இயேசுவைபோல நேசியுங்கள்மாதிரி

Love Like Jesus

13 ல் 4 நாள்

வேதனையின் நோக்கம்

சில ஆண்டுகளுக்கு முன்பு, எங்கள் குடும்பத்தைத் தொடங்க நாங்கள் சிரமப்பட்டபோது, நானும் என் மனைவியும் மன நெகிழ்வு மற்றும் வேதனையின் பயணத்தில் இருந்தோம். நண்பர்கள் தங்கள் முதல் குழந்தையைப் பெற்றனர், பின்னர் இரண்டாவது குழந்தை ... நாங்கள் ஏன் கர்ப்பமாக முடியவில்லை என்று கர்த்தரிடம் கேட்டுக்கொண்டிருந்தோம். நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு, எங்கள் கருவுறாமைக்கான பயணம் ஒரு பெரிய திட்டத்தின் பகுதியாக இருந்தது என்பதை நிச்சயமாகக் காண முடிந்தது. இது நாம் நினைத்ததை விட மிக அதிகமானது. ஆனால் அந்த அதிசயத்திற்கு முன்பு, வேதனை வழியே நம்மை எது நடத்தியது? நமது LifeGroup

அவர்கள் இயேசுவைப் போல எங்களை நேசித்தார்கள், ஒவ்வொரு நாளும் வேதனையையும் ஏமாற்றத்தையும் சுமப்பதில் எங்களுடன் சேர்ந்து கொண்டனர். சங்கீதம் 34:18ஐ அவர்கள் எங்களுக்கு உறுதியாக நிரூபித்துக் காட்டினர். பரிசுத்த ஆவியானவர் எங்கள் LifeGroupல் அசைவாடியபோது ஒவ்வொரு படியிலும் கர்த்தரின் ஆறுதலை அனுபவித்தோம்.

அவர்களின் ஆதரவின் காரணமாக, நாங்கள் எங்கள் போராட்டத்தை பகிரங்கமாக பகிர்ந்து கொண்டோம். இந்தக் கட்டத்தில் தாங்கள் தனியாக இருப்பதாக நினைத்த மற்ற ஜோடிகளுடன் கர்த்தரின் நம்பிக்கையின் செய்தியைப் பகிர்ந்து கொள்ள முடிந்தது. ஆனால் கர்த்தர் அத்துடன் நிறுத்தவில்லை. செயற்கை கருத்தரிப்பிற்காக பணத்தை மிச்சப்படுத்தவும், உரிமம் பெற்ற வளர்ப்பு பெற்றோராக மாற முயன்றும், ஒரு குழந்தையைப் பெற நான்கு வருடங்கள் முயற்சித்தபின், எங்கள் குடும்பத்திலிருந்து கிட்டத்தட்ட 16 மணிநேர தூரத்தில் ஒரு புதிய வேலைக்கான கதவைத் திறப்பதற்கு முன்பே, கர்த்தர் எங்கள் ஜெபங்களுக்கு பதிலளித்தார்.

ஒரு நொடியில், எல்லாம் மாறியது. என் மனைவி கர்ப்பமானாள்! சில குறுகிய மாதங்களுக்குப் பிறகு, எங்கள் அருமையான குழந்தை எம்மா இந்த உலகத்திற்குள் வந்தாள், நாங்கள் சொன்ன முதல் நபர்களில் சிலர் யார் என்று யூகிக்கிறீர்களா? எங்கள் LifeGroup. எங்களால் தனியாக சமாளிக்க முடியாதபோது சுமையையும் வேதனையையும் சுமந்தவர்கள் அவர்களே, நாங்கள் அதிகம் கொண்டாடியவர்களும் அவர்களே!

இன்று நீங்கள் எதை எதிர்த்து நிற்கிறீர்கள்? நீங்கள் தனிமையாக உணர்ந்தால், இது உண்மையாக இருக்க முடியாது என்பதை அறிந்து கொள்ளுங்கள், ஏனென்றால் கிறிஸ்து நம்முடன் ஒவ்வொரு அடியிலும் நடந்து, மூலோபாய ரீதியாக மக்களை நம் வாழ்வில் ஒரு காரணத்திற்காக வைப்பார். நாம் அனுபவிக்கும் எந்த வேதனையின் தருணமும், நாம் அதை முதல் முதலாக அனுபவிப்பரல்ல, கடைசியானவருமாக இருக்க மாட்டோம். ஆனால் நம்முடைய இருண்ட தருணங்களில் நம் இருதயங்களுக்கு நெருக்கமான ஒரு மீட்பர் இருக்கிறார். இந்த உண்மையை நாம் பற்றிக் கொண்டிருப்பதால், அவர்களின் இதய கனத்தை விட பெரியவரான ஒருவரை சுட்டிக்காட்டும் நபர்களாக நாம் இருக்க முடியும், அந்த வேதனையின் ஊடாக அவர்களைச் சுமந்து செல்லக்கூடிய மற்றும் அவர்களின் வேதனைக்கு நோக்கத்தைக் கொண்டுவரக்கூடிய ஒருவர். அவர் பெயர் இயேசு.

எங்கள் வேதனை எங்கள் சாட்சி. இது கர்த்தரின் உண்மையைப் பற்றிய எங்கள் கதை. கர்த்தர் நம்மை நேசிக்கிறார், அவர் நம்முடன் இருக்கிறார், வேதனையின் மூலம் அவர் உண்மையிலேயே போதுமானதை விட அதிகமாக இருக்கிறார் என்பதை நாம் அறிந்து நம்பலாம்.

ஜே போர்டர்
Life.Church கெல்லர்

நாள் 3நாள் 5

இந்த திட்டத்தைப் பற்றி

Love Like Jesus

நாம் இயேசுவை முதலாவது நேசிக்காமல் அவரைப்போல வாழ எப்படி கற்றுக்கொள்ளமுடியும்? Life.Church ஊழியர்கள் மற்றும் அவர்கள் தம்பதிகளோடு சேர்ந்து வாசியுங்கள். இதன்மூலம் இயேசுவைபோல் வாழவும் நேசிக்கவும் அவர்களை ஊக்குவிக்கும் வேதவசனங்களையும் அனுபவங்களையும் தெரிந்துகொள்வீர்கள்.

More

இந்த திட்டத்தை வழங்கும் Life.Church க்கு எங்கள் நன்றியை தெரிவித்து கொள்கிறோம். மேலும் தகவல் அறிய www.life.church க்கு செல்லவும்.