தீர்க்கமான பிராத்தனைகள்மாதிரி

Dangerous Prayers

7 ல் 2 நாள்

உமது சித்தம் செய்யப்படுவதாக

நிளமான, உரக்கமான, ஆடம்பரமான பிராத்தனைகளை விட எளிமையான, உண்மையான, மனப்புர்வமான பிராத்தனைகளே இறைவனை நகரச்செய்யும். ஆனால் எளிமையானவையும் பாதுகாப்பானவையும் ஒன்றல்ல. அதுவே நான் இதை பற்றி எழுத வலியுறுத்திய காரணம். என்னுடைய பிராத்தனை வாழ்க்கையில் மிகப்பெரிய தவறு மற்றும் பிராத்தனைகள் மொத்தயாக இருக்க காரணம் என்ன வென்றால் நான் மிகவும் பாதுகாப்பாகவே பிராத்திதேன். கடவுளிடம் ஒரு இதமான வட்டத்திற்குள்ளாகவே இருந்தேன். என்னுள் ஒரு சூடும் இல்லை ஒரு குளிர்ச்சியும் இல்லை. எனது பிராத்தனைகள் வெதுவெதுப்பானவை. பாதுகாப்பான வெதுவெதுப்பான பிராத்தனைகள் மூலம் நாம் இறைவனுக்கு அருகாமையில் இட்டுச்செல்லவோ, இவ்வுலகின் மேல் அவர் வைத்திருக்கும் அன்பை அறிய முடியாது.

பிராத்தனைகள் இயல்பாகவே ஆபத்தானவை. இந்த எண்ணம் இயேசு சிலுவையில் இறப்பதிற்கு சற்றே முன்னதாக அவரது பிதாவுடன் பேசியதை பற்றி வாசிக்கும் போழுது எனக்கு உதயமாயிற்று. நடக்க போவது முன்பே அறிந்ததால், இயேசு இறைவனிடம் வேறு மாற்கம் உள்ளதா என வினவினார். அதன் பிறகு இயேசு, சாதாரண சீடரோ, பைபிளில் வரும் ஒரு நபரோ அல்ல, ஆனால் இ-யே-சு, தேவ புத்திரர், பாதிக்கபட கூடிய, அபாயகரமான பிராத்தனையை சமர்பித்தார்: “ ஆனாலும் என்னுடைய விருப்பத்தின்படியல்ல, உம்முடைய விருப்பத்தின்படியே ஆகக்கடவது” லூக் 22:42.

இயேசு தான் செய்யாத எதையும் நம்மை செய்ய சொல்லமாட்டார். நம்மை விசுவாசமுள்ள வாழ்க்கைகாக அழைக்கின்றார், சுகமான வாழ்க்கைகாக அல்ல. பாதுகாப்பான, எளிதான, மன அழுத்தமற்ற வாழக்கை முறைக்காக அல்லாமல் தேவபுத்திரன் மற்றவர்களை நம்மை விடவும் நேசிக்க அவரை அணுக சவால் செய்கிறார். நமது அன்றாட ஆசைகளுக்கு இடங்கொடாமல் அவற்றை அடக்கி நிலைபேறுடைய வாழ்விற்கு அழைக்கிறார். நமது இஷ்ட படி வாழாமல் நமது சிலுவைகளை எடுத்து அவரை முன் உதாரணமாக கொண்டு பின் தொடர கூறுகின்றார்.

எனது கவலை என்ன வென்றால் பலருக்கும் பிராத்தனை என்பது லாட்டரி டிக்கெட் வாங்குவது போல, இந்த உலகத்தில் பிரச்சனைகள் அற்ற, மன அழுத்தமற்ற, வேதனையற்ற வாழ்விற்கு ஒரு மாற்கமாகவே கருதுகின்றனர். மற்றும் பலர் அவர்டளுக்கு இஷ்டமான பாட்டை அல்லது நர்சரி ரைம்களை பாட்டை பாடுவது போல வெறும் உணர்ச்சிவசபட கூடிய வழக்கமாகவே கருதுகின்றனர், மேலும் சிலர் பிரார்த்திக்காவிட்டால் உள்ள ஒரு குற்ற உணர்வை தவிர்க்க மட்டுமே பிரார்த்தனை செய்கின்றனர்.

