தீர்க்கமான பிராத்தனைகள்மாதிரி

Dangerous Prayers

7 ல் 5 நாள்

என்னை நொறுக்கிடும்

பாதுகாப்பிற்காகவும் ஆசீர்வாதங்களுக்காகவும் ஜெபிப்பது சரிதான், ஆணாலுமுன்களுக்கு இன்னும் நிறைய வேண்டுமென்றால்? பரிசுத்த ஆவியானவரிடமிருந்து வல்லமையையும், பரலோகத்திலிருந்து பெலத்தையும், அசைக்கமுடியாத விசுவாசத்தையும், உங்கள் தகப்பனுடனான மெய்யான நெருக்கத்தையும் நீங்கள் ஆசைப்பட்டால்?

நீங்கள் உங்களைப் பாதுகாக்கவும், மேலும் உங்களுக்கு அருளவும், உங்கள் ஜீவனைக் காக்கவும் மட்டும் கடவுளிடம் கேட்பதற்குப்பதிலாக, உங்களை நொறுக்கும்படியாக ஆண்டவரிடம் கேட்க வேண்டி இருக்கலாம்.

“ஆண்டவரே, என்னை நொறுக்கிடும்,” என்று ஜெபிப்பதைக்குறித்து நான் யோசிக்கும்போது, நானும் ஏமியும் எங்களுடைய சிறு கூடுகையில் அடைந்த அனுபவம் எனக்குத் தோன்றும். மங்கலான, குளிர்நிறைந்த ஜனவரியின் ஒரு புதன் இரவில், இதே அபாயகரமான ஜெபத்தைக்குறித்து ஏழு அல்லது எட்டு ஜோடிகள் ஒரு வசதியான வெதுவெதுப்பான அறையில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தோம்.

நாங்கள் அனைவரும் இதை நாம் ஜெபிக்க வேண்டும் —மற்றும் அதில் உண்மையாய் இருக்கவும் வேண்டும்— என்று ஒப்புக்கொண்டோம் ஆனாலும் அதன் விளைவுகளைக்குறித்து பயந்ததை நாங்கள் ஒப்புக்கொள்ளாமல் விடமுடியாது. முதலில் பேசிய பெண்மனி இதன் சாத்தியங்களை தீவிரமாக எடுத்துக்கொண்டார் ஆனாலும் அவருடைய பிரயாசத்தை ஒப்புக்கொண்டார். அன்புநிறைந்த மனைவியும் நான்கு குழந்தைகளின் தாயுமாகிய அவர், அவருடைய உயர்நிலைப்பள்ளியின் இரண்டாம் ஆண்டிலிருந்தே இயேசுவை மிகவும் விசுவாசத்தோடு பின்பற்றிவருபவர். அவர் திருச்சபையில் குழந்தைகள் மத்தியில் ஊழியம் செய்து, உண்மையாக தசமபாகம் செலுத்திவந்தார், வளர்ப்பு குழந்தைகளுக்கு உதவிவந்தார், வாராந்திர வேத தியானிப்பில் கலந்துகொள்பவர் மற்றும் பலசமயம் கூடுகைகளில் சத்தமாக ஜெபிக்கவும் முன்வருபவர்.

ஆனாலும் தேவன் அவரை நொறுக்கும்படியாக கேட்பது என்னும் சிந்தனையை எதிர்கொண்டபோது அவர் மறுத்தார். “மன்னியுங்கள், ஆனாலும் நான் நேர்மையாக இருக்கவேண்டும்,” அவர் கூறினார். “எனக்கு என்னை நொறுக்கும்படியாக ஆண்டவரிடம் கேட்க வேண்டாம். என்ன நேருமோவென்று எனக்கு பயமுண்டு. நான் நான்கு குழந்தைகளுடைய தாய். அவர்களை நான் மிகவும் நேசிக்கிறேன். என்னை நொறுக்குங்கள் என்று ஆண்டவரிடம் கேட்பது என்பது எனக்கு என்றுமே மிகவும் சுலபமாக அச்சமளிக்கக்கூடிய ஒரு ஜெபம். நான் நோய்வாய்ப்பட்ட்டாலோ மனமுடைந்தாலோ அல்லது என் குடும்பத்தை விலகிச்சென்றாலோ என்ன செய்வது?” 

அந்த சிறு கூடுகையிலிருந்த மற்ற பலரும் ஒப்புதலாக தலையசைத்தனார்.

