கிறிஸ்மஸ் தியானங்கள்மாதிரி

Christmas Reflections

5 ல் 5 நாள்

 வந்தது யார் என்று பாருங்கள்

கிறிஸ்து பிறப்பு காட்சியை அலங்கரிக்கும் மேய்ப்பர்களின் விசேஷம், அன்று இருந்திருக்க வாய்ப்பில்லை . அவர்கள் எந்த ஒரு அழைப்பிற்கான பட்டியலிலும் இல்லை. மேய்ப்பர்கள் சமூக அளவின் அடிமட்டத்தில் அல்லது அடிமட்டத்திற்கு மிக அருகில் இருந்தனர், கீழ் வகுப்பினர் என்பது பொதுவாக ஏற்றுக்கொள்ளப்படுகிறது. அவர்களின் வேலையோ அல்லது அவர்களின் வசம் இருப்பவைகளோ விசேஷித்தவைகள் அல்ல.

இரட்சகரின் பிறப்பு பற்றிய அறிவிப்பு வரும்போது, ​​மேய்ப்பரைச் சேர்ப்பதைப் பரிந்துரைக்க ஒரு துணிச்சலான தீர்க்கதரிசி தேவைப்பட்டிருப்பார், அவர்களுக்கு பரலோக சேனையின் தோற்றம் அளித்தது எதிர்பாரதது. ஒருவேளை தூரத்திலிருந்து வரும் ராஜரீக வழிபாடு செய்பவர்களுக்கு பரலோக சேனை தோற்றம் அளிக்கலாம் ஆனால் உள்ளூர் மேய்ப்பர்களுக்கு காட்சி அளித்தது அரிதானது. இன்னும் . . . அந்த குளிர் நட்சத்திர இரவில் தேவதூதர்கள் அவர்களுக்குத் தோன்றி, “மிகுந்த மகிழ்ச்சியின் நற்செய்தியை அறிவித்தனர். அவர்கள் கர்த்தருடைய திட்டத்திற்கு பங்காளர்களானார்கள்.

கடவுளின் திட்டத்திலும் ஞானத்திலும் நாம் இருக்க நாம் பேர் பெற்றவர்களாக இருக்க வேண்டிய அவசியமில்லை. கடவுள் யாரை விரும்புகிறாரோ அவருக்குத் தன்னை வெளிப்படுத்துகிறார், மேலும் அது பொதுவாக தகுதியானவர் அல்லது மத ரீதியாக சலுகை பெற்றவர்களுக்கு அல்ல என்பது வேதத்திலிருந்து தெரிகிறது. திறந்த மற்றும் தேடும் இதயம், ஊழிய மனப்பான்மை, மனத்தாழ்மை் ஆகிய இவைகளைத்தான் கடவுள் எதிர்பார்க்கிறார்.

மேலும் இந்த பண்புகளே சாஸ்திரிகளிடம் இருந்திருக்கலாம், ஏனெனில் அவர்களுடையது இன்னும் விசித்திரமான சேர்க்கையாகும்.  சாஸ்திரிகள் பெரும்பாலும் ஜோதிடர்கள். இது நம்மில் சிலருக்கு சங்கடமாக இருக்கிறது, ஏனெனில் ஜோதிடம் சிறந்த பிச்சை எடுக்கும் போலி அறிவியல். ஆனால் கடவுள் நம் கட்டளைகளுக்குக் கட்டுப்பட்டவர் அல்ல, மேலும் பலதரப்பட்ட சூழ்நிலைகளில் மக்கள் இருக்கிறார்கள், “அவர் இருக்கிறார் என்ற விசுவாசத்தோடே அவரை விடாமுயற்சியுடன் தேடுபவர்களுக்கு அவர் பெலன் அளிக்கிறார். சி. எஸ். லூயிஸ் போன்ற சிறந்த வல்லுநர்கள், எல்லா கலாச்சாரங்களுக்கும் அடையாளங்கள், கோட்பாடுகள் உள்ளன, அவை குறைவுள்ளதாய் மற்றும் முழுமையற்றவையாய் இருந்தாலும், அவை கடவுளைப் பற்றிய அறிவையும், நீதி மற்றும் நியாயத்தீர்ப்பின் கருப்பொருளையும் சுட்டிக்காட்டுகின்றன-. 

