என்னவானாலும், தேவன் நல்லவராகவே இருக்கிறார் என்று நம்புதல்மாதிரி
குடும்பத்தில் நற்கிரியை
எப்படி ஒரு தந்தையின் தயவு தன் பிள்ளைகளின் வாழ்க்கையின் ஊடாக புரண்டோடுகிறதோ; அதே போல் ஆண்டவரின் தயவும் நம் வாழ்க்கையின் ஊடாகவும் புரண்டோடுகிறது.(நம் கனவிலோ அல்லது நிஜத்திலோ கூட நினைத்துப் பார்க்க முடியாத அளவு தயவு பெருத்த தந்தை அவர்)ஆண்டவர் உங்களை நேசிக்கிறார். அவர் உங்களை தன் சொந்த பிள்ளையாகவே பாவிக்கிறார், அதனால்தான் உங்களுக்கு பரம்பரை ஆசீர்வாதத்தை அளிக்கிறார்.
மற்றவர்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டுமோ என்று நீங்கள் எண்ணவும் வேண்டாம், புரிந்து கொள்ள முடியாதவர்களுக்கோ அல்லது ஒத்துக்கொள்ள முடியாதவர்களுக்கோ ஆண்டவருடைய நற்கிரியைகளை நியாயப்படுத்தி புரியவைக்கவும் வேண்டாம். உங்கள் வெற்றிகளை விமர்சனம் செய்யவும், உங்கள் ஆசீர்வாதங்களை உதாசீனம் செய்யவும், ஒரு சிலர் எப்போதுமே இருப்பார்கள், ஏனென்றால் தகுதியுள்ள யாருக்கோ கிடைக்கவேண்டியதை நீங்கள் தட்டிக் கொண்டு போய்விட்டதாய் அவர்கள் நினைப்பதுதான் அதற்கு காரணம். இன்னும் சொல்லப்போனால் ஒரு வேளை யாரோ ஒருவர் அந்த ஆசீர்வாதத்திற்கே தகுதியற்றவர் நீங்கள் நினைத்திருப்பீர்களேயானால் (நாம் எல்லோரும் அவ்வாறு நினைத்த தருணங்கள் உண்டு. . .), நீங்கள் சரியாய்தான் கணித்திருக்ககூடும்! ஆனால் நாம் எல்லோரும் ஒரு தெளிவான உண்மையை தெரிந்துகொள்வோம்: தகுதியற்ற நாம் ஆசீர்வாதங்களை பெற்றுக் கொள்வோமேயானால், தகுதியற்ற யாரோ ஒருவர் ஆசீர்வாதங்களை பெறுவதை பார்த்து நாம் கோபம் கொள்ளக்கூடாது.
நாம் ஆண்டவரிடமிருந்து நற்கிரியைகளைப் பெறுவது ஆண்டவருடைய மகிமையின் வெளிப்பாடே. இதை நாம் புரிந்துகொண்டாலே, நமக்கு அருளப்பட்ட மகிமையின் அளவு எவ்வளவு பெரிது என்பது விளங்கிவிடும்.
சிந்தியுங்கள்: உங்கள் வாழ்க்கையில் எதிர்பாராத அல்லது தகுதியற்ற ஆசீர்வாதங்களை எத்தனை முறை பெற்றிருப்பீர்கள்?
ஜெபியுங்கள்:ஆண்டவரே, எனக்கு தகப்பனாய் இருப்பதற்கு நன்றி. என் உலகப்பிரகாரமான தகப்பன் எப்படி இருப்பினும், நீர் உதாரத்துவமான தந்தையாய் இருந்து, தொடர்ந்து என் எதிர்கால தேவைகளுக்கும் உம் நற்கிரியைகளை அளித்துக் கொண்டிருக்கிறீர். உம் பிள்ளையான நான், நீர் அளித்த இந்த குடும்ப ஆசீர்வாதங்களை நான் ஏற்றுக்கொள்ள எனக்கு கற்றுத்தாரும். இயேசுவின் நாமத்தினால். ஆமென்.
வேதவசனங்கள்
இந்த திட்டத்தைப் பற்றி
தேவனின் தயவைப் பற்றிய உண்மையை இன்று திருச்சபைக்குள்ளும் திருச்சபைக்கு வெளியேயும் அநேக செய்திகள் கறைப்படுத்தியுள்ளன. உண்மை என்னவென்றால், தேவன் நமக்கு நல்ல காரியங்களை கொடுக்க கடமைப்பட்டவரல்ல, ஆனால் அவர் அப்படி செய்ய விரும்புகிறார்! அடுத்த 5 நாட்கள் தேவனின் மறுக்கமுடியாத நற்குணத்தை, இவ்வுலக நெறி பிறழ்வுகளினூடும் கூட ஒரு புதிய கண்ணோட்டத்தோடு பார்க்க உங்களுக்கு உதவ முடியும்.
More