இயேசுவைபோல நேசியுங்கள்மாதிரி

Love Like Jesus

13 ல் 11 நாள்

கிறிஸ்து திருச்சபையை நேசிப்பது போல் (பகுதி 2)

திருமணம் முடிந்து இரண்டு குறுகிய ஆண்டுகள் மட்டுமே ஆகியிருந்தன. அந்த இரவு வேளையில் தான் அவளுக்கு முதல் முறையாக ஏதோ குத்துவதை போல ஒரு பயங்கரமான வலி. வலியால் மற்ற உணர்வுகள் எல்லாம் செயலிழந்ததைப் போல் ஆகிவிட்டன. இந்த வலியின் பயங்கரம் அடுத்த பல மணி நேரங்களில் அதிகரித்து, வேதனை, வலியால் துடிப்பு, மற்றும் கண்ணீர் அலைகளாக பெருகியதை போல் இருந்தது. கூச்சமான, மெலிந்த 20 வயது நிரம்பினவனாக இருந்த போது, இந்த பெண்ணை வாழ்விலும் தாழ்விலும் அன்புகூருவதாக வாக்குக்கொடுத்திருந்தேன். ஆனால் தாழ்வு பற்பல ஆண்டுகள் தயார் செய்த பின் தான் வரும் என்று நானே நினைத்துக்கொண்டேன். ஆனால் அப்படி நடக்கவில்லை. அந்த வலி மீண்டும் மீண்டும் வந்தது. இரவில், குழந்தை சற்றே தொலைவில் இருக்கையில், அனேக திருமணமான தம்பதியர் மகிழும் விதத்தில் நாங்கள் தொடர்புக் கொள்ள முயற்சித்தோம், ஆனால் அதற்கு மாறாக அங்கு வலி தான் இருந்தது. மூன்று ஆண்டு காலமாக இருக்கப்போகும் நெருக்கத்திற்கான வறட்சியின் துவக்கமாக தான் இது இருந்தது. நீண்ட மாலை நிழலைப் போல எங்கள் மண உறவை அது மறைத்து விட்டது. எங்களை நெருக்கமாக இணைப்பதற்காக வடிவமைக்கப்பட்ட செயல் இப்போது எங்களை தூரத் தள்ளிவிடுவதற்காக கடத்தப்பட்டது போலாகிவிட்டது. வாரங்கள் கடந்து சென்ற பின், சூழ்நிலை மாறியிருக்கும் என்ற நம்பிக்கையில் மறுபடியும் முயற்சி செய்வோம், ஆனாலும் எந்த மாற்றமும் இல்லை. விரைவில், முயற்சி செய்வதையே நிறுத்திவிட்டோம். அனேக இரவுகளில் ஒருவர் முதுகை மற்றவருக்கு காட்டி, சுவர்களை பார்த்து தான் படுக்கையில் படுத்திருந்தோம். அவளது வலியை மறைக்கும் விதத்தில் குறைந்த சத்தத்துடன் அவள் அழுவது எனக்கு கேட்கும், நானும் என் தலையணையில் மெளனமாக அழுவேன்.

நான் திருமணத்தை பற்றி இப்படி கற்பனை செய்தது இல்லை. கழுவப்பட வேண்டிய பாத்திரங்கள், மாற்றப்பட வேண்டிய டையப்பர்கள், துவைக்கப்பட வேண்டிய துணிகள் போன்ற அனைத்து பொறுப்புகளும் குவிந்து எங்களை இன்னும் தூர தள்ளி விட்டன. வாக்குவாதங்களுக்கு பின் சரி செய்யும் நேரங்கள் எதுவும் இல்லை. சனிக்கிழமை காலைகளில் எந்த வித்தியாசமும் இல்லை. எங்களுக்கென விசேஷமான நேரம் எதுவும் இல்லை. இந்த போர் எங்களை சரீரத்திலும், மனதிலும் அதிர்ச்சியின் நிலைக்கு தள்ளியது. கிறிஸ்து திருச்சபையை நேசிப்பது போல நான் அவளை நேசிக்கிறேன் என்று நான் நினைத்தேன், ஆனால் என்னை அவளுக்காக கொடுப்பது என்றால் என்னவென்று எனக்கு தெரியவில்லை. இயேசுவை போல நேசிப்பது பற்றி எனக்கு எவ்வளவு குறைவாக தெரிந்திருக்கிறது என்று நான் அறிந்தேன். விட்டு விடலாம் என்று கூட நினைத்தேன். அனேக இரவு நேரங்களில், அவள் படுக்கைக்கு சென்ற பின் விழித்திருந்து தேவனிடத்தில் அழுவேன். நான் மறுபடி மறுபடி அவளுடன் மீண்டும் தொடர்பு ஏற்படுத்த செய்த முயற்சிகளெல்லாம் என்னால் புரிந்துக் கொள்ள முடியாத காரணங்களால் ஒவ்வொரு நாளும் தள்ளப்பட்டன.

