இயேசுவின் உயிர்த்தெழுதல் உணர்த்தும் சத்தியம்!மாதிரி
கிருபை உலகத்தை இரட்சித்தது!
நேற்றைய தின தியானத்தை ஒரு சோகமான குறிப்போடு முடித்தோம். சாந்தகுணம் நிறைந்தவராய், வியாதியோடு வந்தோரையெல்லாம் சுகமாக்கி அனுப்பின இயேசுவின் மிக கொடூரமான மரணமே அது! மாசற்ற மனிதர் சிலுவையில் அறையப்பட்டார்.
இயேசுவின் சீஷர்கள் தனித்து விடப்பட்டதால், பயந்திருந்தனர். அவர் கூறியவாறே அவர் மரணத்தை ஜெயித்து வருவாரா? ஒருவேளை இவை அனைத்தும் போலியாக இருக்குமோ? ஒருவேளை அவர் கூறியது நிறைவேறுமோ? ஒருவேளை நாம் தான் ஏமாற்றப்பட்டோமோ?
எனது நண்பர் ஜேசன் அவர்களின் இரண்டு காணொளிகளை இந்த தியான திட்டத்தில் பார்த்தீர்கள். அந்த சிறிய கம்பளிப்பூச்சிகளை ஞாபகம் இருக்கிறதா? இயேசுவின் உயிர்தெழுதலின் சம்பவம் உங்களுக்கும் இந்த உலகத்திற்கும் உணர்த்தும் சத்தியம் என்னவென்பதை அறிந்துகொள்ள ஜேசன் அவர்களின் கடைசி காணொளியையும் பாருங்கள்!
இயேசுவின் உயிர்தெழுதலின் நாள் வந்தது! அவர் மரணத்தோடு இல்லை! அவர் என்றென்றுமாக ஜீவிக்க போகிறார்! இந்த மனுக்குலத்தின் பாவத்தை எல்லாம் சிலுவையில் சுமந்து தீர்த்துவிட்டார். நாம் செய்யவேண்டியதெல்லாம், இயேசு கிருபையாக நமது பாவங்களை எல்லாம் மன்னித்து, நமக்காக உயிரோடு எழுந்தார் என்பதை நம் இருதயத்தில் சந்தேகமின்றி விசுவாசிப்பது தான். தேவனுக்கு ஆதியில் ஒரு திட்டம் இருந்தது. அதிலிருந்து இடறிய நம்மை மறுபடியும் இயேசுவின் மூலம் தமது திட்டத்தில் இணைத்துக்கொண்டார்!
என்ன ஆச்சரியம். பூட்டிய அறைக்குள் பயந்து ஒளித்துக்கொண்டிருந்த இயேசுவின் சீஷர்கள் அனைவரின் இருதயமும் இப்பொழுது மகிழ்ச்சியால் துள்ளியது. அவர்கள் இயேசு கூற கேட்ட அனைத்துமே சத்தியம் என்பது உறுதிப்பட்டது. இந்த மனுக்குலத்தின் மீட்புக்காக இயேசு மரித்து உயிர்த்தார் என்ற சத்தியத்தை இந்த உலகெங்கும் பறைசாற்றுவதற்காக தமது வாழ்வையே அர்பணித்தனர்!
