தேவன் நம்மோடுமாதிரி

God With Us

7 ல் 5 நாள்

சமாதானத்தின் தேவன்

நமக்கு வெளிச்சம், ஜீவன், சுகம் தருவதற்காக மகிமையான பரலோகம் விட்டு பூமிக்கு இயேசு வந்தார், இது அவரில் நமக்கு எத்தனை பெரிய பாக்கியம் —உண்மையிலேயே அவர் மகிமையின் ராஜா!

ஏசாயா 9:6ல், கர்த்தர் தீர்க்கதரிசியின் முலம் இயேசுவின் வரவை பற்றி முன்னறிவித்தார்—அவருடைய பல பாத்திரங்களில் அல்லது நாமங்களில் அவர் சமாதான இளவரசர் என்று அழைக்கப்படுகிறார், அது "சமாதான தேவன்" என்று மொழிபெயர்க்கபடுகிறது. ஆனால் இந்த சத்தியத்தை பார்ப்பது மற்றும் நம்புவது என்ற நிலையிலிருந்து அவர் மாத்திரமே தரக்கூடிய சமாதானத்தில் நடப்பது மற்றும் அனுபவிப்பது என்ற நிலைக்கு எப்படி செல்வது?

புதிய ஏற்பாட்டில், இயேசு தன் சீடர்களிடம் சொன்னார், "என்னிடத்தில் உங்களுக்குச் சமாதானம் உண்டாயிருக்கும்பொருட்டு இவைகளை உங்களுக்குச் சொன்னேன். உலகத்தில் உங்களுக்கு உபத்திரவம் உண்டு, ஆனாலும் திடன்கொள்ளுங்கள்; நான் உலகத்தை ஜெயித்தேன் என்றார்." (யோவான் 16:33) கர்த்தர் இயேசுவின் பிறப்பை பற்றி அறிவித்தபோது அவரை சமாதான தேவன் என்று அழைத்தது தற்செயலாக நடக்கவில்லை. இயேசு கிறிஸ்து சென்ற பின் அவருடைய சீடர்கள் எவ்வளவு பாடுபடுவார்கள் என்பதை கர்த்தர் அறிந்திருந்தார், இன்றும் அவர் நாம் சந்திக்கும் பிரச்சனைகள் அறிந்திருக்கிறார்.

நாம் அடிக்கடி நம் வாழ்க்கையின் எல்லா காரியத்தையும் கட்டுப்படுத்த முயல்கிறோம், அதன் காரணமாக எல்லா சூழ்நிலையின் பாரமும் நம்மீது சுமருகிறது, ஆனால் கர்த்தர் ஒருபோதும் அதை நாம் தனியே சுமக்க விரும்பவில்லை. நமக்கும் தேவனுக்கும் உள்ள உறவை முதன்மைப்படுத்தி, நம் கவலைகளை அவரிடம் கொண்டு வரும்போது அவரிடத்திலிருந்து நேரடியாக வரும் இயற்கைக்கு அப்பாற்பட்ட சமாதானத்தை பெற்றுக்கொள்ளும்படி விடுதலையாக்கபடுகிறோம். இயேசு பிறப்பதற்கு முன்னமே, கர்த்தர் நம்முடைய எந்த மற்றும் எல்லா பிரச்சனைக்கும் அவருடைய பிள்ளைகள் என்ற அதிகாரத்தின் மூலமாக பதிலளித்துள்ளார்—எத்தனை ஆச்சரியம்!

இக்காலத்திலே, இயேசுவில் நமக்கு கிடைக்கக்கூடிய விடுதலை மற்றும் சமாதானத்தை நினைவு கூறுவோம். நாம் நிச்சயமாக கடினமான சூழ்நிலையை சந்திக்க வேண்டியிருக்கும், ஆனால் அவருடைய கர்த்தத்துவத்தின் மூலம், நமக்காக நாம் அமையக்கூடிய எதையும் மிஞ்சும் இளைப்பாறுதலும் சமாதானமும் கிடைக்கும்.

ஜெபம்: பிதாவே, இயேசுவின் மூலம் நீர் தந்த சமாதானத்திற்காய் நன்றி. அதை நினைவுகூர்ந்து உம் சமுகத்தில் இளைப்பாற உதவும். நான் எதை சந்தித்தாலும், நீர் என்னோடு இருக்கிறீர், எல்லா புரிந்துகொள்ளுதற்கும் அப்பாற்பட்ட சமாதானம் தருகிறீர்—நன்றி!

வேதவசனங்கள்

நாள் 4நாள் 6

இந்த திட்டத்தைப் பற்றி

God With Us

கிறிஸ்துமஸ் என்பது மிகுந்த மகிழ்ச்சியின் காலம், நம்முடைய இரட்சகராகிய இயேசுவின் பிறப்பைக் குறிக்கிறது. இயேசுவின் வருகையைப் பற்றி பைபிள் முழுவதும் பல தீர்க்கதரிசனங்கள் உள்ளன, இந்த தியானம் மூலம், தேவன் வருவதை அறிவிக்க வேதத்தில் தேவன் பயன்படுத்தும் ஏழு பெயர்களைப் பார்ப்போம். இந்த பெயர்களில் ஒவ்வொன்றையும் இயேசு எவ்வாறு உள்ளடக்குகிறார் என்பதையும், அவர் பூமியில் நடந்தபோது இன்றும் நமக்குப் பொருத்தமாக இருப்பதையும் ஆராய்வோம்.

More

இந்த திட்டத்தை அளித்த ஹைலாண்ட்ஸ் தேவாலயத்துக்கு எங்கள் நன்றியை தெரிவித்து கொள்கிறோம். மேலும் தகவல் அறிய http://www.churchofthehighlands.com க்கு செல்லவும்