தேவன் நம்மோடுமாதிரி
அற்புதமான ஆலோசகர்
ஏசாயாவில் இயேசு நம்முடைய அற்புதமான ஆலோசகராக குறிப்பிடப்படுகிறார், புதிய ஏற்பாட்டில் அவருடைய ஊழியம் அதை உறுதிப்படுத்துகிறது. ஜெப ஆலயங்களைப் போல சமூகரீதியாக அங்கீகரிக்கப்பட்ட இடங்களில் இயேசு நம்பிக்கையையும் சுகத்தையும் அளிக்கவில்லை. அவர் வீதியில் தனது ஊழியத்தை செய்தார்; இழந்து போனவர்களையும், காயப்பட்டோரையும், உடைந்து போனோரையும், குறிப்பாக சமுதாயத்தால் ஒதுக்கபட்டோரையும் தேடினார். நாம் இருக்கும் இடத்தில் வந்து நம்மை சந்திக்கும் அற்புதமான ஆலோசகரிடத்தில் நமக்கு எத்தனை பாக்கியம்.
நம்மைப் போலவே இயேசுவும் எல்லா வழிகளிலும் சோதிக்கபட்டார் - ஆனாலும் பாவம் செய்யவில்லை என்று நினைவுட்டபடுகிறோம். வரவிருக்கும் வலியையும் பழிச்சொற்களையும் அறிந்தே தேவன் மனிதனானார், வாழ்வின் ஒவ்வொரு காரியத்தையும் தானே அனுபவிக்க தேர்ந்தெடுத்தார். இயேசு, நமது போராட்டங்களை உணரக்கூடிய ஒருவர் மாத்திரமல்ல, அவற்றில் நம்மோடு நடக்க தயாராக இருக்கிறவரும் கூட.
ஒரு நண்பரிடமோ வழிகாட்டியிடமோ நாம் அறிவுரை கேட்கும்போது எப்படி நேர்மையும் மனத்தாழ்மையும் வேண்டுமோ அப்படியே தேவனிடம் நம் மனபாரத்தை இறக்கி வைக்கும்போது நேர்மையும் மனத்தாழ்மையையும் தேவன் எதிர்பார்க்கிறார். நாம் அப்படி செய்யும்போது, நல்ல ஆலோசனைகளையும் விட அதிகமாக பெற்றுக்கொள்வோம் - அவரிடத்தில் மட்டுமே கிடைக்கக்கூடிய வளர்ச்சி, சுகம் மற்றும் வெற்றி ஆகியவற்றை அனுபவிப்போம்.
நாம் கிறிஸ்துமஸைக் கொண்டாடும் இந்த பொழுதில், வாழ்க்கையை தனியாக எதிர்கொள்ள வேண்டியதில்லை என்பதை நினைவில் கொள்வோம். நம் ஆலோசகர், இயேசுவோடு இணையவும், மேலும் அவரிடத்தில் நேர்மையடையவும் நேரத்தை செலவிடுங்கள். தேவ வார்த்தையில் அவரை தேடுங்கள், நிம்மதியாக இருங்கள் ஏனெனில் அவர் உண்மையுள்ளவர், அவர் உங்களருகில் வருவார். அவரிடத்தில் நீங்கள் ஞானம், விவேகம் மற்றும் வெளிப்பாடு ஆகியவற்றைக் காண்பீர்கள்- அவரிடத்தில் கிடைக்கபெறாத பதிலே இல்லை!
ஜெபம்: இயேசுவே, நான் சந்திக்கும் சோதனைகளோடு தொடர்பு கொள்ளதக்கதாக நீர் பூமிக்கு வந்து எல்லா சோதனைகளையும் எதிர்கொண்டதற்காக நன்றி. நான் எந்த காரியத்தையும் உம்மிடம் கொண்டு வரமுடியும் என்பதனால் மிகுந்த நன்றியுள்ளவனாக இருக்கிறேன். என் ஆத்மாவை உருவாக்கி பராமரித்தமைக்கு நன்றி. எல்லாவற்றையும் உமக்கு முன் வைக்க எனக்கு உதவும், நீர் என்னோடு நடக்கும் எல்லா சூழலிலும் உம்மை நம்ப உதவும். என் அற்புதமான ஆலோசகராக இருப்பதற்கு நன்றி.
இந்த திட்டத்தைப் பற்றி
கிறிஸ்துமஸ் என்பது மிகுந்த மகிழ்ச்சியின் காலம், நம்முடைய இரட்சகராகிய இயேசுவின் பிறப்பைக் குறிக்கிறது. இயேசுவின் வருகையைப் பற்றி பைபிள் முழுவதும் பல தீர்க்கதரிசனங்கள் உள்ளன, இந்த தியானம் மூலம், தேவன் வருவதை அறிவிக்க வேதத்தில் தேவன் பயன்படுத்தும் ஏழு பெயர்களைப் பார்ப்போம். இந்த பெயர்களில் ஒவ்வொன்றையும் இயேசு எவ்வாறு உள்ளடக்குகிறார் என்பதையும், அவர் பூமியில் நடந்தபோது இன்றும் நமக்குப் பொருத்தமாக இருப்பதையும் ஆராய்வோம்.
More