ஆனால் இவ்வாறான பிரார்த்தனைகள் இயேசு நமக்கு அளிக்க வந்த வாழ்வை பிரதிபலிப்பதாக இல்லை.

மாறாக இயேசு எல்லாவற்றையும் விட்டுவிட்டு அவரை பின் தொடர அழைக்கின்றார்.

இயேசு மற்றவர்களை மட்டும் அவர்களது சோந்த விருப்பங்களை பின்னால் விட்டு செல்ல சவால் விடவில்லை. அவரே அபாயகரமான விசுவாசத்துடன் வாழ்ந்தார். குஷ்டரோகம் உள்ளவர்களை தொட்டார். வேசிகளுக்கு கருணை காட்டினார். ஆபத்தை எதிர் கொள்ளையில் துணிந்து நின்றார். அதன் பின்னர் நாமும் அவர் செய்ததையும் அதை விட மேலும் செய்ய முடியும் என கூறினார்.

அதன் காரணமாக இறைவனிடம் வெறுமனே நமது உணவை ஆசீர்வதிக்கவும், “எம்முடன் இன்று இருங்கள்" என கேட்பதில் ஒத்திணங்க போக கூடாது.”

பைபிளில் நமக்கு கூறியதாவது “, தைரியமாகக் கிருபையின் சிங்காசனத்திடம் சேருவோம்”. (எபி 4:16 IRV) நாம் பயந்தாங்கொள்ளிதனமாகவோ, மனக்குழப்பத்துடன் அணுக வேண்டியதில்லை- அவர் முன்னால் தன்னம்பிக்கையுடன், உறுதியுடன், எடுப்பாக வரலாம். இவ்வாறு நாம் பிரார்த்தித்தால், “ நாம் இரக்கத்தைப் பெற்றுக்கொள்ளவும், சரியான நேரத்தில் உதவிசெய்யும் கிருபையை அடையவும்”. (எபி 4:16 IRV)

உங்கள் பிரார்த்தனை முக்கியமானது..

எப்படி பிரார்த்தனை செய்கின்றீர் என்பது முக்கியமானது.

என்ன பிரார்த்திக்கின்றீர் என்பது முக்கியமானது.

உங்கள். பிரார்த்தனைகள். இறைவனை. நகர்த்தும்.

நாள் 1நாள் 3

இந்த திட்டத்தைப் பற்றி

Dangerous Prayers

உங்கள் விசுவாசத்துடன் பாதுகாப்பாக விளையாடி களைப்படைந்து விட்டீர்களா? உங்கள் அச்சங்களை எதிர் கொள்ளவும், உங்கள் விசுவாசத்தை பேணிவளர்க்கவும், உங்கள் ஆற்றலை கட்டவிழ்த்து விடவும் நீங்கள் தயாரா? Life.Churchஇன் நல்லாயர் கிரேக் க்ரோஷெலின் புத்தகமான, அபாயகரமான பிராத்தனைகள், என்பதிலிருந்து எடுக்கப்பட்ட இந்த ஏழு நாள் பைபிள் திட்டம் உங்களை துணிகரமாக பிரார்த்திக்க ஊக்குவிக்கும்- ஏனெனில் இயேசுவை பின்பற்றுவது ஒரு போதும் பாதுகாப்புடையதாக இருக்க உத்தேசப்படவில்லை.

More

இந்த திட்டத்தை வழங்கியதிற்காக நல்லாயர் கிரேக் கிரோஸ்செல் அவர்களுக்கும் LifeChurch.tv க்கும் நன்றி தெரிவிக்கிறோம். மேலும் தகவல் அறிய https://www.craiggroeschel.com க்கு செல்லவும்