ஒரு குறிப்பிட்ட நட்சத்திரம் இந்த மனிதர்களை பிரகாசமான மற்றும் விடிவெள்ளி நட்சத்திரமான தாவீதின் நட்சத்திரத்தை சுட்டிக்காட்டியது. எனவே, அவர்கள் பெத்லகேமுக்கு நீண்ட தூரம் மிகுந்த எதிர்பார்ப்புடன் பயணம் செய்தனர். அவர்கள் எப்படிப்பட்ட ராஜாவை சந்திப்பார்கள்? 

உண்மையில் எத்தனை சாஸ்திரிகள் வந்தார்கள் என்பது நமக்குத் தெரியாது-அது மூவராக இருந்திருக்கலாம், ஆனால் மூன்று பரிசுகள் குறிப்பிடபட்டிருக்கிறது -மூன்று பரிசுகள் ஆம், மூன்று ஞானிகள் இல்லை. மேலும், அவர்பிறந்த நேரத்தில் அவரகள் வந்திருக்க வாய்ப்பில்லை. அது சிறிது காலம் கழித்து தான் வந்திருப்பார்கள். இரண்டு வயதுக்குட்பட்ட அனைத்து ஆண் குழந்தைகளையும் கொல்ல ஏரோது விரும்பினார் என்பதை நாம் கணக்கில் எடுத்துக் கொண்டால், அது இரண்டு வருடங்கள் வரை ஆகியிருக்கலாம். 

அது ஒருபுறம் இருக்க, கிழக்கிலிருந்து வந்த இந்த ஞானிகளால் ராஜா இயேசு வணங்கப்படுவதைக் காண்கிறோம். உடன்படிக்கையிலிருந்து முடிந்தவரை வெகு தொலைவில் உள்ள மக்களிடமிருந்து கிடைக்க வேண்டிய மரியாதை கிடைத்தது. அவர்கள் யூதர்களின் ராஜாவாகப் பிறந்த சிறுவனை வணங்கி, அரசனுக்கு ஏற்ற பரிசுகளை வழங்கினர். உண்மையான ராஜாவை வணங்கியபோது அவர்கள் மகிழ்ச்சியில் நிரம்பி வழிந்தார்கள். 

இங்கே நாம் இந்த பிரதிபலிப்புகளை-வணக்கத்துடனும் ஆச்சரியத்துடனும் முடிக்கிறோம். ஞானிகளைப் போலவே கடவுள் தேர்ந்தெடுத்த அரசனை வணங்குகிறோம். அவருடைய நட்சத்திரத்திற்கு நாம் அவசரமாக ஓடி நம் வாழ்க்கையை அவருக்குப் பரிசாக அளிக்க வேண்டும். நாமும் பெரும் மகிழ்ச்சியை எதிர்பார்க்கலாம். 

ஒன்றுகூடி ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் பிறப்பைக் கொண்டாடும் உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும் மிகவும் மகிழ்ச்சியான கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள். 

இந்த தலைப்பில் நீங்கள் மேலும் ஆராய அல்லது சைமனின் எழுத்து மற்றும் பைபிள் திட்டங்களைப் பற்றி மேலும் படிக்க விரும்பினால், www.simonmcintyre.net.க்குச் செல்லவும்

நாள் 4

இந்த திட்டத்தைப் பற்றி

Christmas Reflections

நமது கிறிஸ்துமஸ் கதை மரியாளுக்கு தேவதூதனின் அறிவிப்பில் தொடங்கி சாஸ்திரகளின் வருகையுடன் முடிவடைகிறது. கிறிஸ்மஸ் கதையின் இந்த தியான பிரதிபலிப்புகள் மற்றும் பயன்பாடுகளில் நான் பெரும்பாலும் லூக்கா சுவிஷேஷத்தில் இருந்து மேற்கோள் காட்டுவேன், ஏனெனில் அவருடைய சுவிஷேஷம் நற்செய்தி நூல்களில் முழுமையாக உள்ளது.

More

இந்தத் திட்டத்தை வழங்கிய சைமன் மெக்கின்டைருக்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறோம். மேலும் தகவலுக்கு, தயவுசெய்து செல்க:https://www.simonmcintyre.net/