இயேசுவைபோல நேசியுங்கள்மாதிரி
![Love Like Jesus](/_next/image?url=https%3A%2F%2Fimageproxy.youversionapi.com%2Fhttps%3A%2F%2Fs3.amazonaws.com%2Fyvplans%2F2391%2F1280x720.jpg&w=3840&q=75)
உடைந்தவர்களை நேசிப்பது
நான் உடைந்த ஒரு குடும்பத்தில் வளர்ந்தேன். போதைமருந்துகள், மது மற்றும் உடல்ரீதியான துஷ்பிரயோகம் சாதாரணமாகவும் எதிர்பாக்கப்பட்டதாகவும் இருந்தன. நான் ஒவ்வொருநாளும் சந்தித்த இந்த பழக்கங்களை நானும் உள்வாங்கிக்கொள்ள அநேக நாள் தேவைப்படவில்லை. நானே அறிவதற்கு முன், நான் குடிக்கவும், என் மாற்றாந் தகப்பனின் போதை பொருட்களை திருடி விற்கவும் உட்கொள்ளவும் தொடங்கினேன். ஒரு இரவு குடித்து வெறித்து அடுத்த நாள் காலை 7 மணிக்கு வீட்டிற்கு நடந்து வந்ததை நினைவுகூருகிறேன். முகக் கண்ணாடியில் என்னை முறைத்துப் பார்க்கும் நபரை நான் பார்த்து கவலை அடைந்தேன். என்னை நானே வெறுக்கும் ஒரு நபராக மாறி இருந்தேன் - நான் நிச்சயம் எப்படி இருக்கக்கூடாது என்று உறுதிபூண்டிருந்தேனோ அதைப் போலவே. ஆனால் சீக்கிரமாக அதை சரியென்று நியாயப்படுத்தி இப்படித்தான் என் வாழ்க்கை அமையவேண்டும் என்று சொல்லிக்கொண்டு நான் திரும்பவும் அதே வாழ்க்கையை நடத்தினேன். "இது மட்டுமே இச்சிறிய கிராமத்தில் கிடைக்கக் கூடியவை" என்று என்னிடமே சொல்லிக் கொண்டேன், "செய்வதற்கு வேறென்ன தான் உள்ளது?"
இந்த நேரங்களில் என் பாட்டி என்னை ஆலயத்திற்கு அழைப்பதில் விடாப்பிடியாக இருந்தார்கள். சில வார கடைசிகளில் அவர்கள் அழைப்பிற்கு விட்டுக்கொடுத்து அந்த வாரங்களில் குடித்து வெறிக்காமல் இருப்பேன், களியாட்டங்களில் கலந்துகொள்ளாமல் இருப்பேன். நான் ஒரு சிறிய நகரத்தில் வசித்தேன். அப்படிப்பட்ட இடத்தில் எல்லோரும் மற்றவர்களை குறித்தது அவர்கள் செயல்களை குறித்து அறிந்திருப்பார்கள். என் பாட்டியும் என்னுடைய போதை மருந்து பழக்கத்தை குறித்து அறிந்திருந்தார்கள், இயேசு தன அன்பையும் எனக்காக கொண்டிருக்கும் திட்டங்களையும் எனக்கு வெளிப்படுத்த வேண்டும் என்றும் ஜெபித்துக்கொண்டிருந்தார்கள். அவைகள் எனக்கு எல்லாவற்றை காட்டிலும் அதிக நம்பிக்கை கொடுக்க கூடியவைகளாக மாறின.
வீட்டு நிலைமை மோசமாகி கொண்டிருந்தது. துஷ்பிரயோகம் இன்னும் அதிகரித்தது. நான் திரும்பி பார்க்கும்போது தேவன் நடப்புகளை எவ்வளவு அற்புதவிதமாக நடத்தினார் என்று பார்க்கமுடியும். என் பாட்டியின் அன்பானது என் தவறுகளை மீறியும் என்னை நேசிக்கும் தன்மை கொண்டதாக இருந்தது இது என்னை ஈர்த்தது. அது என்னை தங்கள் குடும்பத்திற்குள்ளாக ஏற்றுக்கொண்ட ஒரு குடும்பத்திற்கு என்னை வழிநடத்தியது. ஒரு வழிதவறிய வாலிபனின் வாழ்க்கையை புரிந்து ஏற்றுக்கொண்டார்கள். அவர்களுடைய அன்பு, அரவணைக்கும்தன்மை மூலமாக. நான் என்மேல் கிறிஸ்துவைத்த அன்பை கண்டேன். அந்த அன்பின் நிமித்தமாக இன்று நான் ஒரு மாறிய மனிதனாக இருக்கிறேன் - ஒரு அற்புதமான திருமணம், நான் அறியாத அன்பை அறிந்து வளரும் பிள்ளைகள். இவைகளெல்லாம் என்வசம் ஆனது ஏனென்றால் சிலரால்இயேசுவை போல நேசிக்க முடிந்ததினால்
Danny Duran
Life.Church Overland Park
வேதவசனங்கள்
இந்த திட்டத்தைப் பற்றி
![Love Like Jesus](/_next/image?url=https%3A%2F%2Fimageproxy.youversionapi.com%2Fhttps%3A%2F%2Fs3.amazonaws.com%2Fyvplans%2F2391%2F1280x720.jpg&w=3840&q=75)
நாம் இயேசுவை முதலாவது நேசிக்காமல் அவரைப்போல வாழ எப்படி கற்றுக்கொள்ளமுடியும்? Life.Church ஊழியர்கள் மற்றும் அவர்கள் தம்பதிகளோடு சேர்ந்து வாசியுங்கள். இதன்மூலம் இயேசுவைபோல் வாழவும் நேசிக்கவும் அவர்களை ஊக்குவிக்கும் வேதவசனங்களையும் அனுபவங்களையும் தெரிந்துகொள்வீர்கள்.
More