தீர்க்கமான பிராத்தனைகள்மாதிரி

Dangerous Prayers

7 ல் 7 நாள்

என்னை தொந்தரவு செய்யுங்கள்

நாம் எதைப் பற்றி ஜெபிக்கிறோம் என்பது முக்கியம். அது முக்கியமானது தான், ஆனாலும் அது நம்மை வெளிப்படுத்துகிறது.

நம்முடைய ஜெபங்களின் உள்ளடக்கம், நம்மை பற்றியும், தேவனுடனான நமது உறவைப் பற்றியும் அதிகம் கூறுகிறது. நாம் ஜெபிப்பதிலிருந்து தேவனைப் பற்றிய நம்முடைய நம்பிக்கை பிரதிபலிக்கிறது. நம்முடைய ஜெபமானது பெரும்பாலாக “நமக்கு” ​​அல்லது “நமக்கு எது முக்கியம்” என்பதைப் பற்றியே இருந்தால், நம்முடைய ஜெபங்களின் உள்ளடக்கம், தேவன் நமக்காக மட்டுமே முதன்மையாக இருக்கிறார் என்னும் நமது ஆழமான நம்பிக்கையை பிராத்திபலிக்கிறது.

எனவே சிறிது நேரம் ஒதுக்கி பிரார்த்தனை தணிக்கை செய்யுங்கள். கடந்த ஏழு நாட்களில் நீங்கள் சமீபத்தில் ஜெபித்த எல்லாவற்றையும் பற்றி சிந்தியுங்கள். உங்கள் வாழ்நாள் முழுவதும் அல்ல. ஒரு காகிதத்தினை எடுத்து எழுதுவது அல்லது உங்கள் தொலைபேசியில் ஒரு மெமோவைத் தட்டச்சு செய்வது மற்றும் கடந்த வாரத்தில் நீங்கள் கடவுளிடம் வேண்டுகோள் விடுத்த அனைத்து வெவ்வேறு விஷயங்களையும் பட்டியலிடுங்கள். ஒரு கணம் எடுத்து கொஞ்சம் சிந்தியுங்கள். உங்களுக்கு நினைவிருக்கிறதா? நீங்கள் எதைப் பற்றி ஜெபித்தீர்கள்? தேவனை என்ன செய்யச் சொன்னீர்கள்?

இப்போது நேர்மையாக பதிலளிக்கவும். கடந்த ஏழு நாட்களில் நீங்கள் ஜெபித்த ஒவ்வொரு ஜெபத்திற்கும் தேவன் ஆம் என்று சொன்னால், உலகம் உங்களுக்கு எப்படி வித்தியாசமாக இருந்திருக்கும்?

உங்கள் பிரார்த்தனைகள் இயல்பான, பாதுகாப்பானவை என்றால், ஒருவேளை நீங்கள் ஒரு நல்ல நாளினை அனுபவித்திருப்பீர்கள், பாதுகாப்பாக இருந்திருக்கலாம் அல்லது ஆசீர்வதிக்கப்பட்ட இரட்டை சீஸ் பர்கர், பொரியல் மற்றும் டயட் கோக் ஆகியவற்றை அனுபவித்திருக்கலாம்.

பல ஆண்டுகளாக, நான் ஒரு பிரார்த்தனை தணிக்கை செய்திருந்தால், முடிவுகள் மோசமாக இருந்திருக்கும். நான் அவரிடம் கேட்ட ஒரு வார காலப்பகுதியில் தேவன் எல்லாவற்றையும் செய்திருந்தால், உலகம் மிகவும் வித்தியாசமாக இருந்திருக்காது. நேர்மையாக சொல்லப்போனால், சில வாரங்களில் நான் எதற்கும் ஜெபித்திருக்க மாட்டேன். மற்ற வாரங்களில், நான் பிரார்த்தனை செய்திருக்கலாம், ஆனால் பிரார்த்தனைகள் அனைத்தும் என்னைப் பற்றியதாகவே இருந்திருக்கும், அது என் வாழ்க்கையில் உள்ள விஷயங்களில் பெரிய திட்டத்தில் பெரிதும் மாற்றத்தை ஏற்படுத்தி இருக்காது.

எனது பிரார்த்தனை மிகவும் பாதுகாப்பான ஒன்று தான்.

பிரபஞ்சத்தின் படைப்பாளரும், பராமரிப்பாளருகக்கும் எனக்கு அணுகல் இருந்தது. பெரியவர். ஆல்பா மற்றும் ஒமேகா. ஆரம்பம் மற்றும் முடிவு. பரலோகத்திலிருந்து நெருப்பை அனுப்பவோ, பசியுள்ள சிங்கங்களின் வாயை அடைக்கவோ ​​அல்லது பொங்கி எழும் புயலை அமைதிப்படுத்தவோ வல்லவர், எப்போதும் இருப்பவர், எல்லாம் அறிந்தவர். இப்படி பட்ட அந்தசாரசாரதின் தேவன் ஆனால் நான் அவரிடம் கேட்டது எல்லாம் என்னைப் பாதுகாப்பாக வைத்து, ஒரு நல்ல நாளில் வாழ எனக்கு உதவுங்கள் என்பதே.

