தீர்க்கமான பிராத்தனைகள்மாதிரி
பயத்தை வெளிப்படுத்துங்கள்
உங்களை கவலையடையச் செய்வது எது? பதட்டமடையச்செய்வது?அமைதியாற்ற நிலையில் வைத்திருக்கும் கவலை? அதிகம் பயப்படும் காரியம்?
பாம்புகள், சிலந்திகள் அல்லது வேறு பயம் போன்ற சாதாரண வெளிப்புற அச்சங்களைப் பற்றி நான் பேசவில்லை. இரவில் உங்களைத் தூங்கவிடாமல் தக்கவைப்பது என்னவென்று எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது, அந்த விஷயங்கள் உங்கள் மனதில் அமைதியாக இருக்க மறுக்கின்றன. உங்கள் வேலையை இழப்பது போன்ற விஷயங்கள். திருமணம் ஆகாத குறை. அல்லது மோசமான திருமணத்தில் சிக்கி விடுவோம் என்கின்ற பயம். உங்கள் உடல்நிலை குறித்த பயம். உங்கள் சேமிப்புக் கணக்கில் உள்ள பணத்தை அழித்துவிடுவோம் என்கின்ற பயம்.
தாவீதின் மனதில் என்னென்ன அச்சங்கள் இருந்தன என்பது நமக்கு தெரியாது, ஆனால் அவர் தனது பாதுகாப்பு மற்றும் அவரது எதிர்காலம் குறித்து கவலைப்பட்டார் என்பது தெளிவாகிறது. ஏனென்றால், தன் இருதயத்தை ஆராய்ந்து பார்க்கும்படி தேவனிடம் கேட்டபின், தாவீது, “என் சிந்தனைகளை அறிந்து கொள்ளும்” (சங். 139: 23) என்கிறார். அவர் தனது மோசமான அச்சங்களை தேவனுடன் பகிர்ந்து கொள்ள விரும்பினார். அவைகளை எதிர்கொள்ள விரும்பினார். தாவீது தான் நினைத்து பயப்படும் எந்த பயத்தையும் விட தேவன் பெரியவர் என்று நம்பினார்.
அத்தகைய ஜெபத்தை ஜெபிக்க நீங்கள் தயாரா? “ஆண்டவரே, என் மனதை பிணைக் கைதியாக வைத்திருப்பதை வெளிப்படுத்துங்கள். நான் மிகவும் அஞ்சுவதை எனக்குக் காட்டும். என்னை பயமுறுத்துவதை எதிர்கொள்ள எனக்கு உதவுங்கள். ”
நாம் எதற்கு அஞ்சுகிறோம் என்பது முக்கியமானது.
பல ஆண்டுகளுக்கு முன்பு, இந்த விஷயத்தைப் பற்றி எனக்கு ஒரு வெளிப்பாடு இருந்தது, அது என்னை மிகவும் தனிப்பட்ட முறையில் தொட்டது. நான் எதற்கு அதிகமாக அஞ்சினேனோ அந்த காரியங்களில் நான் தேவனை மிகக் குறைவாக நம்பினேன் என்று என்று எனக்கு அவர் காட்டினார். என்னுடைய மூன்றாவது மகள் அண்ணா பிறந்த பிறகு, எனது மனைவி ஏமி உடல் ரீதியான சவால்களை எதிர்கொள்ளத் தொடங்கினார். முதலில், இது சோர்வு என்று நாங்கள் நினைத்தோம், ஆனால் அவளுடைய உடல் பாதி உணர்ச்சியற்ற நிலையில் மாறிவிட, அது மிகவும் மோசமான ஒன்று என்று நாங்கள் அஞ்சினோம். மருத்துவருக்குப் பின் மருத்துவர் பதில்களை வழங்க முடியவில்லை. அவளுடைய அறிகுறிகள் தொடர்ந்து மோசமடைந்து வந்ததால், தேவன் மீதான என் நம்பிக்கை பலவீனமடையத் தொடங்கியது.
