தேவன் நம்மோடுமாதிரி

God With Us

7 ல் 6 நாள்

மேய்ப்பர்

மேய்ப்பர் என்ற பதவிப் பெயர் யூதர்களுக்கு குறிப்பிட்ட அர்த்தம் அளித்தாலும் நாம் அதை இயல்பாக்கி, கர்த்தர் இயேசுவை பற்றி கூற நினைப்பதை தவறாக புரிந்து கொள்கிறோம்.

ஒரு மேய்ப்பனின் பாரம்பரிய பாத்திரம் கவர்ச்சியானது. உண்மையில், அது அதிக நேர உழைப்பு, ஆபத்தான நேரங்களை சந்திக்கும் கடினமான வேலை மட்டுமல்ல மந்தையின் நல்வாழ்வுக்கு முழுமையான அர்ப்பணிப்பு தேவை. மேய்ப்பன் மந்ததையை உணவு மற்றும் உறைவிடத்திற்கு வழி நடத்த வேண்டும், ஒவ்வொரு இரவும் மந்தைக்காக உத்தரவாதம் கொடுத்தார், வழி தவறியவைகளை தேடி மீட்டார். திருடர்கள் மற்றும் பட்சிக்கும் மிருகங்களிடமிருந்தும் தன் உயிரை பணயம் வைத்து காப்பாற்றினார்.

ஆடுகள் உணவுக்கான உள்ளுணர்வு இல்லாதவை, இருப்பிடத்தை கண்டுபிடிக்க சிரமப்படுபவை, எளிதாக வழிதவறக்கூடியவை, அதுபோலவே நாமும் நம் மேய்ப்பர் இல்லையெனில் நோக்கற்று திரிகிறவர்களாய் இருப்போம். இயேசுவில் நம் தேவைகள் சந்திக்கபடுகிறது, பாதுகாப்பு மற்றும் வழிகாட்டுதல் கிடைக்கிறது.

புதிய ஏற்பாடு முழுவதும் இயேசு நமது நல்ல மேய்ப்பராக நினைவுட்டபடுகிறார். இடறிப்போன ஆட்டின் உவமையில், தொன்னூற்றி ஒன்பது ஆட்டை விட்டு விட்டு ஒரு ஆட்டின் பின் போகிறார், அதன் மூலம் தொலைந்து போனவர்களை குறித்த தன் இருதயத்தையும், நம்மை பாதுகாப்பாக கூட்டி சேர்ப்பதற்கான தன் அற்பணிப்பையும் வெளிப்படுத்துகிறார்.

பிலிப்பியரில், எப்படி மேய்ப்பன் தன் மந்தயை பராமரிக்கிறனோ அப்படியே நம் தேவைகள் அனைத்தும் கர்த்தரால் இயேசுவுக்குள் சந்திக்கப்படும் என்றுஅப்போஸ்தலரால் நினைவுட்டபடுகிறோம். மறுபடியும் லூக்கா 13ல் தன் பிள்ளைகளை பாதுகாக்க தன் தீவிரமான ஆசையை இயேசு குறிப்பிடுகிறார், நாம் அவரை பின்பற்ற தயாராக இருந்தால் மாத்திரமே.

யோவான் 10: 27-30 என்.ஐ.வி யில், இயேசு கூறினார்:

என் ஆடுகள் என் சத்தத்திற்குச் செவிகொடுக்கிறது, நான் அவைகளை அறிந்திருக்கிறேன், அவைகள் எனக்குப் பின்செல்லுகிறது.நான் அவைகளுக்கு நித்தியஜீவனைக் கொடுக்கிறேன், அவைகள் ஒருக்காலும் கெட்டுப்போவதில்லை, ஒருவனும் அவைகளை என் கையிலிருந்து பறித்துக்கொள்வதுமில்லை.நானும் பிதாவும் ஒன்றாயிருக்கிறோம் என்றார்.

என்ன ஒரு நல்ல மேய்ப்பன், உண்மையில்!

நாம் கிறிஸ்துமஸை நெருங்கும் இந்த பொழுதில், ​​இயேசு நம்முடைய நல்ல மேய்ப்பர் என்பதை நினைவில் வையுங்கள், அவரிடத்தில் நம் தேவைகள் சந்திக்கப்படும், நித்திய வாழ்வு கிடைக்கும் மேலும் அவருடைய கவனிப்பின் பாதுகாப்பில் இருந்து ஒருவரும் நம்மை பறிக்க முடியாது என்ற வாக்கையும் பெறுகிறோம். மேய்ப்பன் தூரத்தில் இருந்து மந்தையை மேய்க்க முடியாதது போல, இயேசு நம் அருகிலேயே எப்போதும் இருக்கிறார். அவர் நம் அருகில் இருக்கிறார், பசும்புல் மேய்ச்சலுக்கு அழைத்து செல்வார் என்கிற முழு நிச்சயத்தோடு அவர் சத்தத்தை கேட்போம்.

ஜெபம்: பிதாவே, இயேசுவை எங்கள் நல்ல மேய்ப்பராக உருவகபடுத்தியதற்கு நன்றி, என் எல்லா தேவையையும் அவர் மூலம் சந்திப்பதற்காய் நன்றி. உம் சத்தம் தெளிவாய் கேட்க செவிகள் தாரும், எங்கே அழைத்தாலும் வரும் தைரியம் தாரும். நான் ஒருபோதும் உங்கள் கவனிப்பிற்கு வெளியே இருக்க மாட்டேன், உமது பண்டகசாலையில் எனக்காக நன்மைகள் மாத்திரமே உள்ளது என்று விசுவாசிக்கிறேன்.

நாள் 5நாள் 7

இந்த திட்டத்தைப் பற்றி

God With Us

கிறிஸ்துமஸ் என்பது மிகுந்த மகிழ்ச்சியின் காலம், நம்முடைய இரட்சகராகிய இயேசுவின் பிறப்பைக் குறிக்கிறது. இயேசுவின் வருகையைப் பற்றி பைபிள் முழுவதும் பல தீர்க்கதரிசனங்கள் உள்ளன, இந்த தியானம் மூலம், தேவன் வருவதை அறிவிக்க வேதத்தில் தேவன் பயன்படுத்தும் ஏழு பெயர்களைப் பார்ப்போம். இந்த பெயர்களில் ஒவ்வொன்றையும் இயேசு எவ்வாறு உள்ளடக்குகிறார் என்பதையும், அவர் பூமியில் நடந்தபோது இன்றும் நமக்குப் பொருத்தமாக இருப்பதையும் ஆராய்வோம்.

More

இந்த திட்டத்தை அளித்த ஹைலாண்ட்ஸ் தேவாலயத்துக்கு எங்கள் நன்றியை தெரிவித்து கொள்கிறோம். மேலும் தகவல் அறிய http://www.churchofthehighlands.com க்கு செல்லவும்