ஆபாச வாழ்விலிருந்து விடுதலையை நோக்கி - ஜான் பெவரேயுடன்மாதிரி
![Porn Free With John Bevere](/_next/image?url=https%3A%2F%2Fimageproxy.youversionapi.com%2Fhttps%3A%2F%2Fs3.amazonaws.com%2Fyvplans%2F16824%2F1280x720.jpg&w=3840&q=75)
உனக்கு என்ன வேண்டும்?
புகைப்பழக்கத்திற்கு அடிமைப்பட்டிருந்த ஒரு நீண்ட கால நண்பர் எனக்குண்டு. இந்த பழக்கத்தின் ஆபத்தான விளைவுகள் எல்லாம் நன்கு தெரிந்திருந்தும் ஒரு நாளைக்கு குறைந்தது நான்கு கட்டு சிகரெட்டுகளை ஊதி தள்ளுவார். பல நாட்களாக இந்த மோசமான பழக்கத்திலிருந்து விடுபட அவர் ஜெபித்து வந்த போதிலும் எந்த மாற்றத்தையும் அவர் வாழ்க்கையில் அவரால் அனுபவிக்க முடியவில்லை.
ஒருநாள் அவரது சபையை சேர்ந்த நண்பர் ஒருவர், இவரால் பல நாட்களாக விடுபடமுடியாத அதே புகைப்பழக்கத்திலிருந்து சுலபமாக விடுதலை பெற்றதை கண்டு அறிந்துகொண்டார்.
எனது நண்பருக்கு இதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை.
கோபத்துடன் தேவ சமூகத்திற்கு சென்று, "ஆண்டவரே, இந்த பழக்கத்திலிருந்து என்னை விடுவிக்கும்படி இரண்டு வருடங்களாக கதறிக்கொண்டிருக்கிறேன். ஏன் என்னை இன்னும் நீர் விடுவிக்கவில்லை?" என்று முறையிட்டுள்ளார்.
தேவன் அவருக்கு மறுஉத்தரவாக, "ஏனென்றால், நீ அந்த பாவத்தை இன்னும் விரும்புகிறாய்" என்றாராம்.
அதிர்ச்சிக்குள்ளான அந்த நிமிடத்தில் தான் இவருக்கு அந்த சத்தியத்தின் வெளிப்பாடு கிடைத்திருக்கிறது. நாம் விரும்பிக்கொண்டிருக்கிற ஒரு பாவத்திலிருந்து தேவனால் நம்மை விடுவிக்க முடியாது. தேவன் ஒரு பொழுதும் மனிதர்களுடைய சுய சித்தத்திற்கு மாறாக அவர்களை வற்புறுத்தி செயல்படுகிறவர் அல்ல. அன்று முதல் என் நண்பர் தன் ஜெபத்தை சிறிது மாற்றிக்கொண்டு, "இந்த பாவத்தை வெறுக்க எனக்கு பெலன் தாரும் ஆண்டவரே, இதிலிருந்து நான் விடுதலை பெற மனப்பூர்வமாக விரும்புகிறேன்" என்று ஜெபிக்க ஆரம்பித்தார். தினசரி 4 கட்டு சிகரெட்டுகளை ஊதி தள்ளியவர், அன்றிலிருந்து இன்று வரை, அதிலிருந்து பூரண விடுதலையை அனுபவித்து வருகிறார்.
ரோமாபுரியருக்கு எழுதின நிருபத்தில் அப்போஸ்தலர் பவுலும் அதையே கற்றுத்தருகிறார். "உங்கள் அன்பு மாயமற்றதாக இருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக்கொண்டிருங்கள்." ரோமர் 12:9
விடுதலையை வாஞ்சிக்கிற நீங்கள் இருமனதோடு இருக்க முடியாது. முழு இருதயத்திலிருந்து நீங்கள் அந்த பாவத்தை வெறுத்து அதிலிருந்து விடுபட குழப்பமின்றி வாஞ்சிக்க வேண்டும். பாவத்தை நேசிக்கும் நம் இருதயம் தான், நம்மை நேசிக்கும் தேவனின் இருதயத்தை நோகடிக்கிறது என்பதை நாம் உணர்ந்துகொள்ளும் மாத்திரத்தில் தேவன் இலவசமாக அளிக்கும் அந்த விடுதலையை நம்மால் முழுமையாக சுதந்தரிக்க முடியும். தேவன் பார்க்கிற விதமாய் நாம் பாவத்தை பார்க்க ஆரம்பிக்கும் பொழுதே நம்மால் அதை வெறுக்க முடியும். பாவம் வஞ்சனையுள்ளது. நம்மை கெடுத்து நம் வாழ்வை அழிக்கும் சக்தி கொண்டது என்பதாலேயே தேவன் அதனை வெறுக்கிறார். நாமும் அவரை போலவே பாவத்தை வெறுக்க தேவன் நமக்கு பெலன் தருவராக.
தேவன் பார்க்கிற விதமாகவே நீங்களும் பார்க்க தேவனிடத்தில் உதவி கேளுங்கள். நீங்கள் பாவத்தை வெறுக்க அவரிடம் உதவி கேளுங்கள். 100 சதவீதம் மனநிலையோடு நீங்கள் பாவத்தை வெறுக்க ஆரம்பிக்கும் போது, நீங்கள் அதிலிருந்து ஏற்கனவே விடுதலையாக்கப்பட்டிருப்பீர்கள். குமாரன் விடுதலையாக்கினால், மெய்யாகவே விடுதலை ஆவீர்கள்.
