தேவன் நம்மோடுமாதிரி
நித்திய பிதா
நம் பூமிக்குரிய பிதாக்களுடன் நாம் அனைவரும் வெவ்வேறு அனுபவங்களைக் கொண்டிருக்கிறோம், எந்த உறவும் சரியானதல்ல என்பதை நாம் அறிவோம். ஒருவேளை “தந்தை” என்ற பெயர் அன்பான நினைவுகளைத் தருகிறதாயிருக்கலாம் அல்லது பாரமானதாக இருக்கலாம், இயேசுவின் முலம் நமக்கு பரிபூரண, நித்திய பிதா கிடைத்தது எத்தனை பெரிய சிலாக்கியம்.
இயேசுவின் வாழ்க்கை, சிலுவை மரணம் மற்றும் உயிர்த்தெழுதல் மூலம் தேவனோடு நேரடியாக தொடர்பு கொள்ளும் ஆசீர்வாதத்தை பெற்றிருக்கிறோம். நாம் இயேசுவை பின்பற்றும் போது, தேவனுடைய குடும்பத்தில் தத்தெடுத்துக் கொள்ளப்படுகிறோம், பின்பு அவருடைய பிள்ளையாக அவருடைய பராமரிப்பின் கீழ் வாழ்வதன் அனைத்து நன்மைகளையும் அனுபவிக்கிறோம்.
இயேசு அதில் ஒரு நன்மையை இளைய குமாரன் உவமையில் அடிக்கோடிட்டு காண்பிக்கிறார், தேவன் தன் பிள்ளைகளை எவ்வளவாய் நேசிக்கிறார் என்று - நாம் எவ்வளவு தூரம் சுற்றிதிரிந்தாலும், எப்படி நம்மை ஒருபோதும் விட்டுக்கொடுப்பதில்ல என்று! இயேசு தன் சீடர்களுக்கு ஜெபிக்க கற்று கொடுத்தபோது, அத்தருனத்தை பயன்படுத்தி கர்த்தரிடத்தில் தைரியமாக கேட்பவர்களுக்கு, அவர் எவ்வளவு அபரிமிதமாக செய்ய தயாராக இருக்கிறார் என்று நினைவுபடுத்தினார்
“உங்களில் எந்த மனுஷனானாலும் தன்னிடத்தில் அப்பத்தைக் கேட்கிற தன் மகனுக்குக் கல்லைக் கொடுப்பானா? மீனைக் கேட்டால் அவனுக்குப் பாம்பைக் கொடுப்பானா? ஆகையால், பொல்லாதவர்களாகிய நீங்கள் உங்கள் பிள்ளைகளுக்கு நல்ல ஈவுகளைக் கொடுக்க அறிந்திருக்கும்போது, பரலோகத்திலிருக்கிற உங்கள் பிதா தம்மிடத்தில் வேண்டிக்கொள்ளுகிறவர்களுக்கு நன்மையானவைகளைக் கொடுப்பது அதிக நிச்சயம் அல்லவா?" (மத்தேயு 7:9-11)
நம் அனுபவங்களை பொருட்படுத்தாது, மாறாத, நல்ல தகப்பனோடு உறவு கொள்ள அழைக்கப்படுகிறோம்.எவ்வளவு அற்புதமான ஆசீர்வாதம் அது.
இந்த காலத்தில், யாக்கோபு புத்தகத்தில் காணப்படும் நித்திய பிதா என்பதற்கான அழகான விளக்கத்தால் உற்சாகப்படுங்கள் “நன்மையான எந்த ஈவும் பூரணமான எந்த வரமும் பரத்திலிருந்துண்டாகி, சோதிகளின் பிதாவினிடத்திலிருந்து இறங்கிவருகிறது; அவரிடத்தில் யாதொரு மாறுதலும் யாதொரு வேற்றுமையின் நிழலுமில்லை." (யாக்கோபு 1:17) அவரிடத்தில் நமக்கு நம்பிக்கை உண்டு, சுகம் உண்டு, சதாகாலமும் அவருடைய பராமரிப்புக்கான வாக்கும் உண்டு!
ஜெபம்: ஒரு தகப்பன் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு மிக சிறந்த அடையாளமாய் இருப்பதற்காய் நன்றி. இக்காலத்தின் மையம் நீர் என்பதை உணர என் இருதயத்தை மென்மைபடுத்தும். நீரே நல்ல தகப்பன்!
உறவு
இந்த திட்டத்தைப் பற்றி
கிறிஸ்துமஸ் என்பது மிகுந்த மகிழ்ச்சியின் காலம், நம்முடைய இரட்சகராகிய இயேசுவின் பிறப்பைக் குறிக்கிறது. இயேசுவின் வருகையைப் பற்றி பைபிள் முழுவதும் பல தீர்க்கதரிசனங்கள் உள்ளன, இந்த தியானம் மூலம், தேவன் வருவதை அறிவிக்க வேதத்தில் தேவன் பயன்படுத்தும் ஏழு பெயர்களைப் பார்ப்போம். இந்த பெயர்களில் ஒவ்வொன்றையும் இயேசு எவ்வாறு உள்ளடக்குகிறார் என்பதையும், அவர் பூமியில் நடந்தபோது இன்றும் நமக்குப் பொருத்தமாக இருப்பதையும் ஆராய்வோம்.
More