தீர்க்கமான பிராத்தனைகள்மாதிரி

Dangerous Prayers

7 ல் 3 நாள்

என்னை ஆராயுங்கள்

இதுவரை எப்போதுமே செய்யாதது போல் பிரார்த்திக்க உங்களுக்கு தைரியம் இருக்கிறதா?

உங்கள் இதயம், ஆத்மா, மனம் மற்றும் உங்களின் முழுமையும் ஒட்டுமொத்தமாக பிரார்த்திக்க? உங்கள் வாழ்விலும், உங்களை சுற்றார் வாழ்விலும் நீங்கள் துணிகரமாக பிரார்த்திக்கும் போழுது என்ன வெல்லாம் நடக்கும்?

தெரிந்து கொள்ள உங்களுக்கு தைரியம் உள்ளதா?

டேவிடை பொய்யாக ராஜதுரோக குற்றம் சாட்டி தமது படையை மீண்டும் மீண்டும் டேவிடை கொல்ல அரசன் சவுல் ஏவினார். டேவிட் தன் முழு மனதுடன் இறைவனை மகிழ்விக்க முயன்றார். அரசனை காக்கவும், கௌரவிக்கவும் தனது கோப குணத்துடன் போராடினார். ஆனால் தனது நோக்கம் எல்லா நேரத்திலும் சரியானதாக இருக்காது என்பதை உணர்நது டேவிட் இறைவனிடம் இருதயபூர்வமாய் சரணடைந்து நீங்கள் மிக அரிதாய் கேட்க கூடிய மிகவும் பாதிக்கபட கூடிய, வெளிப்படையான, துணிச்சலான பிரார்த்தனை செய்தார். இறைவனை தம்மின் அனைத்திலும் கௌரவிக்க முனைந்து, டேவிட் இவ்வாறு வேண்டினார், “தேவனே, என்னை ஆராய்ந்து, என் இருதயத்தை அறிந்துகொள்ளும்; என்னைச் சோதித்து, என் சிந்தனைகளை அறிந்துகொள்ளும். வேதனை உண்டாக்கும் வழி என்னிடத்தில் உண்டோ என்று பார்த்து, நித்திய வழியிலே என்னை நடத்தும். (சங்கீதம் 139:23‐24).

இந்த பிரார்த்தனை கடினமானது மட்டுமல்லாமல் மேலும் வாழ்க்கையில் நடைமுறைப்படுத்த மிகுந்த சவாலானது. ஏனெனில் இவ்வாறு பிரார்த்திக்க துணிந்தீர்கள் என்றால் தேவன் கூறும் பதிலை செயல்படுத்தவும் துணிய வேண்டும். எனவே இதை கருதவில்லை என்றால் இவ்வாறு பிரார்த்திக்க வேண்டாம்.

.

முன்னெச்சரிக்கை இந்த பிரார்த்தனை உங்கள் மனசாட்சியை குற்றமெய்ப்பிக்கும். உங்களை திருத்தும். உங்கள் வாழ்க்கையை திசைதிருப்பும். நீங்கள் உங்களை காணும் விதம் மாறும். மற்றவர்களை நீங்கள் காணும் விதம் மாறும்.

இது ஒரு பெரிய விஷயமல்ல என நீங்கள் எண்ணலாம். எனது இதயத்தில் என்ன இருக்கிறது என்பதை இறைவன் ஏற்கனவே அறிந்த பட்சத்தில் அதை தேட ஏன் அவரை பணிக்க வேண்டும் என யோசிக்கலாம். அங்கு என்ன இருக்கிறது என நீங்கள் அறிவீர்கள்.

அங்கு என்ன இருக்கிறது என்பதை அவரும் அறிவார். தெட்ட தெளிவாக இருக்கும் ஒன்றை ஏன் கேட்க வேண்டும்?

இங்கேதான் தந்திரம் உள்ளது. மேலோட்டமாக பார்க்கும் போது நமது சொந்த இதயத்தை நாம் அறிவோம் என்றே தோன்றும். சரிதானே? எனது நோக்கத்தை நான் அறிவேன். எது முக்கியமானது என அறிவேன். எதை எதற்காக செய்கிறேன் என்பதையும் அறிவேன்.நாமே சொல்லிக்கொள்ளலாம். சரியானதை நான் செய்ய வேண்டும். என் இதயம் நல்லது. நான் பிரார்த்திக்கின்றேன் அல்லவா?

