கிறிஸ்மஸ் தியானங்கள்மாதிரி
கடவுளின் தெரிவு
நமது கிறிஸ்துமஸ் கதை, மரியாளுக்கு தேவதூதன் அறிவிப்பதில் தொடங்கி, சாஸ்திரிகளின் வருகையுடன் முடிவடைகிறது. கிறிஸ்மஸ் கதையின் இந்த தியான பிரதிபலிப்புகள் மற்றும் பயன்பாடுகளில் நான் பெரும்பாலும் லூக்கா சுவிஷேஷத்தை மேற்கோள் காட்டுவேன், ஏனெனில் அவருடைய சுஙிஷேஷம் நற்செய்தி நூல்களில் முழுமையானது.
இது ஒரு ஆழமான மற்றும் தனிப்பட்ட கதையாகும், இருப்பினும், இறுதியில் பொதுவானதும், அதே போல் ஆச்சரியம் மிகுந்ததுமாய் இருக்கிறது.
இதன் கதாபாத்திரங்களாக ஒரு இளம் வாலிப யூதப் பெண், ஒரு மூத்த தேவதூதன், காபிரியல்; யோசேப்பு; உள்ளூர் மேய்ப்பர்கள்; கிழக்கிலிருந்து வந்த சாஸ்த்திரிகள் கதையை நிரப்புகிறார்கள். இத்தகைய மாறுபட்ட கதாபாத்திரங்கள் இதற்கு முன் அல்லது அதற்குப் பிறகு ஒன்று சேரவில்லை. இந்த நாடகம் ஏற்படுத்திய விளைவுகள் வெறும் உள்ளூர் விளைவுகள் அல்ல உலகளாவியது,.
ஒவ்வொரு ஆண்டும் கிறிஸ்துமஸ் கதை ஆயிரம் வேறுபட்ட விதங்களில், இலட்சக் கணக்கான இடங்களில் மீண்டும் சொல்லப்படுகிறது. இந்த கதை கவர்ச்சியிலும் எளிமையிலும் குழந்தை போன்றது, இறையியல் அடிப்படையில் விலையேறப்பற்றது மற்றும் முதிர்ச்சியானது, பலரால் விரும்பப்படுகிறது. கிறிஸ்து பிறப்பு நாடகத்தில் ஒரு கதாபாத்திரமாக அல்லது விலங்குகளாகவாவது நம்மில் பங்கு பெறாதவர்கள் யாருண்டு?
இது அனைத்தும் இளம் கன்னியான நாசரேத்தில் குடும்பத்துடன் வசித்து வந்த மரியாளுடன் தொடங்கியது.. நாசரேத் என்பது மறக்கக்கூடிய ஒரு வார்த்தை என்பது நமக்குத் தெரியும்—“நாசரேத்திலிருந்து யாதொரு நன்மை உண்டாகக் கூடுமா.” அடிப்படையில் எந்த மதிப்பும் இல்லாததாகக் கருதப்படும் ஒரு நகரத்திலிருந்து, குறைவாக அறியப்பட்ட மற்றும் சாத்தியமில்லாத ஓரு நபர் தேர்ந்தெடுக்கப்படுவது ஒரு நல்ல தொடக்கமாக இருக்காது. ஆனால் இப்படிதான் பெரும்பாலும் கடவுள் மனிதகுலத்தோடு செயல் படுகிறார்—“எந்தவொரு மனிதனும் கடவுளின் முன்னிலையில் பெருமை பாராட்ட முடியாதபடி இப்படி செய்கிறார்.”
மனித விருப்பங்கள், பலம் மற்றும் புத்தி கூர்மை ஆகியவை கடவுளின் விருப்பங்கள் என்று நாம் எத்தனை முறை தவறாக நினைக்கிறோம்? அவருடைய வழிகள் உயர்ந்தவை. இதன் பொருள் என்னவென்றால், அவற்றை நாம் கற்பனை செய்யவோ அல்லது புரிந்துகொள்ளவோ முடியாத அளவு உயரமானவை, அவை நாம் என்ன செய்வோம் என்பதன் பதிப்பு அல்ல, இன்னும் அதிக உயர்வானது, இந்த விஷயத்தில், அடைய முடியாத அல்லது புரிந்துகொள்ள முடியாத உயரமானது.
நம்மில் யார் மிக தாழ்ந்த இடத்தில் இருக்கும் பெரிய பின் புலம் இல்லாத ஓரு நபரை, உலகத்தை நிரந்தரமாக பாதிக்கக்கூடிய ஒரு நபராகத் தேர்ந்தெடுப்போம்? நாம் சிறந்த பல்கலைக்கழகங்கள் அல்லது நிறுவனங்களுக்குச் சென்று, ஈர்க்கக்கூடிய சுயவிவரங்களை கொண்ட ஒருவரைத் தேர்வு செய்கிறோம். கடவுள் அப்படி செய்வது அல்ல. அவர் பிரபலமில்லாத, தாழ்மையான, சுயத்தை அழித்தவர்களைத்தான் தேர்ந்தெடுக்கிறார், ஏனென்றால் அவர்களின் வலிமை அல்லது புத்திசாலித்தனம் அந்த காரியத்தை செய்யவில்லை என்பது அவர்களுக்குத் தெரியும். அவர்கள் தங்களின் தகுதியின்மை, குறைவுகள், பலவீனங்களைப்பற்றி அறிந்திருக்கிறார்கள்.
கடவுள் சாத்தியமில்லாத, குறைந்த தகுதியுள்ள, தங்கள் குறைபாடுகளை நன்கு அறிந்தவர்களைத் தேர்ந்தெடுக்கிறார்; பாவிகள் தான் சிறந்த பரிசுத்தவான்களாக உருவாகுகிறார்கள். அவருடைய ராஜ்யத்தில் உலக நன்மையும் ஆடம்பரமும், எளிமையான கீழ்ப்படிதல் மற்றும் அற்புதங்களினால் வெற்றிக் கொள்ளப்படுகின்றன.
வேதவசனங்கள்
இந்த திட்டத்தைப் பற்றி
நமது கிறிஸ்துமஸ் கதை மரியாளுக்கு தேவதூதனின் அறிவிப்பில் தொடங்கி சாஸ்திரகளின் வருகையுடன் முடிவடைகிறது. கிறிஸ்மஸ் கதையின் இந்த தியான பிரதிபலிப்புகள் மற்றும் பயன்பாடுகளில் நான் பெரும்பாலும் லூக்கா சுவிஷேஷத்தில் இருந்து மேற்கோள் காட்டுவேன், ஏனெனில் அவருடைய சுவிஷேஷம் நற்செய்தி நூல்களில் முழுமையாக உள்ளது.
More