இந்த நல்ல செய்தியை கூறுவதனால் சிறைசெல்லவும் தயாராக இருந்தனர். அவர்கள் எந்த நிலையிலும் இந்த நற்செய்தியை பரப்புவதை நிறுத்தாததினால் அவர்களில் அநேகர் கொல்லப்பட்டனர். அன்றைய காலங்களில் இருந்த அதிகாரிகள், இந்த நல்ல செய்தி அதிகமாக பரவுவதால், மக்கள் அவர்களுக்கு எதிராக கலகம் பண்ண கூடும் என்ற பயத்தினாலும், பொறாமையினாலும் தங்களால் முடிந்தவரையிலும் இந்த செய்தி பரவுவதை தடுக்க முயற்சித்தனர். ஆனாலும், மனிதனை தேவனோடு மறுபடியும் இணைக்க இயேசு செய்த காரியம், நற்செய்தியாக உலகெங்கும் வேகமாக பரவியது. நெருக்கங்கள் பெருக பெருக சுவிசேஷமும் பரவியது. அப்படியாக பரவிய இந்த நல்ல செய்தி, இன்று இந்த தியானத்தை வாசித்துக்கொண்டிருக்கும் உங்களையும் வந்தடைகிறது. இந்த உலகத்தின் மீது தேவன் காண்பித்த அன்பின் இந்த நற்செய்தி, பரவுவதை யாராலும் தடுக்க முடியாது!
இயேசு மரித்த வெள்ளிக்கிழமையன்றும் சனிக்கிழமையன்றும் சீஷர்கள் மிகவும் சோகத்துடனும் பயத்துடனும் நிறைந்திருந்தனர். ஆனால், இயேசுவின் உயிர்தெழுதலின் நாள் அவை அனைத்தையும் மாற்றிப்போட்டது. எக்காலத்திலும் வாழும் சகல மனிதர்களின் வாழ்வையும் இந்த நல்ல செய்தி மாற்றிப்போடும்! அவர் உயிர்த்தெழுந்தார்!
உங்களையே கேட்டுக்கொள்ளுங்கள்: இயேசுவின் சீஷர்களில் பெரும்பாலானோர் மீனவர், விவசாயி போன்ற சாதாரண மனிதர்களே. இயேசுவின் உயிர்த்தெழுதலை, தேவனுடைய மன்னிப்பின் கிருபையை இதனை துணிவுடன் உலகெங்கும் பிரசங்கிற்கும் அளவிற்கு அவர்களுக்கு தைரியம் எவ்வாறு வந்திருக்கும்?
ஜெபம்: அன்புள்ள பிதாவே, இயேசுவின் மூலமாக கிருபையாக நீர் எங்களுக்கு தந்த இந்த நித்தியஜீவனுக்காக உமக்கு நன்றி! உலகம் கேட்கக்கூடிய சிறந்த நற்செய்தி இதுவே. நீர் எப்பொழுதும் எங்கள் அருகிலேயே இருக்கிறீர் என்பதை நாங்கள் என்றும் உணர்ந்திருக்க கிருபை செய்யும். உம்மோடு கூட நெருங்க, நான் நேர்தியானவனாக இருக்க வேண்டிய அவசியம் இல்லை, ஏனென்றால் உம்முடைய கிருபை என்னை என்றும் சூழ்ந்திருக்கிறது. எல்லாவற்றிற்காகவும் நன்றி பிதாவே. ஆமென்.
வேதவசனங்கள்
இந்த திட்டத்தைப் பற்றி
ஒருமுறை, தம்முடைய மரணத்தையே ஒருவர் முன்னறிவித்தார். அவர் தமது மரணத்தை அறிவித்தது மட்டுமல்ல, 3 நாட்களில் உயிரோடு எழுந்திருப்பேன் என்றும் அறிவித்தார். ஆம், அவர் தாம் முன்னறிவித்தபடியே மரித்து, மூன்றாம் நாளில் உயிரோடு எழுந்தார்! அவர் பெயர், இயேசு! அவருடைய மரணமும் உயிர்த்தெழுதலும் சத்தியமானவை. அவைகளை நினைவு கூறும் வண்ணமாகவே இந்த ஈஸ்டர் நாளை உலகம் முழுவதும் இருக்கிற கிறிஸ்தவர்கள் அனைவரும் கொண்டாடுகின்றனர். இயேசு உயிர்த்தெழுந்த சத்தியம் நமக்கு இன்று உணர்த்துவது என்னென்ன என்பதை அடுத்த சில நாட்களில் இந்த வேதாகம திட்டத்தின் கீழ் நாம் தியானிக்க இருக்கிறோம்!
More