பிறகு நான் கேட்ட கேள்வி இன்றும் நம்மனைவருக்கும் அப்படியே உள்ளது: நம்முடைய சுகங்களை பற்றிக்கொண்டிருப்பதால் நாம் எதை இழக்கிறோம்?

வலி மற்றும் அசௌகரியத்தை தவிர்ப்பதற்கு நாம் மிகவும் உறுதியுடன் இருப்பதால் நாம் எதை இழக்கிறோம்?

இயேசு கூறினார், "தன் ஜீவனை இரட்சிக்க விரும்புகிறவன் அதை இழந்துபோவான்; என்னிமித்தமாகத் தன் ஜீவனை இழந்துபோகிறவன் அதைக் கண்டடைவான்.” (மத். 16:25). இயேசு நம்மை ஒரு சுகமும் சுலபமுமான வாழ்க்கையல்ல, ஒரு ஒப்புக்கொடுக்கும் தியாகவாழ்கைக்கே அழைக்கிறார். நம்முடைய உயர்ந்தபட்ச ஆசை நம்முடைய சித்தம் நிறைவேற அல்ல, அவருடைய சித்தம் நிறைவேறும்படியாக இருக்க வேண்டும். மேலும் இயேசு நாம் ஒவ்வொரு தருணத்தையும், ஒவ்வொரு நாளையும்—அவருக்காக நாம் வாழும்படியாக, நம்முடைய வாழ்க்கைக்கு இறந்தவர்களாக மாற நம்மை அழைக்கிறார். நம்முடைய சுகமான அறைகளையும் பாதுகாப்பான ஜெபங்களையும் விட்டு வெளியேறுவதால் மற்றவர்களுக்காக நொறுக்கப்படுவது எப்படி இருக்கும் என்பதை அறியும்படியாக நம்மை அழைக்கிறார்.

நாம் பாதுகாப்புடன் நடப்பதால், நம்முடைய பாதுகாப்பு மற்றும் சுகத்தை விட மிகவும் விலையுயர்ந்த ஒன்றை நாம் இழக்கும் ஆபத்தில் இருக்கிறோம்.ஆண்டவருடைய நொறுக்குதலின் பின்னுள்ள ஆசீர்வாதங்கள் என்னவாக இருக்கும் என்பதை நாம் உணருவதில்லை.

லூக்கா கூறுவது, “பின்பு [Jesus] அப்பத்தை எடுத்து, ஸ்தோத்திரம்பண்ணி, அதைப் பிட்டு, அவர்களுக்குக் கொடுத்து:‘இது உங்களுக்காக கொடுக்கப்படுகிற என்னுடைய;சரீரமாயிருக்கிறது; என்னை நினைவுகூரும்படி இதைச் செய்யுங்கள் என்றார்.'"(லூக்கா 22:19). கிட்டத்தட்ட அனைத்து வேத அறிஞர்களும் "இதைச் செய்யுங்கள்" எனும் இந்த இயேசுவின் அறிவுறுத்தல் விசுவாசிகளுக்கு அவருடைய மரணம் மற்றும் உயிர்த்தெழுதலை நினைக்கவும், போற்றவும், கொண்டாடவும் ஒரு வழி தருகிறது என்று ஒப்புக்கொள்கின்றனர். ஆனாலும் சிலர் "இதை செய்யுங்கள்" எனும் இயேசுவின் வாக்கு நாம் எப்படி வாழவேண்டும் என்பதையும் குறிக்கிறது என்று நம்புகின்றனர். நாம் சபையில் மேற்கொள்ளும் ஒரு சடங்கைக்குறித்து மட்டும் இயேசு பேசவில்லை என்றால்? நாம் தினமும் பிட்கப்படுவதற்கும் சிந்தப்படுவதற்கும் சேர்த்து நம்மை அவர் அழைப்பதாக இருந்தால்? “ஆண்டவரே, என்னை நொறுக்கிடும்” என்று ஜெபிக்கக்கூடிய தைரியம், துணிவு,விசுவாசம் ஆகியவற்றை நாம் கொண்டிருந்தால்?

சபையில் திருவிருந்தின்போது மட்டும் நாம் இயேசுவை நினைவுகூறுவதில்லை. நாம் அன்றாடம் எவ்வாறு நம் வாழ்க்கையில் வாழுகிறோம் என்பதில் அவரை நினைவுகூருகிறோம். நமக்காக இயேசுவானவரின் திருச்சரீரம் நொறுக்கப்பட்டதாலும், அவருடைய திரு இரத்தம் சிந்தப்பட்டதாலும், நாமும் கூட தினமும் அவருக்காக அவ்வாறு வாழவேண்டும், நொறுக்கப்பட்டும் ஊற்றப்பட்டும். 

