ஆபாச வாழ்விலிருந்து விடுதலையை நோக்கி - ஜான் பெவரேயுடன்மாதிரி

Porn Free With John Bevere

5 ல் 1 நாள்

நீங்கள் ஏன் விடுதலையாக விரும்புகிறீர்கள்?

நான் மிகவும் இளைஞனாய் இருக்கும்போதே இந்த வலைக்குள் சிக்கிக்கொண்டேன். ஆபாச புத்தகங்களை என் நண்பன் எனக்கு அறிமுகம் செய்து என்னை அடிமைக்குட்படுத்தியபோது எனக்கு வயது பன்னிரண்டு.

நான் இயேசுவை ஏற்றுக்கொண்டு இரட்சிக்கப்பட்ட பின்பு, சிலவற்றிலிருந்து துரிதமாக விடுதலை பெற்றேன். மதுப்பழக்கம், நண்பர்களோடு கூத்து கும்மாளம் ஆகியவற்றிலிருந்து எளிதில் வெளியேறிவிட்டேன். ஆனால் ஆபாச அடிமைத்தனத்திலிருந்து விடுபட சில காலம் சென்றது. கடினமாக இருந்தது. என் திருமணத்திற்கு பின்பதாகவும் இரண்டு வருடங்கள் அதன் பிடியில் சிக்கி இருந்தேன். நான் எவ்வளவு முயன்றாலும் என்னை அந்த பழக்கம் விடுவதாக இல்லை.

கடைசியில், 4 நாட்கள் உபவாசத்திற்கு பின்னரே நான் பூரண விடுதலையை பெற்றுக்கொண்டேன்.

அந்த உபவாச நாட்களில், நான் தேவனுடன் கேட்ட காரியம் இது தான். "நான் எவ்வளவோ முயற்சி செய்கிறேன். பல மாதங்களாக முயற்சிக்கிறேன்.ஏன் ஆண்டவரே என்னால் விட முடியவில்லை" என்று கேட்டேன். நான் கடைசியில் விடுதலையை பெற்றுக்கொண்டது, இந்த சத்தியத்தின் வெளிப்பாட்டிற்கு பின்பதாக தான். முன்பெல்லாம் இந்த அடிமைத்தனம் எனக்குள் துக்கத்தை உண்டாக்கும். ஆனால், அது விடுதலைக்கு ஏதுவான துக்கம் அல்ல.

கொரிந்தியருக்கு எழுதின இரண்டாம் நிருபத்தில் பவுல் கற்றுத்தருகிறார், "தேவனுக்கேற்ற துக்கம் பின்பு மனஸ்தாபப்படுகிறதற்கு இடமில்லாமல் இரட்சிப்புக்கேதுவான மனந்திரும்புதலை உண்டாக்குகிறது; லெளகிக துக்கமோ மரணத்தை உண்டாக்குகிறது." (2 கொரிந்தியர் 7:10).

எனது விடுதலை அனுபவத்திற்கு முன்பெல்லாம், அந்த பாவம் என் வாழ்வில் ஏற்படுத்தும் விளைவுகளை குறித்து தான் துக்கம் கொண்டிருந்தேன். என் திருமண வாழ்விற்கோ, என் ஊழிய வாழ்விற்கோ, இதனால் பாதிப்பு ஏற்பட நான் விரும்பவில்லை.

ஆனால், விடுதலையின் வாழ்விற்கு நான் கற்றுக்கொண்ட ஒரு பாடம் இதுவே! தேவனுக்கேற்ற துக்கம் என்பது - எனது இந்த செய்கை, என்னை நேசிக்கிறவர்களின் இருதயத்தை நோகடிக்கும் என்பதே. சுயநலமான பாதிப்பை மையப்படுத்தின துக்கம் அல்ல. தேவனையும் மற்றவர்களையும் மையப்படுத்தின துக்கமே, தேவனுக்கேற்ற துக்கம். தேவனுக்கேற்ற துக்கமே மனம்திரும்பதலுக்கு நம்மை வழிநடத்தும்.

இத்தகைய பாவத்திலிருந்து விடுபட நீங்கள் போராடி கொண்டிருக்கிறீர்களா? நீங்கள் சிந்திக்க வேண்டியது: உங்கள் துக்கம் எதனை மையப்படுத்தினது? உங்களுடைய பாதிப்பை மாத்திரம் மையப்படுத்துகிற லௌகிக துக்கமா? அல்லது தேவனுடைய அன்பால் கவரப்பட்டு வந்த தேவனுக்கேற்ற துக்கமா?

லௌகிக துக்கம் உங்களை கட்டுவிக்கும். தேவனுக்கேற்ற துக்கமே உங்களை விடுதலைக்கு நேராக அழைத்து செல்லும்.

உங்களுடைய துக்கம் தேவனுக்கேற்றதாக மாறும்படியாக ஜெபியுங்கள். தேவனை குறித்து அதிகம் அறிந்து கொள்ள விரும்புங்கள். கேளுங்கள் - அவர் உங்களுக்கு தம்மை வெளிப்படுத்துவார். இயேசுவோடு கூட நீங்கள் நெருங்க நெருங்க, அந்த நெருக்கத்திற்கு தடையாக வரும் எதையும் நீங்கள் வெறுப்பீர்கள். தேவனை மையப்படுத்தியே யோசிக்க ஆரம்பிப்பீர்கள். உங்கள் நோக்கம் சரியாக அமைகிற பட்சத்தில், முடியாததாக நீங்கள் முன்னர் நினைத்த சகல மாற்றங்களும், சாத்தியமாகும் - தேவனாலே!

நாள் 2

இந்த திட்டத்தைப் பற்றி

Porn Free With John Bevere

இந்த தியானம் உங்களை குற்றப்படுத்துகிற ஒன்றோ ஆக்கினைக்குள்ளாக்கி பேசுகிற ஒன்றோ அல்ல. உங்கள் சுயமுயற்சியை சார்ந்து வெளிவர முயற்சித்து நீங்கள் தோற்றிருக்கலாம். நீங்கள் இருக்கும் நிலைமைக்கே உங்களிடம் வந்து, அன்பாய் உங்கள் கரங்களை பிடித்து, கிருபையும் சாத்தியமுமாம் இயேசுவினிடத்தில் உங்களை அழைத்து வந்து விடுதலையை அனுபவிக்க செய்வதே இந்த தியானத்தின் நோக்கம்.

More

இத்திட்டத்தை வழங்கியமைக்காக ஜான் மற்றும் லிசா பெவெரே அவர்களுக்கு எங்கள் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். மேலும் தகவல் அறிய, https://www.messengercourses.com/porn-free க்கு செல்லவும்