சென்றாள்.

அவளது பாட்டியின் வீட்டுக்கு அழைத்து சென்று அவளை வாழ்த்தி விடைப்பெற்றோம். வீடு திரும்பும் வழியில், என்ன நடந்தது என்று எங்கள் பிள்ளைகள் விசாரித்தனர். "நாம் இதனை செய்ய வேண்டும் என்று தான் இயேசு விரும்புகிறார் என்று நம்புகிறேன்" என்று மட்டும் சொன்னேன். அவர்களும் ஒப்புக்கொண்டார்கள். அந்த நாளின் மற்ற காரியங்களை தொடர்ந்தோம்.

அடுத்த நாள் காலையில், நான் என் தியான புத்தகத்தை தற்செயலாக படித்துக்கொண்டிருக்கும் போது, அந்த பக்கத்திலுள்ள வார்த்தைகள் குதித்து எழும்பினது போல் இருந்தது, “நான் நிர்வாணியாய் இருந்தேன், எனக்கு ஆடை கொடுத்தீர்கள்” கடந்த நாளின் நிகழ்ச்சிகளை நினைத்து என் இதயம் படபடத்தது.

இயேசுவை போல நேசிப்பதற்கான வாய்ப்புகள் எப்போதும், எங்கேயும் ஏற்படலாம். இயேசுவின் பெயரை கூட சொல்லாமல், தெருவில் இருக்கும் அறிமுகமற்றவரையும் இயேசுவைப் போல நேசிக்கலாம். பிரிட்னி இயேசுவை சந்திக்கும் போது, ஒரு குளிரான பிப்ரவரி மாலையில் தன் பாட்டிவீட்டிற்கு செல்லும் வழியில் எதிர்கொண்ட ஒருவராக அவரை அடையாளம் கண்டு கொள்வாள் என்று நான் ஜெபிக்கிறேன்.

டாஷா சலினாஸ்
Life.Church Midwest City

வேதவசனங்கள்

நாள் 11நாள் 13

இந்த திட்டத்தைப் பற்றி

Love Like Jesus

நாம் இயேசுவை முதலாவது நேசிக்காமல் அவரைப்போல வாழ எப்படி கற்றுக்கொள்ளமுடியும்? Life.Church ஊழியர்கள் மற்றும் அவர்கள் தம்பதிகளோடு சேர்ந்து வாசியுங்கள். இதன்மூலம் இயேசுவைபோல் வாழவும் நேசிக்கவும் அவர்களை ஊக்குவிக்கும் வேதவசனங்களையும் அனுபவங்களையும் தெரிந்துகொள்வீர்கள்.

More

இந்த திட்டத்தை வழங்கும் Life.Church க்கு எங்கள் நன்றியை தெரிவித்து கொள்கிறோம். மேலும் தகவல் அறிய www.life.church க்கு செல்லவும்.