என்னவானாலும், தேவன் நல்லவராகவே இருக்கிறார் என்று நம்புதல்மாதிரி
![Believing God Is Good No Matter What](/_next/image?url=https%3A%2F%2Fimageproxy.youversionapi.com%2Fhttps%3A%2F%2Fs3.amazonaws.com%2Fyvplans%2F1930%2F1280x720.jpg&w=3840&q=75)
நற்கிரியைகளில் நங்கூரமிடுங்கள்
நீங்கள் ஏற்கெனவே இதைக் கேள்விப்பட்டிருக்கலாம்: வாழ்க்கை கடினமாய் இருக்கிறது: ஆண்டவர் நல்லவர்.இந்த எண்ண ஓட்டம், அடிக்கடி பேசப்படும் வெறும் வரிகளல்ல. இது ஒரு வலுவான, இறையுண்மை.ஆண்டவர் நல்லவராக இருந்தால் ஏன் இப்படி நடந்தது? ஏன் இந்த அநீதியை அனுமதித்தார்? ஏன் வாழ்க்கை இவ்வளவு சிரமமாய் இருக்கிறது? என்று சில அதிபுத்திசாலி மனிதர்கள் தங்களையே கேட்டுக் கொள்வார்கள். அந்த அதிபுத்திசாலி மனிதர்கள்தான் வாழ்க்கை சிரமமாய் இருக்கிறது, ஆண்டவர் நல்லவர் என்றும் சொல்லிக் கொள்கிறார்கள். ஒரு விஷயம் மற்றொன்றை ரத்து செய்வதில்லை. இதை "அறமுறை இறைமை வாதம்" என்று சொல்வார்கள்.
பெரும்பாலோர், வாழ்க்கை சிரமமாய் இருக்கிறது, அதனால் ஆண்டவர் நல்லவராக இருக்க முடியாது என்று நினைத்துக் கொள்கிறார்கள்-ஆனால் அது அப்படி அல்ல. இது, இது அல்லது அது என்ற சூழ்நிலை அல்ல. சில வருடங்களுக்குமுன், கீழ் வரும் வார்த்தைகளில் "ஏன்?" என்ற பகுதிக்கு என்னிடம் பதில் இல்லாததால் ("ஆண்டவர் நல்லவராக இருந்தால், பிறகு ஏன் ____?"), "இருந்தால்" என்ற வார்த்தையை நீக்கிவிட முடிவு செய்தேன். வேறு விதமாய் சொல்வதானால், எதுவானாலும் சரி. . . ஆண்டவர் நல்லவர் என்று நம்புவதற்கு முடிவு செய்தேன்.
ஆண்டவரின் நற்கிரியைகளிலும் நீங்கள் நங்கூரமிடலாம்.
உங்கள் சூழ்நிலைகளுக்கு மத்தியிலும் ஆண்டவரின் நன்மைகளை காண ஆரம்பியுங்கள். ஒரு வாய்ப்பிற்கான கதவு அடைக்கபட்டாலும், இன்னொரு வாய்ப்பை அடைவதற்கு, வேறொரு கதவை நீங்கள் திறக்க வேண்டும். இதேபோல் என் வாழ்க்கையில் பலமுறை நடந்துவிட்டதால், இதை நான் எதிர்பார்க்க ஆரம்பித்துவிட்டேன். இப்படிப்பட்ட சூழ்நிலைகளில் ஆண்டவர் எனக்கு செய்த நன்மைகளை நினைப்பூட்டி கொண்டு, ஆண்டவர் தரப்போகும் வாய்ப்பை பார்க்க ஆரம்பிப்பேன், ஏனென்றால் ஆண்டவர் எனக்காய் வைத்திருக்கும் மிக பெரிய திட்டங்கள் அப்போது வெளிப்படும் என்று எனக்குத் தெரியும். /p>
ஆண்டவரின் நற்கிரியைகளில் நங்கூரமிடுவது என்பது எப்போதுமே ஒரு பகுத்தறிவான காரியம். எப்படியெனில், அது வாழ்க்கையின் போராட்டங்களுக்கு எதிராக பிடிவாதமாய், உறுதியாய், விடாப்பிடியாய் போராடி, இவைகளுக்கு முன் ஆண்டவரின் மகத்துவம் சற்றேனும் குறையாமல் பார்த்துக் கொள்வதே.
சிந்தியுங்கள்: உங்கள் சூழ்நிலைகளுக்கு மத்தியிலும் எந்தெந்த வழிகளில், ஆண்டவரின் நன்மைகளை காண ஞாபகப்படுத்திக் கொள்வீர்கள்?
ஜெபியுங்கள்: ஆண்டவரே, உங்கள் நற்கிரியைகளில் நான் நங்கூரமிடுவதற்கு நீர் செய்த உதவிக்கு நன்றி. அங்குமிங்கும் பார்க்காமல், என் எல்லா சூழ்நிலைகளிலும் உம்முடைய தயவில் மட்டுமே கவனமாயிருப்பதற்கு எனக்கு பெலத்தை தாரும். இயேசுவின் நாமத்தினால். ஆமென்.
வேதவசனங்கள்
இந்த திட்டத்தைப் பற்றி
![Believing God Is Good No Matter What](/_next/image?url=https%3A%2F%2Fimageproxy.youversionapi.com%2Fhttps%3A%2F%2Fs3.amazonaws.com%2Fyvplans%2F1930%2F1280x720.jpg&w=3840&q=75)
தேவனின் தயவைப் பற்றிய உண்மையை இன்று திருச்சபைக்குள்ளும் திருச்சபைக்கு வெளியேயும் அநேக செய்திகள் கறைப்படுத்தியுள்ளன. உண்மை என்னவென்றால், தேவன் நமக்கு நல்ல காரியங்களை கொடுக்க கடமைப்பட்டவரல்ல, ஆனால் அவர் அப்படி செய்ய விரும்புகிறார்! அடுத்த 5 நாட்கள் தேவனின் மறுக்கமுடியாத நற்குணத்தை, இவ்வுலக நெறி பிறழ்வுகளினூடும் கூட ஒரு புதிய கண்ணோட்டத்தோடு பார்க்க உங்களுக்கு உதவ முடியும்.
More