இயேசுவைபோல நேசியுங்கள்மாதிரி
கிறிஸ்து சபையை நேசிப்பதுபோல் (பகுதி 1)
ஒரு சிறு பிள்ளையாக, நான் என் திருமணத்தைக் குறித்து கனவு கண்டுள்ளேன் - திருமண கேக், திருமண ஆடை, நான் திருமணம் செய்யவிருந்த அந்த நபர். அந்த விசேஷித்த நாளை குறித்து நீ கனவு காணும்போது, அந்த நாளிற்குப் பிறகு வரும் சோதனைகளை குறித்து நீ யோசிப்பதில்லை.
நான் பிறப்பதற்கு முன், என் தாயார் ஒரு அதிக கொடூரமான மூட்டுவலி வியாதியினால் தாக்கப்பட்டார்கள். ஒவ்வொரு நாளும் அவர்களுக்கு ஒரு சவாலாக இருந்தது. என் தகப்பனார் அவர்களை ஒவ்வொருநாளும் நேசித்து சேவை செய்ய முடிவு செய்தார். சில நாட்கள் அவர்களுக்கு காலை உணவை சமைப்பதும் அவர்களுடைய செருப்பின் வாரை கட்டி விடுவதும் கூட செய்வார். என்ன வேலையாக இருந்தாலும் என் தகப்பனார் என் தாயை நேசித்தார். அநேக ஆண்டுகளுக்கு பின்னால், என் தாயார் மற்றொரு வியாதி - Hodgkin’s Lymphoma-வினால் வாதிக்கப்பட்டபோதும் என் தகப்பனார் அவர்களை அன்புடன் சேவித்தும் ஜெபித்தும் காலத்தை செலவிடுவதை கண்டேன். அவர் சரீரப்பிரகாரமாகவும், ஆவிக்குரிய பிரகாரமாகவும் அதிக சோர்வடைந்திருந்தும் அவர் தொடர்ந்து உதவி செய்து வந்தார். அதுதான் கிறிஸ்துவுக்கும் என் தாயாருக்கும் அவர்கொண்ட அர்ப்பணிப்பாக இருந்தது.
நானும் என் கணவரும் திருமணமான சில நாட்களிலேயே, எந்த திருமணமும் சந்திக்ககூடாத சோதனைகளை சந்தித்தோம். எந்த கிரியை எங்களுக்கு அதிக சந்தோஷத்தை கொண்டுவந்ததோ அதுவே இப்போது எங்களுக்கு வலியையும் கண்ணீரையும் கொண்டுவந்தது. ஒவ்வொரு முறையும் நான் அழுது கொண்டே தூங்கி விடுவேன். வலி, நெருக்கமின்மை, மனைவியாக நான் தோல்வியடைந்த எண்ணம் எங்களுக்கு நடுவில் ஒரு விரிசலை ஏற்படுத்தியது.
இவைகள் கடினமான நாட்களாக துவங்கி வருடங்களாக மாறி, இனி இது முடிவடையாது என்று எங்களை நினைக்க தூண்டியது. என் கணவர் என் பக்கத்தில் நின்றார். எல்லா புண்படுத்தும் உணர்வுகளையும் தள்ளிவிட்டு நான் இருந்த வண்ணமே அவர் என்னை நேசிக்க துவங்கினார். வலி மற்றும் கண்ணீரின் மத்தியிலும் என்னை நேசித்தார். இன்று அவர் இன்னும் என்னை நேசிக்கிறார். பெண்கள் அவர்களுடைய தகப்பனின் குணங்களைக் கொண்ட கணவர்களையே தேடுவார்களென்று மக்கள் சொல்வார்கள். இன்று என் தகப்பனைப் போல் என்னை நேசிக்கும் கணவரை கண்டுபிடித்ததால் நான் நன்றியுள்ளவளாக இருக்கிறேன். அவர் இயேசுவைப் போல என்னை நேசிக்கிறார்.
Shelley Martin
Life.Church IT Team
வேதவசனங்கள்
இந்த திட்டத்தைப் பற்றி
நாம் இயேசுவை முதலாவது நேசிக்காமல் அவரைப்போல வாழ எப்படி கற்றுக்கொள்ளமுடியும்? Life.Church ஊழியர்கள் மற்றும் அவர்கள் தம்பதிகளோடு சேர்ந்து வாசியுங்கள். இதன்மூலம் இயேசுவைபோல் வாழவும் நேசிக்கவும் அவர்களை ஊக்குவிக்கும் வேதவசனங்களையும் அனுபவங்களையும் தெரிந்துகொள்வீர்கள்.
More