என்னவானாலும், தேவன் நல்லவராகவே இருக்கிறார் என்று நம்புதல்மாதிரி
ஆண்டவரை விடுத்து நன்மை எதுவும் இல்லை.
சிலர், ஆண்டவர் பெரும்பாலான நேரம் கோபமாகவே இருக்கிறார் என்றும், அவரது தயவு ஒரே ஒரு கணம்தான் நீடிக்கும் என்றும் எண்ணிக் கொள்கின்றனர், ஆனால் வேதாகமம் அதற்கு நேர் எதிர்மறையாக நமக்கு சொல்கிறது! உங்களை நீங்களே, ஒரு கெட்டுப்போன பழத்தைப்போல நினைத்து கொண்டாலும், நீங்கள் ஒருவரே அவரின் கண்ணின் மணி.
ஆண்டவர், நீங்கள் செய்த கெட்ட காரியங்கள் அல்லது நீங்கள் கூறிய வேண்டத்தகாத வார்த்தைகளைக் குறித்து அந்த கணம் கோபமாகவும் வருத்தமாகவும் இருந்திருந்தாலும், அவைகளைக் கடந்து சென்றுவிட்டார். ஆனால், நீங்கள் அதே போல் கடந்து சென்றுவிட்டீர்களா? பின்மாற்றம் அடைந்ததால் எங்கே அவர் தயவு உங்களை விட்டுபோய்விட்டதோ என்று கவலைப்பட வேண்டாம்.
ஆண்டவருடைய தயவு வற்றாத ஜீவநதியைப் போல புரண்டோடிக் கொண்டே இருக்கும். அவருடைய தயவு நம்மோடும் நம்மைச் சுற்றிலும் எப்போதுமே நிறைந்திருக்கும். அவருடைய தயவு நித்தியத்திற்கும் நிரந்தரம்!
இன்னும் சொல்லப்போனால், ஆண்டவரை விடுத்து நன்மை எதுவும் இல்லை; அவரிடமிருந்து மட்டுமே வருகிறதேயன்றி, அது தானாகவே எங்கிருந்தோ வந்துவிடவில்லை. நிச்சயமாக, மனிதர்களிடமிருந்தும் அது தோற்றுவிக்கப்படவில்லை( உங்கள் பிள்ளைகள் நல்லவர்களாகவோ அல்லது கெட்டவர்களாகவோ ஆவதற்கு பயிற்சி கொடுத்தீர்களா?).
நற்கிரியைகளுக்கும், நற்காரியங்களுக்கும் மூல காரணர் ஆண்டவர் ஒருவரே. ஆண்டவரையும், நற்கிரியைகளையும் சிலர் வேறுபடுத்துகின்றனர், ஆண்டவருக்கு நன்றி சொல்லி, மகிமைப்படுத்தி ஆராதிப்பதற்குப் பதிலாக, இது மனிதகுலத்திற்கே கேடு விளைவிக்ககூடும்
ஆண்டவரது நற்கிரியை, மற்றும் அவர் தயவு உங்கள் அன்றாட வாழ்வில் எவ்வாறு செயல்படுகிறது என்பதை பார்ப்பதற்கு உங்கள் கண்களை பயிற்றுவிப்பதே இத்திட்டத்தின் நோக்கம். அடுத்த 5 நாட்கள் ஆண்டவரின் தயவு என்னும் கண்கள் மூலமாய் உங்கள் வாழ்க்கையைக் காண போகிறீர்கள்.
சிந்தித்துப்பாருங்கள்: நீங்கள் மறந்திருக்ககூடிய, உங்கள் வாழ்க்கையில் நடந்த சில நல்ல காரியங்கள் யாவை?ஜெபியுங்கள், ஆண்டவரே என் வாழ்க்கையினுள் நீங்கள் இருப்பதற்கு நன்றி. என் வாழ்க்கையில் நடக்கின்ற எல்லா நற்காரியங்களுக்கான மூலகாரணர் நீர்தான் என்பதையும், நீரே என் வாழ்வில் தயவு காட்டுகிறீர் என்பதையும் என் அறிவுக்கண்களை திறந்து பார்த்து உணர்ந்துகொள்ள நீரே உதவும். இயேசுவின் நாமத்தினால். ஆமென்.
வேதவசனங்கள்
இந்த திட்டத்தைப் பற்றி
தேவனின் தயவைப் பற்றிய உண்மையை இன்று திருச்சபைக்குள்ளும் திருச்சபைக்கு வெளியேயும் அநேக செய்திகள் கறைப்படுத்தியுள்ளன. உண்மை என்னவென்றால், தேவன் நமக்கு நல்ல காரியங்களை கொடுக்க கடமைப்பட்டவரல்ல, ஆனால் அவர் அப்படி செய்ய விரும்புகிறார்! அடுத்த 5 நாட்கள் தேவனின் மறுக்கமுடியாத நற்குணத்தை, இவ்வுலக நெறி பிறழ்வுகளினூடும் கூட ஒரு புதிய கண்ணோட்டத்தோடு பார்க்க உங்களுக்கு உதவ முடியும்.
More