என்னவானாலும், தேவன் நல்லவராகவே இருக்கிறார் என்று நம்புதல்மாதிரி
ஆண்டவர் மரிக்கவில்லை, அவர் நிறைவேற்றவேண்டிய காரியங்கள் இன்னும் நிறைவேறவில்லை! உங்கள் வாழ்க்கை, வரைந்து முடிக்கப்படாத ஓவியத்தில் ஏதோ ஒன்று குறைவது போன்ற உணர்வை உங்களுக்கு ஏற்படுத்தலாம்.
நீங்கள் காண முடியாவிட்டாலும், உங்கள் வாழ்க்கையில் அவரின் திட்டங்கள் நிறைவேறிக் கொண்டேயிருக்கிறது என்பதை நீங்கள் அறிய வேண்டும் என்று அவர் விரும்புகிறார். உங்களுக்கு மட்டுமல்ல, நீங்கள் நேசிக்கும் உங்களை சார்ந்தவர்களின் வாழ்க்கையிலும் ஆற்றலான காரியங்களை செய்து கொண்டிருக்கிறார். நீங்கள் கண்ணால் பார்க்காத காரணத்தால், பாதி வரையப்பட்ட அந்த ஓவியம் ஒரு தலைசிறந்த படைப்பாய் உருவாகாது என்று அர்த்தமல்ல. உங்களில் நற்கிரியையைத் தொடங்கினவர் அதை இயேசுகிறிஸ்துவின் நாள்பரியந்தம் முடிய நடத்தி வருவாரென்று நம்பி என்று பிலிப்பியர் 1:5ல் எழுதியிருக்கிறது. ஆதலால், நீங்கள் நம்பலாம்: ஆண்டவர் உங்கள் வாழ்க்கையின் திட்டங்களை நிறைவேற்ற, காரியங்களை சிரத்தையாய் செய்துகொண்டே இருக்கிறார்.
உங்கள் வாழ்க்கையில் ஆண்டவர் நிறைவேற்ற இருக்கும் திட்டங்களை எதனாலும், எவராலும் தடுக்க முடியாது! குளறுபடியாய் வரையப்பட்ட ஓவியத்தை போல உள்ள உங்கள் வாழ்க்கையை கொண்டே உங்களை சுற்றி உள்ளவர்களை ஆண்டவர் ஆசீர்வதிக்க முடியும்.
அவர் இன்னும் கூட உங்களுக்கு கொடுக்க விரும்புகிறார்—இன்னும் கொஞ்சம் தயவு, ஆசீர்வாதம், மேன்மேலும் பல நல்ல காரியங்களை கொடுக்க வாஞ்சையாய் உள்ளார்!
சிந்தித்துப் பாருங்கள்:ஆண்டவர் நிறைவேற்ற வேண்டிய காரியங்கள் உங்கள் வாழ்க்கையில் இன்னும் உள்ளது என்பதை நினைக்கும்போது எவ்விதமான நம்பிக்கையை அது உங்களுக்கு அளிக்கிறது?
ஜெபியுங்கள்; என்னை குறித்ததான திட்டங்களை ஆரம்பித்து வைத்து, அதை முடித்தும் வைப்பேன் என்று உறுதியளித்ததற்கு நன்றி ஆண்டவரே. உமது தயவு என் வாழ்க்கையில் புரண்டோடிக் கொண்டிருக்கிறது, அப்படியாக அது என்னைசுற்றி உள்ளவர்களுக்கும் உதவுகிறது என்பதை நான் உணர, நீர் உதவி செய்யும் என்று ஜெபிக்கிறேன். இந்த வாரம் யாராவது ஒருவரை, அவரின் பயணத்தில் ஊக்குவிக்க எனக்கு ஒரு வாய்ப்பைத் தாரும். இயேசுவின் நாமத்தினால். ஆமென்.
வேதவசனங்கள்
இந்த திட்டத்தைப் பற்றி
தேவனின் தயவைப் பற்றிய உண்மையை இன்று திருச்சபைக்குள்ளும் திருச்சபைக்கு வெளியேயும் அநேக செய்திகள் கறைப்படுத்தியுள்ளன. உண்மை என்னவென்றால், தேவன் நமக்கு நல்ல காரியங்களை கொடுக்க கடமைப்பட்டவரல்ல, ஆனால் அவர் அப்படி செய்ய விரும்புகிறார்! அடுத்த 5 நாட்கள் தேவனின் மறுக்கமுடியாத நற்குணத்தை, இவ்வுலக நெறி பிறழ்வுகளினூடும் கூட ஒரு புதிய கண்ணோட்டத்தோடு பார்க்க உங்களுக்கு உதவ முடியும்.
More