ஆபாச வாழ்விலிருந்து விடுதலையை நோக்கி - ஜான் பெவரேயுடன்மாதிரி
வெட்கத்தை தூக்கியெறியுங்கள்
இன்றைக்கு நான் பகிர்ந்து கொள்ள விரும்புகிற ஒரு காரியம் - வெட்கம். இது சந்துருவின் நயவஞ்சக சூழ்ச்சிகளில் ஒன்று. பிசாசானவன் மாறுபாடான உதடுகள் கொண்டவன். உங்களை பாவத்திற்குள் தள்ளுவதற்காக ஆசை வார்த்தைகளாக பேசுவான். சிற்றின்பங்களை பெரிய சந்தோஷங்களாக காண்பித்து பேசுவான். அந்த வலைக்கு நாம் இரையான பின்பதாகவோ, நம்மை குற்றப்படுத்தி, தாழ்வு மனப்பான்மையை கொண்டுவந்து ஆக்கினைக்குள்ளாக்கி பேசுவான். அவனுடைய சத்தத்திற்கு செவிகொடுப்பது நம்மை அழிவுக்கு நேராக கொண்டு செல்லும்.
நீங்கள் தேவனுக்கு விரோதமாக பாவம் செய்தாலோ, தேவனுடைய சித்தத்திற்கு மாறாக சில முடிவுகளை உங்கள் வாழ்வில் எடுத்தாலோ, தேவனை துக்கப்படுத்தும் காரியங்களுக்கு உங்கள் வாழ்வில் இடம்கொடுத்திருந்தாலோ பரவாயில்லை. அவைகளை தவறென்று உணர்ந்து, மனம்திரும்பி, இயேசுவிடம் வாருங்கள். அந்த பாவங்களுக்கு இனியும் உங்கள் வாழ்வில் இடம்கொடுக்காதீர்கள். அவ்வளவு தான் தீர்வு. ஆனால், பிசாசோ உங்களை வெட்கத்திற்குட்படுத்தி, குற்றப்படுத்தி, நீங்கள் ஆக்கினை அடையப்போவது உறுதி, தேவன் உங்களை ஒருபோதும் ஏற்றுக்கொள்ளமாட்டார் என்பது போல பேசுவான். உங்களை வெட்கப்படுத்தும் பிசாசின் சத்தத்திற்கு இடம்கொடுக்காதிருங்கள். நீங்கள் யார் என்பதை உங்கள் சூழ்நிலைகள் அல்ல, தேவனே அடையாளப்படுத்தட்டும்.
ஆவியில் நிறைந்தவராய் பவுல் துணிவோடு சொல்வதை கவனியுங்கள்: ஆனபடியால், கிறிஸ்து இயேசுவுக்குட்பட்டவர்களாயிருந்து, மாம்சத்தின்படி நடவாமல் ஆவியின்படியே நடக்கிறவர்களுக்கு ஆக்கினைத்தீர்ப்பில்லை. (ரோமர் 8:1)
கிறிஸ்துவுக்குள் வாழ்கிறவர்கள் கட்டாயம் அறிந்திருக்கவேண்டிய ஒரு சத்தியம் - கிறிஸ்து உங்களை ஆக்கினைக்குள்ளாக தீர்க்கிறவர் அல்ல. உங்கள் மீது அவர் கொண்டிருக்கும் நேசத்தை குறைக்கும் அளவிற்கு சக்தி கொண்ட ஒரு செயலும் இந்த பூமியில் இல்லை. நீங்கள் என்றும் அவரது நேசத்திற்குட்பட்டவர்கள். பிசாசு சொல்வது போல், நீங்கள் பாவம் செய்தால், அவர் உங்களுக்கு எதிரானவராக மாறுபவர் அல்ல. அவர் என்றும் உங்கள் பட்சத்தில் இருந்து வழக்காடுபவர்.
ஆகையால் தான் வேதம் சொல்கிறது: ஆதலால், நாம் இரக்கத்தைப் பெறவும், ஏற்ற சமயத்தில் சகாயஞ்செய்யுங்கிருபையை அடையவும், தைரியமாய்க் கிருபாசனத்தண்டையிலே சேரக்கடவோம். (எபிரெயர் 4:16)
வாழ்வில் பிசாசு கொண்டு வரும் தந்திரங்களுக்கு இரையாகி நீங்கள் விழும்போது, வெட்கப்படுத்தும் சந்துருவின் சத்தத்தை கேட்டு, விழுந்தவண்ணமாகவே இராமல், தைரியமாய் எழுந்து தகப்பன் இயேசுவின் அரவணைப்பிற்குள் வாருங்கள். அவருடைய அரவணைப்பில், நீங்கள் கழுவப்பட்டு நீதிமான்கள் என்று அறிந்துகொள்வீர்கள். இந்த ஆழமான வெளிப்பாடு உங்களை மறுபடியும் பாவத்திற்கு அடிமைப்பட விடாது. மாறாக, உங்களை நீதிக்குள்ளான வாழ்வில் முன்னேறி செல்ல உங்களை உந்தும்.
ஞாபகம் வைத்துக்கொள்ளுங்கள், நம்மை மனம்திரும்புதலுக்கு ஏதுவாக நடத்துவதே தேவனுடைய இரக்கம் தான். அவர் அன்பு உங்களை பாவங்களற கழுவ விட்டுக்கொடுங்கள். கிறிஸ்து உங்களுக்காக செய்து முடித்த காரியங்களை தியானித்து, கிறிஸ்துவுக்குள் நீங்கள் யார் என்பதில் வசனத்தின் மூலம் தெளிவடையுங்கள். இயேசு தம்முடைய இரத்தத்தை சிந்தி உங்களுக்கு பெற்றுத்தந்த விடுதலைக்குள் பிரவேசியுங்கள்.
இந்த 5 நாட்கள் தியானம் உங்களுக்கு மிகுந்த பிரயோஜனமாக இருந்திருக்கும் என்று கர்த்தருக்குள் நம்புகிறேன். ஆபாச அடிமைத்தனத்திலிருந்து விடுதலை பெறுவதை குறித்து நீங்கள் மேலும் ஆழமாக அறிந்துகொள்ள விரும்பினால், இங்கே கிளிக் செய்யுங்கள்: Porn Free course, ஆபாசத்தின் அடிமைத்தனத்திலிருந்து விடுதலை பெறவும், அந்த விடுதலையில் நிலைகொண்டு வாழவும் இது உங்களுக்கு மேலும் உதவியாக இருக்கும்.
வேதவசனங்கள்
இந்த திட்டத்தைப் பற்றி
இந்த தியானம் உங்களை குற்றப்படுத்துகிற ஒன்றோ ஆக்கினைக்குள்ளாக்கி பேசுகிற ஒன்றோ அல்ல. உங்கள் சுயமுயற்சியை சார்ந்து வெளிவர முயற்சித்து நீங்கள் தோற்றிருக்கலாம். நீங்கள் இருக்கும் நிலைமைக்கே உங்களிடம் வந்து, அன்பாய் உங்கள் கரங்களை பிடித்து, கிருபையும் சாத்தியமுமாம் இயேசுவினிடத்தில் உங்களை அழைத்து வந்து விடுதலையை அனுபவிக்க செய்வதே இந்த தியானத்தின் நோக்கம்.
More