கிறிஸ்மஸ் தியானங்கள்மாதிரி
எதிர்பாராத ஊக்கம்
சில பயணங்கள் கடினமாக இருக்கும் என்பது கடவுளுக்குத் தெரியும், மேலும் அப்பயணங்கள் தனியாக அமைந்தால் மிகவும் கடினம். எனவே, காபிரியல் மரியாளின் உறவினர் எலிசபெத் ஆறு மாத கர்ப்பமாக இருப்பதாக கூறினார். எலிசபெத் தன் முதிர் வயது வரை மலடியாக துக்கத்தையும் அவமானத்தையும் தாங்கிக்கொண்டு இருந்ததை மரியாள் அறிந்திருந்ததால், இந்த செய்தி மரியாளின் ஆர்வத்தை உடனடியாகத் தூண்டியிருக்கும். அவள் ஒரு குழந்தையைப் பெற்றெடுக்கிறாள் என்று கேட்பது மரியாளுக்கு ஒரு பெரிய ஊக்கமாக இருந்திருக்கும். தேவதூதரின் வருகைகள், தீர்க்கதரிசனங்கள் மற்றும் நிறைவேற்றங்கள் நிறைந்த இந்த ஆபத்தான உலகில் அவள் தனியாக இல்லை.
மரியாள் உடனே தன் உறவினரைப் பார்க்கப் புறப்பட்டாள். அவள் புரிந்து கொள்வாள். மரியாள் வாசல் வழியாகச் சென்றபோது எலிசபெத்தின் வயிற்றில் இருந்த குழந்தை “துள்ளியது.” அது மட்டுமல்ல, எலிசபெத் பரிசுத்த ஆவியால் நிரப்பப்பட்டு, மரியாளையும் குழந்தையையும் ஆசீர்வதித்து, “என் (அவளுடைய) ஆண்டவரின் தாயார் என்னிடம் ஏன் வர வேண்டும் என்றார் ( அவள்).” வேறுவிதமாகக் கூறினால், நான் உங்களிடம் வந்திருக்க வேண்டும் என்று கூறினாள்.
கலாச்சார எதிர்பார்ப்புகளின் கண்ணோட்டத்தில் ஒருமுறை பார்த்தால் எல்லாம் மீண்டும் தலைகீழாகத் தெரிகிறது. பொதுவாக மரியாள் தான் தனது மூத்தவரான எலிசபெத்துக்கு மிகுந்த மரியாதையைக் காட்டுபவர்.
ஆனால் கடவுள், முக்கியமானவர்கள், வல்லமை படைத்தவர், சக்தி வாய்ந்தவர், செல்வந்தர்கள் ஆகியோருக்கு இரட்சிப்பைக் கொண்டு வர வரவில்லை என்று கூறினார். அப்படி இருந்தால் அவர்கள் பெரும்பாலும் அதற்கான கனத்தை எடுத்துக்கொள்வார்கள். கடவுள் வழக்கமான எதிர்பார்ப்புகளை மாற்றியமைக்கிறார், மேலும் வேதம் கடவுள் மட்டுமே மகிமையையும் கனத்தையும் பெறுவார் என்று திட்டமாக கூறுகிறது-அவரால் மட்டுமே அவற்றை பெற முடியும். அவர் தாழ்மையானவர்களையும், கவனிக்கப்படாதவர்களையும், ஆச்சரியப்படுபவர்களையும் தேடுகிறார், ஆம், அவர்களில் சிலர் ராஜாவின் சன்னிதானத்தில் காணப்படுகிறார்கள்.
பின்னர், வாழ்த்துகளினால் உற்சாகமடைந்த மரியாள், கடவுள் தனக்காக என்ன செய்தார் என்பதை அறிவிக்கும் பாடலை பாடுகிறாள். தீர்க்கதரிசிகளை நினைவூட்டும் இந்த குறிப்பிடத்தக்க பாடல், மரியாளை இறைவன் தேர்ந்தெடுத்ததைக் கொண்டாடுகிறது—அவளின் “தாழ்மையான நிலைமை,”—மற்றும் பெருமையைள்ளவர்களின் சிதறல் மற்றும் தாழ்த்தபடுதல். இது பழைய ஏற்பாட்டு கற்பனைகள் மற்றும் தீர்க்கதரிசன தொனியால் நிறைந்துள்ளது, மரியாள் இள வயதினர் என்பதில் சந்தேகமில்லை, ஆனால் அவள் வேத அறிவு இல்லாதவர் அல்லது கடவுளின் வழிகளைப் பற்றிய புரிதல் இல்லாதவர் அல்ல.
பிறகு மரியாள் தனது உறவினருடன் மூன்று மாதங்கள் தங்கினார், இது யோவான் ஸ்நானகனின் பிறப்பு வரை என்று நான் நினைக்கிறேன். அவர்கள் ஒருவருக்கொருவர் எவ்வளவு பலமாகவும் ஆறுதலாகவும் இருந்திருப்பார்கள். நமது கற்பனையில், அவர்கள் ஒருவருக்கொருவர் தங்களின் கதைகளைப் பகிர்ந்துகொள்வது, ஒன்றாக ஜெபிப்பது மற்றும் தீர்க்கதரிசிகளை, கர்த்தருடைய ஊழியரைப் பற்றி அதிகம் சொல்லக்கூடிய ஏசாயாவை தியானிப்பது என்று இருந்திருக்கலாம்.
கடவுளின் வார்த்தைக்கு நாம் செய்யும் சிறிய அல்லது பெரிய கீழ்ப்படிதலில் நம்மை ஊக்குவிக்கவும் பலப்படுத்தவும் இதே பாதையில் நடந்த யாராவது எப்போதும் இருப்பார்கள். மரியாளைப் போலவே நாமும் துரிதமாக சென்று அவர்களிடத்தில் ஆதரவையும் தைரியத்தையும் பெற வேண்டும்.
வேதவசனங்கள்
இந்த திட்டத்தைப் பற்றி
நமது கிறிஸ்துமஸ் கதை மரியாளுக்கு தேவதூதனின் அறிவிப்பில் தொடங்கி சாஸ்திரகளின் வருகையுடன் முடிவடைகிறது. கிறிஸ்மஸ் கதையின் இந்த தியான பிரதிபலிப்புகள் மற்றும் பயன்பாடுகளில் நான் பெரும்பாலும் லூக்கா சுவிஷேஷத்தில் இருந்து மேற்கோள் காட்டுவேன், ஏனெனில் அவருடைய சுவிஷேஷம் நற்செய்தி நூல்களில் முழுமையாக உள்ளது.
More