தேவன் நம்மோடுமாதிரி

God With Us

7 ல் 7 நாள்

இம்மானுவேல்

அகில உலகின் ஆண்டவர் பூமியில் பாலகனாக பிறக்க தெரிந்தெடுத்தது எத்தனை ஆச்சரியம் - மேன்மையும் மனத்தாழ்மையுமான ஒரு காரியம். இது எப்படி ஆகும் என்று எளிதாக கேட்கலாம், காபிரியேல் தூதன் தேவகுமாரனை நீ பெற்றெடுப்பாய் என்று மரியாளிடம் கூறிய போது மரியாளும் இக்கேள்வியை கேட்டார்.

லூக்கா 1:35ல் காபிரியேல் இவ்வாறாக கூறினார், "பரிசுத்த ஆவி உன்மேல் வரும்; உன்னதமானவருடைய பலம் உன்மேல் நிழலிடும்; ஆதலால் உன்னிடத்தில் பிறக்கும் பரிசுத்தமுள்ளது தேவனுடைய குமாரன் என்னப்படும்.”

இந்த அதிசய பரிமாற்றத்திற்கு 600 ஆண்டுகளுக்கு முன்னர், ஏசாயா தீர்க்கதரிசி கன்னியின் வயிற்றில் பிறப்பார் என்று கூறினார், அவர் இம்மானுவேல் என்று அழைக்கப்படுவார் என்றுரைத்தார், அதற்கு "தேவன் நம்மோடு" என்று அர்த்தம், இதில் ஏசாயா இயேசுவின் பிறப்பு பற்றி யார் மற்றும் என்ன என்பது போன்ற காரியத்தை கூறினார், ஆனால் காபிரியேல் தான் எப்படி என்ற செய்தியை கொண்டு வந்தார்: “பரிசுத்த ஆவி உன்மேல் வரும்;…ஆதலால் உன்னிடத்தில் பிறக்கும் பரிசுத்தமுள்ளது தேவனுடைய குமாரன் என்னப்படும்.”

மரியாள் மேல் அசைவாடின பரிசுத்த ஆவியின் வல்லமையால் கிடைத்த "தேவன் நம்மோடு" என்ற அதிசயத்தை கருத்தில் கொள்ளும்போது, இயேசுவுக்குள் மறவாமல் களிகூருங்கள் ஏனெனில் அந்த பரிசுத்த ஆவியானவர் இன்றும் இருக்கிறார். இயேசு தான் உலகிலிருந்து எடுத்துக் கொள்ளப்படுவதற்காக தன் சீடர்களை தயார் படுத்தும்போது, தான் போவது நல்லது என்றும், பின்பு அவர்கள் பரிசுத்த ஆவியின் வரங்களையும் வல்லமையும் பெற்றுக்கொள்வார்கள் என்று கூறினார். பூமியில் இயேசு முழு கடவுளாகவும் முழு மனிதனாகவும் இருந்தார்- அவரால் ஒரு நேரத்தில் ஒரு இடத்தில் மாத்திரமே இருக்க முடியும். ஆனால் பரிசுத்த ஆவியின் வல்லமையால், நாம் ஒவ்வொருவரும் எந்நேரமும் அவரை அனுக இயலும், நாம் இருக்கும் இடத்திலேயே!

மரியாளின் வயிற்றில் இயேசுவைக் கருத்தரித்த பரிசுத்த ஆவியானவர், அவர் பூமியில் நம்முடன் இருப்பதை சாத்தியமாக்குகிறார், அதே ஆவியானவர் எப்போதும் நம்மோடு இருக்கும்படி தன்னுடைய இடத்தில் வருகிறார் என்று இயேசு சொன்னார். கர்த்தர் தம் மகனை பரிசுத்த ஆவியின் வல்லமை மூலமாக அனுப்பின போது, அவரை தேவன் என்று அறிக்கையிடுபவர்களுக்காக அழியாத தம் சமூகத்தை உருவாக்கி உறுதிப்படுத்தினார்.

இந்த கிறிஸ்துமஸில், நீண்ட காலத்திற்கு முன்பு தேவன் இயக்கிய வரங்களின் வல்லமையை உங்கள் இதயத்தில் எதிரொலிக்க அனுமதியுங்கள். ஒருவேளை உங்களுக்கு பிரியமானவர்களுடன் நீங்கள் பரிசுகள் மற்றும் இரவு உணவுடன் இந்நாளை கொண்டாடுகிறீர்களோ அல்லது துக்கித்து கொண்டிருக்கிறீர்களோ எதுவானாலும், இம்மானுவேல் உங்களுக்காக வந்துவிட்டார் என்பதை அறிந்து கொள்ளுங்கள். அவர் ஒரு மேலாளர், சிலுவை அல்லது கல்லறையை ஆக்கிரமிக்க வரவில்லை— சதாகாலமும் உள்ள பரிசுத்த ஆவியின் வல்லமையால் உங்கள் உள்ளத்தில் வாழ வந்தார். கிறிஸ்மஸின் பரிசு எப்போதும் உங்களுக்காகவே நியமிக்கப்பட்டது, அவர் எப்போதும் உங்களுடன் இருக்கிறார்!

ஜெபம்: பிதாவே, உமது மகனை பூமிக்கு அனுப்பியதற்காக நன்றி. கிறிஸ்துமஸ் காலத்தில் கொண்டாட இத்தகைய பரிசை தந்தற்காய் நன்றி. நீர் என்னை இவ்வளவாய் நேசிக்கிறீர், என்னோடு எப்போதும் இருக்க விரும்புகிறீர் என்பதை அறியும்போது மனத்தாழ்மை அடைகிறேன். பரிசுத்த ஆவியானவரே, நான் எங்கிருந்தாலும் நீர் என்னோடு இருக்கிறீர் என்று நினைக்க உதவி செய்யும்.

 

நாள் 6

இந்த திட்டத்தைப் பற்றி

God With Us

கிறிஸ்துமஸ் என்பது மிகுந்த மகிழ்ச்சியின் காலம், நம்முடைய இரட்சகராகிய இயேசுவின் பிறப்பைக் குறிக்கிறது. இயேசுவின் வருகையைப் பற்றி பைபிள் முழுவதும் பல தீர்க்கதரிசனங்கள் உள்ளன, இந்த தியானம் மூலம், தேவன் வருவதை அறிவிக்க வேதத்தில் தேவன் பயன்படுத்தும் ஏழு பெயர்களைப் பார்ப்போம். இந்த பெயர்களில் ஒவ்வொன்றையும் இயேசு எவ்வாறு உள்ளடக்குகிறார் என்பதையும், அவர் பூமியில் நடந்தபோது இன்றும் நமக்குப் பொருத்தமாக இருப்பதையும் ஆராய்வோம்.

More

இந்த திட்டத்தை அளித்த ஹைலாண்ட்ஸ் தேவாலயத்துக்கு எங்கள் நன்றியை தெரிவித்து கொள்கிறோம். மேலும் தகவல் அறிய http://www.churchofthehighlands.com க்கு செல்லவும்