இயேசுவைபோல நேசியுங்கள்மாதிரி

Love Like Jesus

13 ல் 2 நாள்

ஒருசேர மன்னித்தல்

நான் தேவாலயத்தில் வளர்ந்தேன், ஆனால் உண்மையில், கடவுள் இல்லாததைப் போலவே நான் வாழ்ந்தேன். பள்ளியிலோ அல்லது வேலையிலோ மற்றவர்களிடம் அன்பைக் காட்ட எனக்கு வாய்ப்பு கிடைத்தபோதெல்லாம், நான் அவற்றை உண்மையில் ஏற்கவில்லை. நான் ஒரு முட்டாள். நான் சுயநலமும் பெருமையும் உள்ளவன். என் வாழ்க்கையைத் திரும்பிப் பார்க்கும்போது, எனது பெரும் பாதிப்புகள் எதிர்மறையாகவே இருந்திருக்கின்றன: தவறான நண்பர்கள், நச்சு உறவுகள், பாலியல் இன்பம், ஆபாசம் மற்றும் மதுபானம். தவறான கூட்டத்தினருடன் நான் சிக்கிக் கொண்டேன், என் பெற்றோரிடம் பொய் சொன்னேன், என் நண்பர்களிடம் பொய் சொன்னேன், மதுவருந்தினேன், நான் உருவாக்கிய தவறான தற்பெருமையை நானே வளர்த்துக் கொண்டேன். கல்லூரியில் பாதி படிப்பிலேயே நான் என் உடலையும் என் வாழ்க்கையையும் சிதைக்கும் பயங்கரமான காரியங்களைச் செய்து கொண்டிருந்தேன்.

ஈஸ்டருக்கு சில வாரங்களுக்கு முன்பு 2010 ஆம் ஆண்டின் முற்பகுதியை முன்னோக்கிப் பார்க்கலாம்: என் குடும்பம் Life.Churchல் கலந்து கொள்ள அழைக்கப்பட்டிருந்தது. இந்த நேரம் வரை, நாங்கள் பல ஆண்டுகளாக தேவாலயத்திற்கு வரவில்லை. எனது வாழ்க்கையிலும் எனது குடும்ப வாழ்க்கையிலும் ஒரு முக்கியமான நேரத்தில் வந்த இந்த அழைப்பு இதைவிட சிறந்த நேரத்தில் வந்திருக்க முடியாது. நாங்கள் உள்ளே நுழைந்ததும் எல்லோரும் எங்களை மிகவும் வரவேற்றனர், ஏற்றுக்கொண்டனர். ஒரு தேவாலயத்தில் நான் ஒருபோதும் இதை அனுபவித்ததில்லை. நாங்கள் கலந்துகொண்ட அந்த முதல் ஆராதனையின் போது, ​​என் வாழ்க்கையில் முதல்முறையாக கர்த்தரின்அன்பு மற்றும் மன்னிப்பு ஆகியவற்றால் நான் அதிகமாக பாதிக்கப்பட்டேன். தேவசெய்தியில் மன்னிப்பைப் பற்றிப் பேசியது, இயேசுவின் கதையையும் அவருடைய அன்பையும் என்னை புரிந்து கொள்ளச் செய்தது. நான் தாமதிக்காமல் அன்றே என் வாழ்க்கையை கிறிஸ்துவுக்கு ஒப்புக்கொடுக்க முடிவு செய்தேன். நான் செய்த எல்லா கெட்ட செயல்களிலிருந்தும் கர்த்தர் என்னைத் தூய்மைப்படுத்துவதை உணர்ந்தேன், நான் ஒரு புதிய நபர் ஆனேன். இருப்பினும், அது மட்டும் இல்லை. எனக்கு பிறரின் ஆதரவு தேவை என்பதை உணர்ந்தேன். நான் ஒரு LifeGroupல் சேர வேண்டியிருந்தது. ஒன்றிணைந்து வாழ்க்கையை நடத்தும் வாரந்தோறும் செவ்வாய்க் கிழமைகளில் கூடிவந்த ஒரு சிறிய இளம், கூட்டு குழுவை நான் கண்டு அதில் கலந்துகொள்ள ஆரம்பித்தேன். அதிலிருந்து தான் எல்லாம் மாறியது.

இந்த நண்பர்கள் என்னை நேசித்தார்கள், என்னை ஏற்றுக்கொண்டார்கள், எல்லாவற்றிற்கும் மேலாக, கிறிஸ்துவுக்காக வாழ்வது எப்படி இருக்கும் என்பதை எனக்குக் காட்டினார்கள். இயேசுவைப் போல இந்த மக்கள் என்னை நேசித்ததை நான் ஒருபோதும் மறக்க மாட்டேன். அவர்கள் நான் இருந்த நிலைமையிலேயே என்னை ஏற்றுக் கொண்டு, என் கடந்த காலத்தை வெல்லவும், கர்த்தர் எனக்கு வைத்திருந்த இந்த புதிய வாழ்க்கையைத் தழுவுவதற்கும் எனக்கு உதவினார்கள். நான் ஏற்றுக்கொள்ளப்பட்டதை உணர்ந்தேன், நான் செய்தவற்றுக்காக என்னை அவர்கள் நியாயந்தீர்க்கவில்லை. என் வாழ்க்கையில் இந்த நேரத்தில் எனக்கு மிகவும் தேவைப்பட்டதான அன்பையும் ஆதரவையும் அவர்கள் எனக்குக் காட்டினார்கள். நான் இப்போது இருக்கும் நபராக என்னை வடிவமைக்க கர்த்தர் 20-பேர் கொண்ட இந்த சிறிய குழுவைப் பயன்படுத்தினார். வேகமாக முன்னேறி இன்று நான் சிறிய குழுவில் அங்கமாக ஒரு தேவாலயத்தில் பணியாற்றுகிறேன், கிறிஸ்துவின் அன்பின் காரணமாக வாழ்க்கை மாற்றப்பட்ட அனேகரின் கதைகளை ஒன்றன் பின் ஒன்றாக கேள்விப்படுகிறேன். கர்த்தர் உங்கள் வாழ்க்கையையும் மாற்ற முடியும், பெரும்பாலான நேரங்களில், அவர் உங்களைச் சுற்றியுள்ளவர்கள் மூலமாக அதைச் செய்யப் போகிறார்.

ஸ்பென்சர் ஆஸ்டன்
Life.Church Broken Arrow

நாள் 1நாள் 3

இந்த திட்டத்தைப் பற்றி

Love Like Jesus

நாம் இயேசுவை முதலாவது நேசிக்காமல் அவரைப்போல வாழ எப்படி கற்றுக்கொள்ளமுடியும்? Life.Church ஊழியர்கள் மற்றும் அவர்கள் தம்பதிகளோடு சேர்ந்து வாசியுங்கள். இதன்மூலம் இயேசுவைபோல் வாழவும் நேசிக்கவும் அவர்களை ஊக்குவிக்கும் வேதவசனங்களையும் அனுபவங்களையும் தெரிந்துகொள்வீர்கள்.

More

இந்த திட்டத்தை வழங்கும் Life.Church க்கு எங்கள் நன்றியை தெரிவித்து கொள்கிறோம். மேலும் தகவல் அறிய www.life.church க்கு செல்லவும்.