அப்போது தான் தேவன் என் கண்களை திறந்தார், இயேசு இப்படி தான் என்னை பற்றி உணருகிறார் என்று அப்போது தான் சிந்தித்தேன். ஒவ்வொரு காலை நேரத்திலும், அவரிடம் தொடர்பு கொள்ள என்னை கேட்கிறார், அனால் நான் மிகவும் பிஸியாக இருந்தேன். ஒவ்வொரு இரவு நேரத்திலும், படுக்கைக்கு முன், இயேசுவிடம் நேரம் செலவிடுவதற்கு பதிலாக என்னை பற்றியே பரிதாபப்பட்டு என் உணர்வுகளையெல்லாம் செலவழித்துக்கொண்டிருந்தேன். நெருங்கிய தொடர்புக்கு இயேசுவின் அழைப்புகளை நான் மறுபடியும் மறுபடியும் நிராகரித்ததால் அவருக்கு ஏற்பட்ட வேதனையையும் மன கஷ்டத்தையும் என்னால் கற்பனை செய்ய முடிந்தது.

இத்தனை நேரம், எங்கள் மண உறவை வலுவாக்குவது என்ற பெயரில், கணவனாக என் உரிமைகளை தான் பிடித்து வைத்துக்கொண்டிருந்தேன். இதன் வழியாக செல்ல வேண்டுமானால், நான் மாற வேண்டும். ஒரு தலை பட்சமாக தென்பட்டாலும், கணவனாக என் உரிமைகளை நான் விட்டுக்கொடுத்து அவளை நிபந்தனையின்றி நேசிக்க வேண்டும். நிராகரிப்பின் வேதனையை நான் உணரும் ஒவ்வொரு முறையும், நான் தேவனை நிராகரித்த போது அவர் எப்படி உணர்ந்தார் என்று நான் நினைவில் கொள்ள வேண்டும். தன் மனைவியை நேசிக்கிற மனிதன் தன்னையே நேசிக்கிறான் என்று எபேசியரில் சொல்லப்பட்டிருக்கிறது. நான் அன்புகூறப்படாமல் உணரும் போது தான், என் மனைவியை அதிகமாக நேசிக்க வேண்டும் என்று அறிந்துக்கொண்டேன். அப்படிப்பட்ட முதிர்ச்சி காலம் செல்வதால் மட்டும் வருவதல்ல. வேதனை, தியாகம் மற்றும் ஒப்புவிப்பின் மூலம் பண்படுத்தப்பட வேண்டும்.

இயேசு நேசிப்பது போல் அவளை நேசிப்பதில் நான் இன்னமும் தேறினவன் அல்ல. ஆனால் அவர் எங்கள் மண உறவை முற்றிலுமாக மீட்டிருக்கிறார், ஒரு உறுதியான உறவை எங்களுக்குள் கொடுத்திருக்கிறார். எங்கள் வேதனை மூலமாகவும் ஒருவரையொருவர் நேசிக்க வேண்டும் என்று நாங்கள் தேர்ந்தெடுத்ததாலும், சில மண உறவுகளால் அனுபவிக்க முடியாத அளவு நெருக்கத்தை நாங்கள் கொண்டு மகிழ்கிறோம்.

மைக்கல் மார்டின்
YouVersion குழு

வேதவசனங்கள்

நாள் 10நாள் 12

இந்த திட்டத்தைப் பற்றி

Love Like Jesus

நாம் இயேசுவை முதலாவது நேசிக்காமல் அவரைப்போல வாழ எப்படி கற்றுக்கொள்ளமுடியும்? Life.Church ஊழியர்கள் மற்றும் அவர்கள் தம்பதிகளோடு சேர்ந்து வாசியுங்கள். இதன்மூலம் இயேசுவைபோல் வாழவும் நேசிக்கவும் அவர்களை ஊக்குவிக்கும் வேதவசனங்களையும் அனுபவங்களையும் தெரிந்துகொள்வீர்கள்.

More

இந்த திட்டத்தை வழங்கும் Life.Church க்கு எங்கள் நன்றியை தெரிவித்து கொள்கிறோம். மேலும் தகவல் அறிய www.life.church க்கு செல்லவும்.