இயேசுவின் உயிர்த்தெழுதல் உணர்த்தும் சத்தியம்!மாதிரி
… ஆனாலும், நாம் எதிர்பார்த்த இரட்சகரை நாம் பெறவில்லை
இரட்சகர் வரப்போகிறார் என்று தீர்க்கதரிசிகள் தீர்க்கதரிசனம் உரைத்துக்கொண்டிருந்தனர். ஏசாயா மாத்திரம் அல்ல. பழைய ஏற்பாட்டில் அநேகம் தீர்க்கதரிசிகள் இரட்சகர் இயேசுவை முன்னறிவித்திருக்கின்றனர். இரட்சகர் எப்படி வருவார், எங்கே பிறப்பார், எப்படி வாழ்வார், எப்படி மரிப்பார், எப்படி உயிர்த்தெழுவார் என்று அநேகம் காரியங்களை தீர்க்கதரிசனமாக முன்னறிவித்து இருக்கிறார்கள்!
நேற்றைய தினத்தில் நாம் வாசித்த வேதப்பகுதியிலிருந்து வரப்போகும் இரட்சகர் எத்தகைய பாடுகளை அனுபவிப்பார் என்று ஜனங்கள் அறிந்துகொண்டார்கள். ஆனாலும், தேவ ஜனங்கள், தங்களை இரட்சிக்க வரப்போகும் இரட்சகரை குறித்து தங்கள் சொந்த கற்பனைகளை எதிர்பார்ப்புகளை வைத்திருந்தார்கள். "உலகத்தின் இரட்சகர்" என்ற வார்த்தையை கேட்டவுடன் உங்கள் மனதிற்குள் வரும் காட்சி என்ன? அன்றைய தேவ ஜனங்கள் எப்படிப்பட்ட ஒரு இரட்சகரை எதிர்பார்த்திருப்பார்கள் என்று உங்களுக்கு நன்றாக இப்பொழுது புரியும். ஜனங்களுக்கு எப்படிப்பட்ட எதிர்பார்ப்பு இருந்ததென்று மேலும் தெரிந்துகொள்ள கீழ்காணும் காணொளியை பாருங்கள்.
பார்த்தீர்களா? யூதேயாவிலுள்ள பெத்லகேமில் பிறப்பார் என்று முன்னறிவிக்கபட்டிருந்தும், உண்மையாகவே யூதேயாவிலிருந்து நன்மை பிறக்குமோ என்று ஜனங்கள் யோசித்துக்கொண்டிருந்தார்கள். தேவன் நம்மை எவ்வாறு ஆச்சரியப்படுத்துகிறார், பார்த்தீர்களா? அற்பமான துவக்கங்களிலும், உண்மையுள்ள மனதிலும் அவர் எவ்வாறு கிரியை செய்கிறார் என்று நமக்கு உணர்த்த விருப்பம் கொண்டிருக்கிறார்.
இன்றைய தினத்திலும், இயேசு எப்படி ஒரு எளிய பிறப்பின் மூலம் இந்த பூமிக்கு வந்தார், எப்படி தனது சொந்த மரணத்தையே முன்னறிவித்தார் என்று பார்க்க போகிறோம். மாத்திரமல்ல, அவர் தாம் மூன்றாம் நாள் உயிர்த்தெழப்போவதையும் எவ்வாறு முன்னறிவித்தார் என்று பார்க்க போகிறோம்.
இயேசு தம்மை மனுஷகுமாரன் என்றும், தேவனை தனது பிதாவென்றும் அடிக்கடி சொல்லிக்கொண்டே இருந்தார். அவர் கரத்தின் அற்புதங்களை அவருடன் இருந்த ஜனங்கள் கண்டனர். உலகத்திற்கு ஒத்த கவர்ச்சிகள் அவரிடம் இல்லையென்றாலும், அவர் தனது நிஜத்தன்மையுடன் இருந்தார். அவரை போன்று ஜனங்களை அறிந்திருந்த, புரிந்திருந்த வேறொருவரை இந்த உலகம் பார்த்ததில்லை. அவர் கிருபையினாலும் சத்தியத்தினாலும் நிறைந்தவராய் இருந்தார். மிகவும் அதிசயிக்கத்தக்க அற்புதங்களை அவர் நிகழ்த்த கண்ட அவருடைய சீஷர்களுக்கும், அவர் தம்மை குறித்து சொன்னதை சந்தேகமின்றி விசுவாசிப்பதை தவிர வேறு வழியில்லை. ஆனால், இவ்வாறாக அதிசயங்களை நிகழ்த்துபவராக கண்ட இயேசு, ஒரு வெள்ளிகிழமையன்று பாடுபடுவதையும், சிலுவையில் அறையப்படுவதையும், அவர் சுற்றிலும் இருந்த அநேகரால் ஏளனம் செய்யப்படுவதையும் புரிந்துகொள்ள முடியவில்லை. அனைத்தும் முடிந்துவிட்டதோ என்ற எண்ணம் அவர்களை சூழ்ந்திருக்கும். இயேசுவை தொடர்ந்து தாங்களும் இத்தகைய கொடூரமுறையில் அதிகாரிகளால் கொலை செய்யப்படுவோமோ என்ற பயமும் சூழ்ந்திருக்கும். பயத்தினால், பூட்டிய அறைக்குள் தங்களை பாதுகாப்பாக அடைத்துக்கொண்டனர்.
