இயேசுவின் உயிர்த்தெழுதல் உணர்த்தும் சத்தியம்!மாதிரி
ஒரு மீட்பர் தேவைப்பட்டார்...
காரியங்கள் இவ்வாறாக மோசமடைந்துகொண்டிருந்தது. ஆனலும், தேவன் நம் மீது கொண்டிருந்த அன்பிலும் அக்கரையிலும் மாறவில்லை. அவர் ஒருநாளும் நம்மை விட்டுவிடவில்லை. காரணம், அவர் நம் மீது வைத்திருந்த அன்பை நாம் விளங்கி கொள்ள நமக்கு அதிக காலஅவகாசம் தேவை என்பதை அறிந்திருந்தார். அவர் அன்பை நாம் விளங்கிக்கொண்டு, நாமாகவே அவரை அண்டிக்கொள்வதற்கு ஏற்றவாறு சரித்திரத்தை வடிவமைத்தார்.
தேவன் படைத்த இந்த அழகான உலகத்தை, பாவம் மிகவும் மோசப்படுத்தி இருந்தது. ஆண்கள், பெண்கள் என அனைவருடைய மனதையும் பாவம் கெடுத்துப்போட்டது. சண்டை, பகை, பொறாமை, பொய், ஏமாற்றுதல், திருடுதல் என பல மோசமான காரியங்கள் பாவத்தினால் மனிதகுலத்திற்குள் வந்தது. பாவத்தினால் ஏற்படும் விளைவுகளும் மனிதர்களின் தலைகளின் மேல் கூடிக்கொண்டே இருந்தது.
ஆனால், தேவனுக்கு ஒரு திட்டம் இருந்தது. மிகவும் மோசமடைந்த இந்த உலகத்தை மீட்க தேவன் என்ன செய்தார் தெரியுமா? உலகத்தையும், அதிலிலுள்ள நம்மையும் மீட்க, நம் சார்பாக பாவத்தை ஜெயிக்க, தேவன் என்ன செய்தாரென்று அறிந்துகொள்ள இந்த காணொளியை காணுங்கள்!
காணொளியில், இந்த வார்த்தையை கவனித்தீர்களா? - "பாவம் விலை உயர்ந்த ஒன்று". அப்படியென்றால் என்ன?
ஆம், பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்புவரை, பாவம் விலை உயர்ந்ததாக இருந்தது. ஏனென்றால், பாவத்திற்கு பரிகாரமாக தேவன் பழுதற்ற கொழுத்த மிருகங்களின் பலிகளை கட்டளையிட்டிருந்தார் - மனிதர்களின் கவனத்தை ஈர்ப்பதற்காகவே. பாவத்திற்கென்று ஒரு விலை இருக்கிறது. பக்தியுள்ளவர்களின் பாவ பெருக்கத்தை இப்படிப்பட்ட பலிகள் நிறுத்தும், குறைக்கும் என்று தேவன் அறிந்திருந்தார். மனிதர்களின் பாவத்தினால், உலகம் பாதிக்கப்படுவதை மறைமுகமாக உணர்த்தினார். பாவத்தின் சம்பளம் மரணம். பாவத்தின் விலையும் மரணமே.
ஆனால், அந்த பலிகள் நெடுநாளுக்கு உதவவில்லை. பாவங்களும் அதிகரித்துக்கொண்டே இருந்தது. மோசமடைந்த இந்த அழகான உலகத்தை சீர்படுத்தி, மீண்டும் தேவன் படைத்த அந்த ஆதி நிலைமைக்கே திருப்புவதற்கு ஒரே ஒரு வழி தான் இருந்தது. ஆனால், அது மனிதர்களால் கொடுக்க முடியாத விலையை கொண்டிருந்தது. மனிதனால் ஒருநாளும் பரிசுத்தமாய் மாறமுடியாது. தேவன் ஒருவரே பரிசுத்தர். ஆனால், பாவத்திற்கான விலையை செலுத்தி உலகத்தை ஆதி நிலைக்கு மீட்க, பாவமற்ற ஒருவர் தேவைப்பட்டார். எனவே, அப்படிப்பட்ட ஒரு மீட்பரை அனுப்பப்போவதாக தேவன் தமது வார்த்தையை தம் ஊழியர்கள் மூலமாக இந்த உலகிற்கு அனுப்ப துவங்கினார். ஒரு மீட்பர் வரப்போகிறார்! பாவம் உண்டாக்கின மோசத்திலிருந்து இந்த உலகை மீட்கும் விலையை அவர் செலுத்த போகிறார்.
இயேசு பிறப்பதற்கு சுமார் 700 ஆண்டுகளுக்கு முன்பாகவே ஏசாயா தீர்க்கதரிசி மூலமாக தேவன் முன்னறிவித்த சில காரியங்களை இன்று நாம் வாசிக்க இருக்கிறோம். அசட்டைபண்ணப்பட்ட, மனுஷரால் புறக்கணிக்கப்பட்ட, அடித்து நொறுக்கப்பட்டு மரித்த ஒருவரை குறித்து 53ஆம் அதிகாரத்தில் நம்மால் வாசிக்க முடியும். அவர் நம்முடைய அக்கிராமத்தின் நிமித்தம் இவைகளை அனுபவித்தார் என்று அதே அதிகாரத்தில் நம்மால் வாசிக்க முடியும். அப்படியென்றால் இது யாரை குறித்து பேசுகிறது? ஆம், இந்த உலகத்தின் இரட்சகர் - இயேசுவை குறித்தே பேசுகிறது!