இந்த பயம் மற்றவைகளுக்கு வழிவகுத்தது, இரவில் என் எண்ணங்கள் கட்டுப்பாட்டை மீறும். ஏமி ஆபத்தான முறையில் நோய்வாய்ப்பட்டிருந்தால் என்ன செய்வது? நான் அவளை இழந்தால் என்ன செய்வது? அவள் இல்லாமல் குழந்தைகளை வளர்க்க முடியாது. என்னால் தொடர்ந்து தேவாலயத்தை வழிநடத்த முடியாது. நான் இதற்கு மேல் என் வாழ்க்கையை தொடர விரும்பவில்லை. பின்னர் நான் இதை உணர்ந்தேன். இரவில் என்னை விழித்திருக்க வைத்த விஷயங்கள், தேவனை அந்த காரியங்களை கையாள நான் நம்பவில்லை என்பதை உணர்த்தியது. நான் அவைகளைப் பிடித்துக் கொண்டேன், அவைகள் மீது கட்டுப்பாட்டைப் பெற ஒரு வழியைக் கண்டுபிடிக்க முயற்சித்தேன், என் எல்லா பிரச்சினைகளையும் தீர்க்க, ஒவ்வொரு தற்செயலுக்கும் திட்டமிட முயற்சிய்தேன். அதிர்ஷ்டவசமாக, தேவனின் கிருபையால், ஏமி படிப்படியாக முழு வலிமைக்கு முன்னேறினார், ஆனால் அவளுடைய சவால்கள் என் மோசமான பலவீனங்களில் ஒன்றை வெளிகாட்டின. பயம் என்னை அழித்துவிட்டது.
உங்களுக்கு என்ன? உங்களைப் பயமுறுத்திக்கொண்டு உங்களை ஒட்டிக்கொண்டிருக்கும் பகுதிகள் யாவை? தேவனிடமிருந்து உங்களை என்னென்ன அச்சங்கள் தூரப்படுத்துகின்றன?
இதைப் பற்றி சிந்தியுங்கள். உங்கள் திருமணத்தின் எதிர்காலம் குறித்து நீங்கள் பயப்படுகிறீர்கள் என்றால், இது உங்கள் திருமணத்துடன் தேவனை முழுமையாக நம்பவில்லை என்பதற்கான அறிகுறியாகும். உங்கள் ரசீதுகளை எவ்வாறு செலுத்துவீர்கள் என்ற கவலையில் நீங்கள் அதிகமாக இருந்தால், உங்கள் வழங்குநராக கடவுளை நீங்கள் நம்பாமல் இருக்கலாம் என்பதை இது வெளிப்படுத்துகிறது. உங்கள் பிள்ளைகளின் பாதுகாப்பைப் பற்றி நீங்கள் கவலையுடன் முடங்கிவிட்டால், அவர்களைப் பாதுகாப்பாக வைத்திருக்க நீங்கள் தேவனை நம்பவில்லையா?
தேவனிடம் உங்கள் அச்சங்களை வெளிப்படுத்துவதால், அவர் உங்கள் நம்பிக்கையையும் கட்டிழுப்புவார். உங்களுக்கு அவரேத் தேவை. உங்களுக்கு அவருடைய இருப்பு தேவை. உங்களுக்கு அவருடைய சக்தி தேவை. அவருடைய ஆவி உங்களை வழிநடத்த வேண்டும். அவருடைய வார்த்தை உங்களை பலப்படுத்த வேண்டும்.
நீங்கள் மிகவும் பயப்படும் காரியம் தேவனுடன் நீங்கள் வளர வேண்டிய இடத்தைக் காட்டுகிறது. நீங்கள் எதற்கு பயப்படுகிறீர்கள்? உங்கள் கவலையான எண்ணங்கள் என்ன?
தேவன் உங்களுக்கு என்ன காட்டுகிறார்?
விசுவாசத்தில் நீங்கள் எங்கு வளர வேண்டும்?
அவரை நம்புங்கள்.
இந்த திட்டத்தைப் பற்றி
உங்கள் விசுவாசத்துடன் பாதுகாப்பாக விளையாடி களைப்படைந்து விட்டீர்களா? உங்கள் அச்சங்களை எதிர் கொள்ளவும், உங்கள் விசுவாசத்தை பேணிவளர்க்கவும், உங்கள் ஆற்றலை கட்டவிழ்த்து விடவும் நீங்கள் தயாரா? Life.Churchஇன் நல்லாயர் கிரேக் க்ரோஷெலின் புத்தகமான, அபாயகரமான பிராத்தனைகள், என்பதிலிருந்து எடுக்கப்பட்ட இந்த ஏழு நாள் பைபிள் திட்டம் உங்களை துணிகரமாக பிரார்த்திக்க ஊக்குவிக்கும்- ஏனெனில் இயேசுவை பின்பற்றுவது ஒரு போதும் பாதுகாப்புடையதாக இருக்க உத்தேசப்படவில்லை.
More