ஆனால் இறைவசனம் இதற்கு முற்றிலும் எதிர்மறையானதை தெரியப்படுத்துகிறது. முதன்முறையாக கேட்கும் போழுது உங்களை அதிர்ச்சி அடைய செய்யலாம். ஆனால் எரேமியா நமக்கு நேரடியான உண்மையை கூறுகிறார். எரேமியா லேவிட்டிகல் பாதிரியாரின் மகனாக சுமார் 650 கி.மு.வில் பிறந்தார். அரசன் ஜோசயாவின் ஆட்சிகாலத்தில் இறைவன் இந்த இளம் தீர்க்கதரிசியை இஸ்ரேலுக்கும் தேசங்களும் திருவசனத்தை எடுக்க எழுப்பினார். எரேமியா ஐயமின்றி நமக்கு கூறுவது – அவர் உட்பட மற்றவர்களும் நல்லிதயம் கொண்டவர்கள் அல்ல. உண்மையில் நல்லிதயம் அற்றவர்கள் மட்டுமல்லாது உங்கள் இதயம் அதன் எல்லா வழிகளிலும் துஷ்டமானது, பாவமுடையது. தீர்க்கதரிசி பகர்ந்தது, ”எல்லாவற்றைப்பார்க்கிலும் இருதயமே திருக்குள்ளதும் மகா கேடுள்ளதுமாயிருக்கிறது, அதை அறியத்தக்கவன் யார்?”( எரே 17:9).

கர்த்தர் இல்லாவிடில் உங்கள் இதயம் வஞ்சகமானது. இயேசுவை நெருங்க நெருங்க நமது குறைபாடுகளை மேலும் எதிர்கொள்ள நேரிடும். கர்வம். தன்னலம். காமம். போதை. விமர்சிக்கும் மனோபாவம்.

இந்த துணிகரமான பிரார்த்தனை வேண்டும் போது இறைவனிடம் தொடர்பு கொள்ள ஒரு அலைவரிசையை திறக்கும். வெறுமனே நமக்காக ஏதாவது செய்ய இறைவனிடம் வேண்டாமல் நமக்கு ஏதேனும் வெளிப்படுத்த கேளுங்கள். இறைவனுடனான இந்த மெய்யான தருணம் உங்களை உடனடியாக மாற்றாவிட்டாலும், உங்கள் ஆன்மீக தேவைகளை அறிந்து கொள்ளவும் வாழ்க்கையை திசைதிருப்பவும் உதவும்.

அதன் பொருட்டே டேவிடின் பிரார்த்தனை மிகவும் துணிச்சலானது.

நாள் 2நாள் 4

இந்த திட்டத்தைப் பற்றி

Dangerous Prayers

உங்கள் விசுவாசத்துடன் பாதுகாப்பாக விளையாடி களைப்படைந்து விட்டீர்களா? உங்கள் அச்சங்களை எதிர் கொள்ளவும், உங்கள் விசுவாசத்தை பேணிவளர்க்கவும், உங்கள் ஆற்றலை கட்டவிழ்த்து விடவும் நீங்கள் தயாரா? Life.Churchஇன் நல்லாயர் கிரேக் க்ரோஷெலின் புத்தகமான, அபாயகரமான பிராத்தனைகள், என்பதிலிருந்து எடுக்கப்பட்ட இந்த ஏழு நாள் பைபிள் திட்டம் உங்களை துணிகரமாக பிரார்த்திக்க ஊக்குவிக்கும்- ஏனெனில் இயேசுவை பின்பற்றுவது ஒரு போதும் பாதுகாப்புடையதாக இருக்க உத்தேசப்படவில்லை.

More

இந்த திட்டத்தை வழங்கியதிற்காக நல்லாயர் கிரேக் கிரோஸ்செல் அவர்களுக்கும் LifeChurch.tv க்கும் நன்றி தெரிவிக்கிறோம். மேலும் தகவல் அறிய https://www.craiggroeschel.com க்கு செல்லவும்