இதில் ஆச்சரியம் என்னவென்றால், இவை அனைத்தும் நடந்து முடிந்த ஒரு சம்பவம் போல கடந்த காலத்தில் எழுதப்பட்டிருக்கும். ஆனால், உண்மையில் இது நூற்றுக்கணக்கான வருடங்களுக்கு பின் நடக்கவிருக்கும் ஒன்று. ஏனென்றால், பழைய ஏற்பாடு எழுதப்பட்ட பண்டைய எபிரேய மொழியில் எதிர்காலத்தை குறிக்கும் சொற்கள் இல்லை. நாம் இக்காலத்தில் பயன்படுத்தும் மொழிகளை போல காலங்கள், அம்மொழியில் இல்லை. இன்று நீங்கள் வாசித்த இந்த வேதப்பகுதி உண்மையில் எதிர்காலத்தை குறித்து, அதாவது தீர்க்கதரிசனமாக எழுதப்பட்டது. மாற்றமின்றி அடுத்து நடக்கவிருக்கும் காரியங்களை கூறும்போதும், கடந்தகாலத்தில் கூறுவது வழக்கம் அல்லவா! இந்த புஸ்தகம் எழுதப்பட்ட காலத்தில் இருந்த தேவ ஜனங்களுக்கு, இது வருங்காலத்தில் நடக்கவிருக்கும் ஒன்றென்பது மிக நன்றாகவே தெரியும். வருங்காலத்தில் தேவன் அனுப்பப்போகிற மீட்பரை குறித்தே இந்த வசனங்கள் எழுதப்பட்டிருக்கிறது, அவர் வந்து இந்த உலகத்தின் பாவத்தை நீக்கி நம்மை இரட்சிப்பார் என்பதை அவர்கள் நன்றாகவே அறிந்திருந்தனர். பலநூறு ஆண்டுகளுக்கு பின் நடக்கவிருக்கும் ஒன்றாகவே இருந்தாலும், அவர்களுக்கும் இது ஒரு நற்செய்தியே!
இயேசுவின் உயிர்தெழுதலின் நாளுக்கு நாம் இன்னும் வரவில்லையென்றால், அதனை நெருங்கிவிட்டோம்!
உங்களையே கேட்டுக்கொள்ளுங்கள் : தேவன் நமக்கு அளித்த கிருபை இலவசமானது என்பதை ஏன் சிலர் நம்ப மறுக்கின்றனர்? ஒருவரை மன்னிக்கவேண்டிய சூழலில், நான் எளிதில் அவர்களை மன்னிக்கிறேனா? அல்லது மன்னிப்பதற்கு முன் அவர்கள் தங்கள் தவறை உணர்வதையோ, அதற்காக தண்டிக்கப்படுவதையோ விரும்புகிறேனா?
ஜெபம் : அன்பு தகப்பனே, எங்கள் பாவங்களுக்காக நீர் மரிக்க துணியும் அளவிற்கு எங்களை நேசிப்பதற்காக நன்றி. எங்களால் ஒருபோதும் பாவத்திற்கான அந்த விலையை செலுத்தியிருக்க முடியாது. எங்கள் மீது நீர் காண்பித்த இந்த தாராளமான அன்பிற்காக உமக்கு நன்றி. உமது கிருபை எங்கள் புரிந்துகொள்ளுதலுக்கு அப்பாற்பட்டது. நன்றி தகப்பனே. இயேசுவின் மூலம் ஜெபம் கேளும் நல்ல பிதாவே, ஆமென்.
வேதவசனங்கள்
இந்த திட்டத்தைப் பற்றி
ஒருமுறை, தம்முடைய மரணத்தையே ஒருவர் முன்னறிவித்தார். அவர் தமது மரணத்தை அறிவித்தது மட்டுமல்ல, 3 நாட்களில் உயிரோடு எழுந்திருப்பேன் என்றும் அறிவித்தார். ஆம், அவர் தாம் முன்னறிவித்தபடியே மரித்து, மூன்றாம் நாளில் உயிரோடு எழுந்தார்! அவர் பெயர், இயேசு! அவருடைய மரணமும் உயிர்த்தெழுதலும் சத்தியமானவை. அவைகளை நினைவு கூறும் வண்ணமாகவே இந்த ஈஸ்டர் நாளை உலகம் முழுவதும் இருக்கிற கிறிஸ்தவர்கள் அனைவரும் கொண்டாடுகின்றனர். இயேசு உயிர்த்தெழுந்த சத்தியம் நமக்கு இன்று உணர்த்துவது என்னென்ன என்பதை அடுத்த சில நாட்களில் இந்த வேதாகம திட்டத்தின் கீழ் நாம் தியானிக்க இருக்கிறோம்!
More