கிறிஸ்மஸ் தியானங்கள்மாதிரி
அந்த விசேஷித்த நாள் வந்தது
இறுதியாக, கிறிஸ்து பிறப்பு காட்சி: தொழுவத்தில் புதிதாகப் பிறந்த குழந்தை, அதின் பெற்றோர் மற்றும் மேய்ப்பர்கள். அந்தக் குளிர்கால நாளில் பிறந்த குழந்தை மட்டும் இல்லாதிருந்தால், இந்த கதை காலப்போக்கில் மறந்திருக்கக் கூடும்.
அனேகமாக, அந்த தொழுவம், ஒரு வீட்டின் இணைப்பாக, கால்நடைகளுக்கு தீவனம் கொடுத்து பராமரிக்கும் இடமாக இருந்திருக்கலாம். அக்காலத்தில் பெரும்பாலான குழந்தைகள் அரண்மனைகளில் அல்லது நல்ல சுகாதார நிலைமைகளுடன் பிறக்கவில்லை; பலர் பிறக்கும்போது அல்லது மிக இள வயதிலேயே இறந்தனர்.
கொஞ்சம் பின்நோக்கி சென்றால், அகஸ்துராயனால் குடிமதிப்பு எழுதும் படி பிறந்த கட்டளையின்படி, ஆண்கள் தங்கள் சொந்த ஊருக்குச் சென்று பதிவு செய்ய வேண்டும் என்று எல்லோரயையும் தேசாதிபதி அறிவுறுத்தினார்- இது ஒரு மக்கள் தொகை கணக்கெடுப்பு போன்றது, ஆனால் அவ்வாறு செய்யாவிட்டால் கடுமையான விளைவுகளை சந்திக்க நேரிடும்
கர்ப்பத்தின் இறுதிக் கட்டத்தில் நாசரேத்திலிருந்து பெத்லகேமுக்கு பயணிக்க வேண்டியிருந்ததால் யோசேப்பு மற்றும் மரியாளுக்கு இது மிகவும் மோசமான நேரம். 90 மைல்கள் பயணம் கடினமானது மற்றும் நீண்டது. குழந்தை பிறப்பதிற்கு முன்பு எவ்வளவு காலம் அவர்கள் தங்கியிருந்தார்கள் என்பது நமக்கு தெரியாது, ஆனால் அது அதிக காலமில்லை என்று தோன்றுகிறது. மக்கள்தொகை கணக்கெடுப்பிற்காக நகரம் நிரம்பியிருக்கும், எனவே பிறப்புக்கு பொருத்தமான இடத்தைக் கண்டுபிடிப்பது சிரமமானதும், கண்டுபிடிக்கவில்லை என்பது சாத்தியமானதும் தான்.
மரியாளின் கீழ்ப்படிதலைச் சுற்றியிருந்த பல விஷயங்கள் சிரமமானதாகவே இருந்தது. கடவுளுடைய சித்தத்தைச் செய்வது எப்போதுமே, வசதியாக, எளிமையாக அல்லது நேரானதாக இருக்கும் என்று எதிர்பார்ப்பது ஞானமற்றது. மரியாள் சமூக அவதூறுகளை எதிர்கொண்டார், அவரது பெரிய குடும்பத்திலிருந்து இடம்பெயர்ந்தார் (நமக்குத் தெரிந்து மூன்று முறை), மற்றும் எந்தவொரு தாயின் உச்சக்கட்ட சோகம் - ஒரு குழந்தையின் மரணம், “உன் ஆத்துமாவையும் ஒரு பட்டயம் உருவிப்போகும்." “உம்முடைய வார்த்தையின்படி எனக்கு ஆகட்டும்” என்று மரியாள் சொன்னபோது, அவளால் அதின் தாக்கத்தை உணர்ந்திருக்க முடியாது, நாமும் ஆம் ஆண்டவரே என்று சொல்லும்போது உணர்வதில்லை. ஆனால் கடவுளிடம் இல்லை என்று சொல்வது ஒரு முரண் என்பதால் கடவுளுக்கு ஆம் என்பது மட்டுமே பதில். ஆம், சிரமத்துடன் வந்தாலும் எப்பொழுதும் அது தான் சிறந்த பதில், நீங்கள் கடவுளுக்குப் பிரியமானவர் என்பதை அறிந்து, ஆழ்ந்த நிறைவு மற்றும் அமைதியுடன் அந்த பதில் வருகிறது. வேறு வார்த்தைகளில் கூறுவதானால், நாம் நன்றாக இல்லாதது போல் தோன்றினாலும் நாம் மிகவும் சிறப்பாகவே இருக்கிறோம்.
அந்த விசேஷித்த நாளும் வந்துவிட்டது, இயேசு கிறிஸ்து, வார்த்தை மாம்சமாகி, சாத்தியமில்லாத மக்கள் மத்தியில் சாத்தியமில்லாத இடத்தில் ஒரு நிராதரவான குழந்தையாகப் பிறந்தார். அவர் அரண்மனையில் பிறக்கவில்லை; விசேஷித்த விதமாக கவனிக்கப்படவில்லை, அல்லது அவர் பிறந்தசிசு பராமரிப்பில் நிபுணத்துவம் பெற்ற மருத்துவமனையுள்ள ஒரு நூற்றாண்டில் வாழவுமில்லை.
இஸ்ரவேலின் ராஜாக்கள், பிரதான ஆசாரியர்கள் மற்றும் ரோமானிய பிரதிநிதிகள் யாருமே வெளிப்படையாக இல்லை. யாராவது கவனித்தார்களா? ஆம், கவனித்தார்கள், ஆனால் அதை இன்னொரு நாளுக்கு வைத்துக் கொண்டார்கள்.
உலகின் ஒரு விசேஷித்த, மிகவும் விசேஷித்த நாள், விரைவாக கடந்துவிட்டது. இருப்பினும், அன்றைக்கு அற்புதமான, அழகான ஒன்று அந்தத் தொழுவத்தில் நடந்தது. நம்மை மீட்கும் குழந்தை வந்தது. கடவுள் மனிதர்களுடன் வாழ்கிறார் - கடவுள் நம்முடன் இருக்கிறார் - கடவுள் நமக்காக இருக்கிறார்.
வேதவசனங்கள்
இந்த திட்டத்தைப் பற்றி
நமது கிறிஸ்துமஸ் கதை மரியாளுக்கு தேவதூதனின் அறிவிப்பில் தொடங்கி சாஸ்திரகளின் வருகையுடன் முடிவடைகிறது. கிறிஸ்மஸ் கதையின் இந்த தியான பிரதிபலிப்புகள் மற்றும் பயன்பாடுகளில் நான் பெரும்பாலும் லூக்கா சுவிஷேஷத்தில் இருந்து மேற்கோள் காட்டுவேன், ஏனெனில் அவருடைய சுவிஷேஷம் நற்செய்தி நூல்களில் முழுமையாக உள்ளது.
More