வேதவசனங்கள்
இந்த திட்டத்தைப் பற்றி
![Porn Free With John Bevere](/_next/image?url=https%3A%2F%2Fimageproxy.youversionapi.com%2Fhttps%3A%2F%2Fs3.amazonaws.com%2Fyvplans%2F16824%2F1280x720.jpg&w=3840&q=75)
இந்த தியானம் உங்களை குற்றப்படுத்துகிற ஒன்றோ ஆக்கினைக்குள்ளாக்கி பேசுகிற ஒன்றோ அல்ல. உங்கள் சுயமுயற்சியை சார்ந்து வெளிவர முயற்சித்து நீங்கள் தோற்றிருக்கலாம். நீங்கள் இருக்கும் நிலைமைக்கே உங்களிடம் வந்து, அன்பாய் உங்கள் கரங்களை பிடித்து, கிருபையும் சாத்தியமுமாம் இயேசுவினிடத்தில் உங்களை அழைத்து வந்து விடுதலையை அனுபவிக்க செய்வதே இந்த தியானத்தின் நோக்கம்.
More
சம்பந்தப்பட்ட திட்டங்கள்
![ஒரு புதிய ஆரம்பம்](/_next/image?url=https%3A%2F%2Fimageproxy.youversionapi.com%2Fhttps%3A%2F%2Fs3.amazonaws.com%2Fyvplans%2F54351%2F320x180.jpg&w=640&q=75)
ஒரு புதிய ஆரம்பம்
![ஒருமனப்பாடு - திருமணத்திற்கான ஆவிக்குரிய போர் ஆயுதம்](/_next/image?url=https%3A%2F%2Fimageproxy.youversionapi.com%2Fhttps%3A%2F%2Fs3.amazonaws.com%2Fyvplans%2F54353%2F320x180.jpg&w=640&q=75)
ஒருமனப்பாடு - திருமணத்திற்கான ஆவிக்குரிய போர் ஆயுதம்
![சிசெரா என்ற தந்திரவாதியை அழித்த யாகேல் என்ற வரையாடு!](/_next/image?url=https%3A%2F%2Fimageproxy.youversionapi.com%2Fhttps%3A%2F%2Fs3.amazonaws.com%2Fyvplans%2F52956%2F320x180.jpg&w=640&q=75)
சிசெரா என்ற தந்திரவாதியை அழித்த யாகேல் என்ற வரையாடு!
![சீடத்துவம்](/_next/image?url=https%3A%2F%2Fimageproxy.youversionapi.com%2Fhttps%3A%2F%2Fs3.amazonaws.com%2Fyvplans%2F53373%2F320x180.jpg&w=640&q=75)
சீடத்துவம்
![தேவனோடு நெருங்கி வளர்தல்](/_next/image?url=https%3A%2F%2Fimageproxy.youversionapi.com%2Fhttps%3A%2F%2Fs3.amazonaws.com%2Fyvplans%2F52715%2F320x180.jpg&w=640&q=75)
தேவனோடு நெருங்கி வளர்தல்
![ஆண்டவரின் வாக்குத்தத்தங்களைப் பற்றிய இரகசியங்கள்](/_next/image?url=https%3A%2F%2Fimageproxy.youversionapi.com%2Fhttps%3A%2F%2Fs3.amazonaws.com%2Fyvplans%2F52834%2F320x180.jpg&w=640&q=75)
ஆண்டவரின் வாக்குத்தத்தங்களைப் பற்றிய இரகசியங்கள்
![நம்மில் தேவனின் திட்டம்](/_next/image?url=https%3A%2F%2Fimageproxy.youversionapi.com%2Fhttps%3A%2F%2Fs3.amazonaws.com%2Fyvplans%2F54352%2F320x180.jpg&w=640&q=75)
நம்மில் தேவனின் திட்டம்
![வருட இறுதியில் ஒரு மறு தொடக்கம் - உபவாச ஜெபம்](/_next/image?url=https%3A%2F%2Fimageproxy.youversionapi.com%2Fhttps%3A%2F%2Fs3.amazonaws.com%2Fyvplans%2F54350%2F320x180.jpg&w=640&q=75)
வருட இறுதியில் ஒரு மறு தொடக்கம் - உபவாச ஜெபம்
![வேத வசனம் மனனம் செய்தல் (புதிய ஏற்பாடு) - புதியபாதை](/_next/image?url=https%3A%2F%2Fimageproxy.youversionapi.com%2Fhttps%3A%2F%2Fs3.amazonaws.com%2Fyvplans%2F54451%2F320x180.jpg&w=640&q=75)
வேத வசனம் மனனம் செய்தல் (புதிய ஏற்பாடு) - புதியபாதை
![விலையுயர்ந்த கிறிஸ்துமஸ் பரிசு - இயேசுவின் நாமம்!](/_next/image?url=https%3A%2F%2Fimageproxy.youversionapi.com%2Fhttps%3A%2F%2Fs3.amazonaws.com%2Fyvplans%2F52714%2F320x180.jpg&w=640&q=75)