பல ஆண்டுகளாக, நான் ஒருபோதும் குறுக்கிட விரும்பவில்லை. ஆனால் மிகவும் ஆபத்தான ஜெபங்களை ஜெபித்தபின், தேவனின் மென்மையான தூண்டுதல்கள் எனது சுயநலத் திட்டங்களைத் தவறாமல் குறுக்கிடும் என்பதையும், அவர் என்னைஅவருடைய நித்திய விருப்பத்தை நோக்கி வழிநடத்துவார் என்பதையும் கண்டுபிடித்தேன்.

என் நம்பிக்கை வலுவானது.

எனது வாழ்க்கை வளமானது.

என் இதயம் நிறைவானது.

நீங்கள் அதிக வெளிப்படைத்தன்மையுடன் ஜெபித்தால் உங்கள் வாழ்க்கை எவ்வாறு வேறுபட்டும் என்பதைப் பற்றி சிந்தியுங்கள். நீங்கள் அதிக ஆபத்துக்களை சந்திக்க திட்டமிடும் போது அவர் உங்களுக்காக ஏதாவது செய்வார் என்று நம்புவதற்குப் பதிலாக தேவனால் உங்களில் என்ன செய்யக்கூடும் என்பதற்கு நீங்கள் இன்னும் திறந்திருக்க வேண்டும். நீங்கள் தைரியமான ஜெபங்களை ஜெபித்தால் என்ன? பெரியதாக கனவு கண்டால் என்ன? தைரியமாக, சுயத்தினை கைவிட்டு விசுவாசத்துடன் பொறுப்பற்ற முறையில் ஆனால் இயேசுவை மட்டும் பின்தொடர்ந்தால் என்ன?

நீங்கள் ஜெபிக்கும் முறையை மாற்ற வேண்டிய நேரம் இது. பாதுகாப்பான, வசதியான, யூகிக்கக்கூடிய, மற்றும் எளிதில் ஜெபிக்கக்கூடிய பிரார்த்தனைகளை கைவிடுவதற்கான நேரம் இது. தைரியத்துடன் ஜெபிக்க வேண்டிய நேரம், ஆபத்துகளுக்கு, ஒரு சிறந்த இடத்திற்கு வேறு பாதையில் உங்களைத் திறந்து கொள்வதற்கான நேரம். ஆபத்தான பிரார்த்தனைகளைத் தொடங்குவதற்கான நேரம் இது.தொந்தரவு செய்ய வேண்டிய நேரம் இது.

நீங்கள் உண்மையிலேயே பூமியில் ஒரு மாற்றத்தை உருவாக்க விரும்பினால், உங்களுக்கு வானபாரியந்ததிலிருந்து சக்தி தேவை. உங்கள் வாழ்க்கை முக்கியமானது என்று நீங்கள் விரும்பினால், பெரிய, தைரியமான, துணிச்சலான பிரார்த்தனைகளைச் செய்ய வேண்டிய நேரம் இது.

தேவனை தேடுங்கள், பெரியதாக கனவு காணுங்கள். தோல்வி பயத்தினை மறுத்திடுங்கள். வெளியேற வேண்டிய நேரம் இது. நம்புவதற்கு. தைரியப்படுவதற்கு. விசுவாசிப்பதற்கு. உங்கள் வாழ்க்கை எப்போதும் பாதுகாப்பாக இருக்காது. இதற்கு விசுவாசம் வேண்டும். ஆனால் நம்பிக்கை இல்லாமல், தேவனை பிரியப்படுத்துவது சாத்தியமில்லை.

நீங்கள் எதற்காக காத்திருக்கிறீர்கள?

கிரேக் குரோஷெலின் புதிய புத்தகம், ஆபத்தான பிரார்த்தனைகள் பற்றி மேலும் அறிய

நாள் 6

இந்த திட்டத்தைப் பற்றி

Dangerous Prayers

உங்கள் விசுவாசத்துடன் பாதுகாப்பாக விளையாடி களைப்படைந்து விட்டீர்களா? உங்கள் அச்சங்களை எதிர் கொள்ளவும், உங்கள் விசுவாசத்தை பேணிவளர்க்கவும், உங்கள் ஆற்றலை கட்டவிழ்த்து விடவும் நீங்கள் தயாரா? Life.Churchஇன் நல்லாயர் கிரேக் க்ரோஷெலின் புத்தகமான, அபாயகரமான பிராத்தனைகள், என்பதிலிருந்து எடுக்கப்பட்ட இந்த ஏழு நாள் பைபிள் திட்டம் உங்களை துணிகரமாக பிரார்த்திக்க ஊக்குவிக்கும்- ஏனெனில் இயேசுவை பின்பற்றுவது ஒரு போதும் பாதுகாப்புடையதாக இருக்க உத்தேசப்படவில்லை.

More

இந்த திட்டத்தை வழங்கியதிற்காக நல்லாயர் கிரேக் கிரோஸ்செல் அவர்களுக்கும் LifeChurch.tv க்கும் நன்றி தெரிவிக்கிறோம். மேலும் தகவல் அறிய https://www.craiggroeschel.com க்கு செல்லவும்

சம்பந்தப்பட்ட திட்டங்கள்