கிறிஸ்மஸ் தியானங்கள்மாதிரி
மரியாளின் ஏற்பு
காபிரியேல் கடவுளிடமிருந்து ஒரு செய்தியுடன் மரியாவிடம் வந்தார்—“கிருபை பெற்றவளே, கர்த்தர் உன்னுடனே இருக்கிறார்.” இந்த வாழ்த்தின் தாக்கங்களை மரியாள் புரிந்துகொண்டாள், அதனால்தான் அது அவளை கலங்க செய்தது. இதைத்தான் கடவுள் பழைய ஏற்பாட்டு நியாதிபதிகளிடமும் தீர்க்கதரிசிகளிடமும் பேசினார்—இதில் அவள் தன்னை பொருத்தி கற்பனை செய்துகொள்ளவில்லை.
இதன் அர்த்தம் என்ன, அவளின் கலங்கின பதிலா? இந்த சூழ்நிலையில் நாம் நம்மை வைத்து பார்த்தால், நாமும் "மிகவும் கலக்கமடைவோம்" என்பதில் சந்தேகமில்லை. தேவதூதனின் தோற்றம் யாரிடமிருந்தும் சரி-உடன்படுகிறேன் என்ற ஒரு பதிலை உண்டாக்குமா என்று நான் சந்தேகிக்கிறேன். தீர்க்கதரிசன வார்த்தைகளைக் கொண்ட தேவதூதர்களின் கோலம், "அமைதியுடன் தொடருங்கள்" என்று நம்மை ஏவக்கூடிய ஒன்றல்ல.
மரியாளுக்கு குழந்தை பிறப்பதாக அளிக்கப்பட்ட வாக்குறுதி அசாதாரனமானது, எதிர்பாரதது. பெரும்பாலான யூதப் பெண்கள் திருமணம் செய்து குழந்தைகளைப் பெற்றனர். பெரும்பாலான யூதப் பெண்களுக்கு குழந்தைகளைப் பெறுவதற்கு ஒரு பங்குதாரர் இருந்தார் - அப்படிதான் நடக்கிறது. ஆனால் இந்தக் குழந்தை, மற்ற குழந்தைகளைப்போல அல்ல, ஆனால் என்றென்றும் ஆட்சி செய்யவிருக்கிற தாவீது ராஜாவிற்கு வாக்குறுதியளிக்கப்பட்ட சந்ததியான “உன்னதமானவரின் குமாரன்”. மரியாள் என்ன நினைத்திருக்க வேண்டும்?
“நான் கன்னியாக இருப்பதால் இது எப்படி நடக்கும் என்பதுதான் அவளது பதிலாக இருந்தது.” தேவதூதர் மரியாளிடம் கேள்விப்படாத, அவளை தனிமைப்படுத்தக்கூடிய (யார் அவளை நம்புவார்கள்) ஒன்றை மறைமுகமாக சொல்லியிருந்தார், அவளது கேள்வி விசுவாச குறைவினால் உண்டானது அல்ல.
பரிசுத்த ஆவியானவர் அவளை நிழலிடுவார், மேலும் பிதாவின் நித்திய வார்த்தை மரியாளின் வயிற்றில் மாம்சமாக மாற வேண்டும்.
அவள் பதில்: “இதோ, நான் கர்த்தருக்கு அடிமை; உமது வாக்கின்படியே எனக்கு ஆகட்டும்” என்பதுதான். மரியாளின விசுவாசமும், கீழ்ப்படிதலும் ஆச்சரியமானது. கடவுளுக்குக் கீழ்ப்படிவதினால் அவள் கொடுக்கப்போகும் விலை மிக அதிகம்.
நமது கீழ்ப்படிதல் எவ்வளவு ஆழமானது? கடவுளுடைய வார்த்தையைப் பெற்றுக் கொள்ளுவது என்பது எப்போதுமே தனிப்பட்ட வசதிக்கான விஷயம் அல்ல. ஆனால் “ஆம்” ஏற்றுக்கொள்ளுகிறவர்கள், தேவத்திட்டத்தில் பங்கு பெறுகிறார்கள். மரியாளைப் போலவே, நம்முடைய தயக்கம், ஆம் என மாறும்போது, கடவுளின் இரட்சிப்பின் வார்த்தையின் விதையை நாம் சுமக்கிறோம்.
வேதவசனங்கள்
இந்த திட்டத்தைப் பற்றி
நமது கிறிஸ்துமஸ் கதை மரியாளுக்கு தேவதூதனின் அறிவிப்பில் தொடங்கி சாஸ்திரகளின் வருகையுடன் முடிவடைகிறது. கிறிஸ்மஸ் கதையின் இந்த தியான பிரதிபலிப்புகள் மற்றும் பயன்பாடுகளில் நான் பெரும்பாலும் லூக்கா சுவிஷேஷத்தில் இருந்து மேற்கோள் காட்டுவேன், ஏனெனில் அவருடைய சுவிஷேஷம் நற்செய்தி நூல்களில் முழுமையாக உள்ளது.
More