இயேசுவைபோல நேசியுங்கள்மாதிரி
எங்கேயும் இயேசு
வசந்த காலத்தில் ஒரு நாள் மாலை வேளையில் பக்கத்திலுள்ள ஒரு பல்கலைக்கழகத்திற்கு ஒரு கால்பந்து ஆட்டத்தை பார்க்க சென்றிருந்தோம். என் மகளுக்கு அப்போது வயது 5. அங்கு நாங்கள் சென்றடடைந்ததும் ஒரு சிறுவன் தனியாக விளையாடுவதை அவள் கவனித்தாள். அவளுக்கு அவனை தெரியாது. அவனுக்கு ஆங்கிலம் பேச தெரியவில்லை, மேலும் பல விதங்களில் இவளை விட அவன் வித்தியாசமாக இருந்தான், ஆனால் அவனை புன்னகையுடன் பார்ப்பதற்கோ, அவன் தானே உண்டாக்கிய விளையாட்டில் சேர்வதற்கோ இவை எதுவும் தடையாக இல்லை. அந்த மாலை முழுவதும் சேர்ந்து சிரித்து, விளையாடி மகிழ்ந்தனர். ஆட்டம் முடிவதற்குள், களைப்பினால் புல் தரையில், ஒருவர் மேல் ஒருவர் சாய்ந்து ஓய்வெடுத்தனர்.
அவர்கள் விளையாடுகையில், என் கணவனும் நானும் அவனது பெற்றோரை கண்டுபிடித்து எங்களை அவர்களுக்கு அறிமுகம் செய்தோம். வேற்று நாடு, கலாச்சாரம், மதத்தை சார்ந்த இந்த இனிய குடும்பத்துடன் ஒரு அற்புதமான உறவு அங்கே உதயமானது. எங்கள் வாழ்க்கையில் அவர்களுடன் தொடர்பு கொள்ளும் வாய்ப்பை அது எங்களுக்கு கொடுத்தது. தேவனின் அன்பை நடைமுறையான, தனிப்பட்ட விதத்தில் அவர்களுடன் பகிர்ந்து கொள்ள ஒரு வாய்ப்பாகவும் இது அமைந்தது. இன்னமும் இந்த உறவு எங்கள் குடும்பத்திற்கு முக்கியமானதாக தொடர்கிறது. அது எங்களுக்கு பளுவாக இருந்தாலும் எங்களை மேம்படவும் செய்தது.
எங்கள் மகள் அந்த சிறுவனை இயேசு நேசிப்பது போல நேசித்ததால் இவை அனைத்தும் தொடங்கின. அவர் பாரபட்சம் காட்டுவதில்லை. நம் பின்னணி எப்படி இருந்தாலும், நாம் அவருக்கு விட்டுக் கொடுக்கும் அளவிற்கு நம் வாழ்க்கையில் அவர் ஈடுபடுகிறார்.
கடைசியாக எப்போது உங்களை விட வித்தியாசமான ஒருவரிடம் நீங்கள் மனமார திட்டமிட்டு அணுகினீர்கள்? சில காலம் ஆகிவிட்டது என்றால், உங்கள் அடுத்த வாய்ப்புக்காக உங்கள் கண்களை திறக்க தேவனிடம் கேளுங்கள். அவர் அப்படி செய்யும் போது, அதற்கு பிரதிபலிக்க தயாராக இருங்கள். உங்கள் வாழ்க்கையையே அது மாற்றலாம்.
அமாண்டா சிம்ஸ்
Life.Church Church Online
வேதவசனங்கள்
இந்த திட்டத்தைப் பற்றி
நாம் இயேசுவை முதலாவது நேசிக்காமல் அவரைப்போல வாழ எப்படி கற்றுக்கொள்ளமுடியும்? Life.Church ஊழியர்கள் மற்றும் அவர்கள் தம்பதிகளோடு சேர்ந்து வாசியுங்கள். இதன்மூலம் இயேசுவைபோல் வாழவும் நேசிக்கவும் அவர்களை ஊக்குவிக்கும் வேதவசனங்களையும் அனுபவங்களையும் தெரிந்துகொள்வீர்கள்.
More