இயேசு மூன்றாம் நாளில் உயர்த்தெழுவார், அவருடைய உயிர்தெழுதலின் நாள் நெருங்குகின்றது என்ற விசுவாசம் இருந்திருக்குமோ? இயேசு நிச்சயம் மரணத்தை ஜெயமாய் விழுங்குவார் என்ற நம்பிக்கை இருந்திருக்குமோ? அவ்வளவு துணிவு இருந்திருக்குமா என்றால், சந்தேகமே. இந்த உலகம் ஒரு பெரிய மாற்றத்தை சந்திக்க தயாராகிக்கொண்டிருக்கிறதோ?
உங்களையே கேட்டுக்கொள்ளுங்கள்: ஒருவர், தாம் தான் தேவனுடைய குமாரன் என்று தம்மை உங்களிடத்தில் நிரூபிக்க என்ன செய்ய வேண்டியதாயிருக்கும்? இயேசு இந்த பூமியில் வாழ்ந்த நாட்களில், நீங்களும் வாழ்ந்திருந்தால், அவரை தேவ குமாரனாக ஏற்றுக்கொண்டிருப்பீர்களா? அவ்வாறு ஏற்றுக்கொள்ள உங்கள் மனது எதனை எதிர்பார்த்திருக்கும்?
ஜெபம்: அன்புள்ள இயேசுவே, நீர் இத்தனை தயவுள்ளவராக, சாந்தமுள்ளவராக, தாழ்மையுள்ளவராக இருப்பதற்காக நன்றி. இந்த உலகம் எத்தகைய இரட்சகருக்காக ஏங்கி நின்றதோ, அப்படிப்பட்ட ஒருவராகவே நீர் இந்த பூமிக்கு வந்தீர். எங்கள் மனிதகுலத்தின் பாவத்திற்கான வலி நிறைந்த அந்த பெருந்தொகையை எங்கள் சார்பாக நீர் சிலுவையில் செலுத்தியதற்காக நன்றி. எங்கள் மீது நீர் வைத்திருக்கும் அளவுகடந்த அன்பிற்காக நன்றி. நாங்களும் உம்மை மனதார நேசிக்க எங்களுக்கு உதவி செய்யும். இயேசுவின் நாமத்தில் ஜெபம் செய்கிறோம் எங்கள் நல்ல பிதாவே, ஆமென்.
இந்த திட்டத்தைப் பற்றி
ஒருமுறை, தம்முடைய மரணத்தையே ஒருவர் முன்னறிவித்தார். அவர் தமது மரணத்தை அறிவித்தது மட்டுமல்ல, 3 நாட்களில் உயிரோடு எழுந்திருப்பேன் என்றும் அறிவித்தார். ஆம், அவர் தாம் முன்னறிவித்தபடியே மரித்து, மூன்றாம் நாளில் உயிரோடு எழுந்தார்! அவர் பெயர், இயேசு! அவருடைய மரணமும் உயிர்த்தெழுதலும் சத்தியமானவை. அவைகளை நினைவு கூறும் வண்ணமாகவே இந்த ஈஸ்டர் நாளை உலகம் முழுவதும் இருக்கிற கிறிஸ்தவர்கள் அனைவரும் கொண்டாடுகின்றனர். இயேசு உயிர்த்தெழுந்த சத்தியம் நமக்கு இன்று உணர்த்துவது என்னென்ன என்பதை அடுத்த சில நாட்களில் இந்த வேதாகம திட்டத்தின் கீழ் நாம் தியானிக்க இருக்கிறோம்!
More