என்னவானாலும், தேவன் நல்லவராகவே இருக்கிறார் என்று நம்புதல்மாதிரி
சிறந்த நாடுபவராய் மாறுதல்
ஆண்டவரின் நன்மைகளை தினந்தோறும் தேடுவது, நம் வாழ்க்கையில் நல்ல காரியங்கள் நடக்கப் போகும் எதிர்பார்ப்பை வளர்த்துக்கொள்ள உதவுகிறது. ஆண்டவரின் நன்மைகள் ஒளிந்துகொள்வதில்லை, அவரின் நற்கிரியைகளும் ஏதோ சிறிது நேரம் மட்டுமே வந்துவிட்டுப் போவதில்லை. . . அதை கண்டுகொள்வதற்கானகண்கள் மட்டுமே அதற்கு தேவை. ஆண்டவரின் நற்கிரியைகளை குறித்து நாம் எப்போதும் கூர்ந்து உணர்வதில்லை, அதனால்தான் பவுல் அப்போஸ்தலன் தன் நண்பர்களுக்கு இதை குறித்ததான அறிவு வளர ஜெபித்தார்.
பவுல் எபேசுவில் உள்ள மூப்பர்களுக்கு கடிதம் எழுதியபோது, அவர்களின் "இதயகண்கள் திறக்கப்பட தான் ஜெபித்துக் கொண்டிருப்பதாக எழுதினார்." கூர்ந்து கவனியுங்கள்: நற்கிரியை நம்மை சுற்றி வியாபித்திருக்கிறது. நான் என் வாழ்க்கையில் என்னை சுற்றி நன்மைகளை தேடும்பொழுது, எங்கேயும் அது கிடைக்கும், எதிர்பாராத இடங்களிலிருந்தும் கிடைக்கும் என்றுணர்ந்தேன். சில நேரங்களில் நற்கிரியைகளை சிறிதுகூட நம்மால் உணர முடியாது, ஆனால் அது உச்சபட்ச உத்வேகத்தோடு நமக்காக வேலை செய்துகொண்டிருக்கிறது. உங்கள் வாழ்க்கையின் ஒவ்வொரு திருப்பத்திலும், நன்மைகளையும் அது தரும் முடிவுகளை இனம் காணவும், உங்கள் கண்களை பழக்கிக் கொள்ளுங்கள்.
நற்கிரியைகள் உங்களிடம் வந்து சேருவதும் அல்லது உங்களை விட்டுப் போவதும் உங்கள் மனப்போக்கையும் மனநிலையையும் பொறுத்தே இருக்கும். நற்கிரியைகள் யாரையும் வேறுபடுத்தி பார்க்காது, அதே சமயம் அது எல்லோருடைய மனநிலைக்கும் மனப்போக்கிற்கும் உகந்தது என்று அர்த்தமும் அல்ல. நன்றாய் நாடுபவர்களாய் நாம் மாறுவோமானால், நற்கிரியைகளை நம் வாழ்க்கையில் அதிகரிக்க செய்ய முடியும்.
சிந்தியுங்கள்: நன்மைகளைக் காணும்பொருட்டு உங்கள் மனதை ஒருமுகப்படுத்த, எப்படி மீண்டும் பயிற்றுவிக்க போகிறீர்கள்?
ஜெபியுங்கள்: என் வாழ்க்கையில் நீர் தரும் நன்மைகளை நான் காண்பதற்கு என் மனதை மீண்டும் பயிற்றுவித்துக் கொள்ள நீர் கொடுத்திருக்கிற தாலந்துகளுக்காக நன்றி. உமது நற்கிரியைகளை பற்றி சிந்தித்துக்கொண்டே இருக்கவும், இன்னும் நற்கிரியைகளை தினம் நான் எதிர்பார்த்திருக்கவும், அதற்கு நன்றாய் நாடுகிற ஒருவராய் நான் மாற வேண்டும். இயேசுவின் நாமத்தினால். ஆமென்.
இந்த திட்டத்தைப் பற்றி
தேவனின் தயவைப் பற்றிய உண்மையை இன்று திருச்சபைக்குள்ளும் திருச்சபைக்கு வெளியேயும் அநேக செய்திகள் கறைப்படுத்தியுள்ளன. உண்மை என்னவென்றால், தேவன் நமக்கு நல்ல காரியங்களை கொடுக்க கடமைப்பட்டவரல்ல, ஆனால் அவர் அப்படி செய்ய விரும்புகிறார்! அடுத்த 5 நாட்கள் தேவனின் மறுக்கமுடியாத நற்குணத்தை, இவ்வுலக நெறி பிறழ்வுகளினூடும் கூட ஒரு புதிய கண்ணோட்டத்தோடு பார்க்க உங்களுக்கு உதவ முடியும்.
More