முதற்பார்வையில் இது ஈர்க்கக்கூடிய ஒன்றாக இல்லாமல் போகலாம். “நொறுக்கப்பட” மற்றும் “ஊற்றப்பட்ட” யாருக்குத்தான் வேண்டும்? இது மிகவும் வேதனையாகவும், மோசமான நிலையில் பரிதாபமாகவும் தோன்றுகிறது. அனால் நாம் நம் வாழ்க்கையைத் தருவதின் மூலமாகவே மெய்யான மகிழ்ச்சியைக் கண்டடைவோம். நம்முடைய சித்தத்தை பின்தொடராமல், அவருடைய சித்தத்திற்கு நாம் ஒப்புக்கொடுப்போம். நமக்குத் தேவையான எல்லாவற்றையும் கொண்டு நம் வாழ்க்கையை நிறைக்க முயற்சி செய்யாமல், பிறருடைய வாழ்க்கைகளில் மாற்றங்களை ஏற்படுத்த நம் வாழ்க்கையை வெறுமையாக்குவோம்.

கடவுளின் முன்பு மெய்யாக நொறுக்கப்படுதல் என்பது ஒருமுறை நிகழ்வு நிகழ்வு அல்ல; அது தினசரி முடிவு. “நான் அநுதினமும் சாகிறேன்” (1 கொரி. 15:31),என்று பவுல் கூறினார். அதன் அர்த்தம் என்ன? ஒவ்வொருநாளும், கர்த்தரின் சித்தத்தில் முழுமையாக வாழும்பொருட்டு, அவருடைய சொந்த ஆசைகளை சிலுவையில் அறைய அவர் முடிவெடுத்தார். இந்த ஜெபத்தை ஜெபிக்க உங்களிடம் தைரியம் உண்டென்றால், தயாராகுங்கள். இதற்குமுன் நீங்கள் அனுபவித்திராத வண்ணம் ஆண்டவரை அறியவும், ஆண்டவரால் அறியப்படவும் தயாராகுங்கள்.

நீங்கள் பாதுகாப்பாக நடக்கலாம். அனால் என்னுடைய உள்ளுணர்வு நீங்கள் அதைவிட அதிகமாக வேண்டுவீர்கள் என்கிறது. நான் வித்தியாசமானதை தேர்ந்தெடுக்கிறேன். நான் விசுவாசம் நிறைந்த முழுவதையும் பந்தயமாக்கும் துணிவை மேற்கொள்ளுபவன். சின்ன யோசனைகளிலும் பாதுகாப்பாக வாழ்வதிலும் நான் ஆண்டவரை என்றும் அவமதிக்கமாட்டேன். நொறுக்கப்படுதலின் மறுபக்கத்தில் ஆசீர்வாதங்கள் உண்டென்றால், என்னை நொறுக்குங்கள்.

நாள் 4நாள் 6

இந்த திட்டத்தைப் பற்றி

Dangerous Prayers

உங்கள் விசுவாசத்துடன் பாதுகாப்பாக விளையாடி களைப்படைந்து விட்டீர்களா? உங்கள் அச்சங்களை எதிர் கொள்ளவும், உங்கள் விசுவாசத்தை பேணிவளர்க்கவும், உங்கள் ஆற்றலை கட்டவிழ்த்து விடவும் நீங்கள் தயாரா? Life.Churchஇன் நல்லாயர் கிரேக் க்ரோஷெலின் புத்தகமான, அபாயகரமான பிராத்தனைகள், என்பதிலிருந்து எடுக்கப்பட்ட இந்த ஏழு நாள் பைபிள் திட்டம் உங்களை துணிகரமாக பிரார்த்திக்க ஊக்குவிக்கும்- ஏனெனில் இயேசுவை பின்பற்றுவது ஒரு போதும் பாதுகாப்புடையதாக இருக்க உத்தேசப்படவில்லை.

More

இந்த திட்டத்தை வழங்கியதிற்காக நல்லாயர் கிரேக் கிரோஸ்செல் அவர்களுக்கும் LifeChurch.tv க்கும் நன்றி தெரிவிக்கிறோம். மேலும் தகவல் அறிய https://www.craiggroeschel.com க்கு செல்லவும்

சம்பந்தப்பட்ட திட்டங்கள்