தேவன் நம்மோடுமாதிரி
வல்லமையுள்ள தேவன்
ஏசாயா தீர்க்கதரிசியின் வார்த்தை குழந்தையின் உருவில் வடிவம் பெற தொடங்கிற்று. இயேசு, வல்லமையுள்ள தேவனாக முன்னறிவிக்கப்பட்டவர், பூமிக்கு வருகிறார், அவருடைய வல்லமை எல்லாவற்றையும் மாற்றக்கூடியது.
இயேசு எண்ணற்ற அற்புதங்கள் செய்தார்-பார்வையற்றோருக்கு பார்வை கொடுத்தார்,புயலை வார்த்தையால் அடக்கினார், மரித்தோரை உயிரோடு மீட்டார். அவரிடத்தில் வல்லமை,பெலன், நம் கற்பனைக்கு அப்பாற்பட்ட ஞானம் உண்டு—அவர் மெய்யாகவே எல்லாவற்றிலும் மகத்துவம் நிறைந்தவர்.
ஆனால் இயேசுவின் அற்புத வல்லமையின் எல்லை அவரோடு முடியவில்லை.தனது சீடர்களை பார்த்து இயேசு சொல்கிறார் "மெய்யாகவே மெய்யாகவே நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்; நான் என் பிதாவினிடத்திற்குப் போகிறபடியினால், என்னை விசுவாசிக்கிறவன் நான் செய்கிற கிரியைகளைத் தானும் செய்வான், இவைகளைப்பார்க்கிலும் பெரிய கிரியைகளையும் செய்வான்". (யோவான் 14:12)
என்ன பெரிய காரியங்களை நாம் செய்யக்கூடியவர்கள் என்று அவர் நினைக்கிறார்?
பேதுரு, இயேசுவின் நெருங்கிய சீடர்களில் ஒருவன், அவரை மூன்று முறை மறுதலித்தான், ஆனாலும் பெந்தேகொஸ்தே நாளில் எழுப்புதலை பிரசங்கித்து 3000 பேரை இரட்சிக்க தேவன் பேதுருவை பயன்படுத்தினார். கிறிஸ்தவர்களை மிக மோசமாக துன்புறுத்தியவர்களில் பவுல் ஒருவராக இருந்தார், ஆனாலும் கர்த்தர் அவரை மீட்டு, சுவிசேஷத்தை உலகின் பிற பகுதிகளுக்கு கொண்டு செல்ல அவரைப் பயன்படுத்தினார்.
உடல் சார்ந்த அற்புதங்கள் சிறந்தவை,நிச்சயமாக இன்றும் தேவனால் சாத்தியப்படும் ஆனால் இயேசுவில் நமக்கு இருக்கும் நித்திய நம்பிக்கை மற்றும் சமாதனத்திற்கும் மக்களின் கண்களைத் திறக்கும் பணிக்கு அவர் நம்மை அழைத்திருப்பது எவ்வளவு சிறப்பான காரியம். இயேசு தமது சீடர்களிடம் சுவிசேசத்தை கொண்டு செல்ல கட்டளையிட்டார்,
இந்த கிறிஸ்துமஸில், இயேசுவுக்குள் நமக்கிருக்கும் வல்லமையை கருத்தில்கொள்வோம்-அவர் நமக்கு நித்திய வாழ்வு அளித்திருக்கிறார், இயேசுவை மரித்தோரிலிருந்து உயிர்த்தெழ செய்த அந்த வல்லமை நமக்குள் இருக்கிறது. தேவன் நம் வாழ்வில் வல்லமையுள்ளவராக செயல்படுவதோடு மட்டுமல்லாமல் நம் மூலம் அநேகருடைய வாழ்வில் வல்லமையுள்ளவராக செயல்படுகிறார் என்பதில் உற்சாகமாயிருங்கள். அன்ட சராசரத்தின் சொந்தக்காரர் அவர் ராஜ்யத்திற்க்காக நம்மை பயன்படுத்துவது எவ்வளவு தாழ்மையான காரியம்!
ஜெபம்: பிதாவே, எங்களை மிகவும் நேசிப்பதற்கும், உங்கள் ராஜ்யத்தைக் கட்டியெழுப்ப எங்களுக்குத் தேர்ந்தெடுத்தமைக்கும் நன்றி. உம் வல்லமை எனக்குள் செயல்படுகிறது என்று உம்முடைய வார்த்தை கூறுகிறது. நான் கற்பனை செய்வதற்கும் மேலாக உம்முடைய நாமத்தில் சாதிக்க உதவும்.
இந்த திட்டத்தைப் பற்றி
கிறிஸ்துமஸ் என்பது மிகுந்த மகிழ்ச்சியின் காலம், நம்முடைய இரட்சகராகிய இயேசுவின் பிறப்பைக் குறிக்கிறது. இயேசுவின் வருகையைப் பற்றி பைபிள் முழுவதும் பல தீர்க்கதரிசனங்கள் உள்ளன, இந்த தியானம் மூலம், தேவன் வருவதை அறிவிக்க வேதத்தில் தேவன் பயன்படுத்தும் ஏழு பெயர்களைப் பார்ப்போம். இந்த பெயர்களில் ஒவ்வொன்றையும் இயேசு எவ்வாறு உள்ளடக்குகிறார் என்பதையும், அவர் பூமியில் நடந்தபோது இன்றும் நமக்குப் பொருத்தமாக இருப்பதையும் ஆராய்வோம்.
More