ஆபாச வாழ்விலிருந்து விடுதலையை நோக்கி - ஜான் பெவரேயுடன்மாதிரி

Porn Free With John Bevere

5 ல் 4 நாள்

தூண்டுதலை தவிர்த்திடுங்கள்

மனம் புதிதாகிறதின் முக்கியத்துவத்தை குறித்து நேற்று நாம் தியானித்தோம். சுயாதீனத்தில் நாம் நடப்பதற்கு நமக்கு புதிய சிந்தை அவசியமாய் இருக்கிறது. அதுவே கிறிஸ்தவ வாழ்வின் நுணுக்கம். ஆயினும், அந்த மாற்றம், கண்மூடி திறப்பதற்குள் நடக்கிற மாற்றம் அல்ல. அது ஒரு பயணம். அந்த விசுவாச பயணத்தில் நாம் தளராமல் நடப்பதற்காகவே வேதவசனங்களை நாம் பற்றிக்கொள்ள வேண்டிய அவசியம் ஏற்படுகின்றது. இந்த விசுவாச வாழ்வில் நாம் முன்னேறி செல்லவிடாமல் சத்துரு கொண்டுவருகிற தடைகளை முறிப்பதற்க்கு நமக்கு பெலன் தருவதும் வேத வசனமே.

இந்த பயணத்தில் நாம் ஒவ்வொன்றாக கற்றுக்கொண்டு, சகல எண்ணங்களையும் கிறிஸ்துவுட்படுத்தி , விசுவாசத்தில் சீராக நடக்க பழகிக்கொண்டிருக்கிற இந்த காலகட்டத்தில், நமக்கென்று சில எல்லைகளை நாம் வைத்துக்கொள்வது நமக்கு அவசியமாக இருக்கிறது. நமக்காக நம் வாழ்வில் நாமே போட்டுக்கொள்ளும் எல்லைக்கோடுகள் அவை.

வேதமும் நம்மை அவ்வாறே எச்சரிக்கிறது: துன்மார்க்கருடைய பாதையில் பிரவேசியாதே; தீயோருடைய வழியில் நடவாதே. அதை வெறுத்துவிடு, அதின் வழியாய்ப் போகாதே; அதை விட்டு விலகிக் கடந்துபோ. (நீதிமொழிகள் 4:14‭-‬15).

பாவத்திலிருந்து விடுபட்ட ஒரு வாழ்க்கை நாம் வாழவேண்டுமானால், அதற்கு நேராய் நம்மை இழுத்து செல்லக்கூடிய வழிகளில் இருந்து நாம் விலகியே இருக்க வேண்டும். பாவத்திற்கு நேராக உங்களை தூண்டுவது எவை என்பது உங்களுக்கு மட்டுமே தெரியும். நீங்கள் இந்த கட்டத்தில், எடுக்க வேண்டிய முக்கியமான ஒரு முடிவு இது. அப்படிப்பட்ட உங்களை தூண்டக்கூடிய காரியங்களை நேர்மையாக யோசித்து பட்டியலிட்டு, உங்கள் வாழ்வில் இருந்து தூக்கி எறியவேண்டும். அவற்றிலிருந்து நீங்கள் விலகியே இருக்க வேண்டும்.

உங்களுக்கான எல்லை கோடுகளை நீங்களே போட்டுக்கொள்ள வேண்டும். பாவத்திற்கு தூண்டுகிற சில மொபைல் ஆப்-களை உங்கள் கைபேசியிலிருந்து அழித்துவிடலாம். சில காலங்களுக்கு இணையசேவையை நிறுத்திக்கொள்ளலாம். அல்லது நம்பகத்தன்மையுடைய ஒரு நண்பரை உங்கள் பொறுப்புடைமையுள்ள பங்காளராக உங்கள் வாழ்வில் வைத்துக்கொள்ளலாம். அவரிடம் நீங்கள் எதையும் மறைக்காமல் பகிர்ந்துகொள்ள வேண்டும் - உங்கள் கைபேசியின் கடவுச்சொல் உட்பட. எந்த நேரத்திலும் உங்கள் கைபேசியை வாங்கி பார்க்கும் உரிமையை அவர்க்கு கொடுக்கலாம். உங்கள் சூழ்நிலைகளுக்கு ஏற்றாற்போல உங்களுக்கான எல்லைக்கோடுகளை நீங்களே வரைந்துகொள்ள வேண்டும். இது மிக மிக அவசியமான ஒன்று.

பிரதானமாக நான் உங்கள் மனதில் விட்டு செல்ல விரும்புகிற காரியம் இது தான். இந்த மறுரூபத்தின் பிரயாணத்திலே, மனம் புதிதாகிக்கொண்டிருக்கும்போதும், புதிதான பின்பதாகவும், நீங்கள் முக்கியமாக செய்ய வேண்டிய ஒன்று - உங்களை மறுபடியும் பாவத்திற்கு தூண்ட கூடிய காரியங்களுக்கு தூரமாகவே இருங்கள். பாலியத்திற்குரிய இச்சைகளுக்கு விலகி ஓடவே வேதமும் நம்மை எச்சரித்து கற்றுக்கொடுக்கிறது. ஏனென்றால், கவனமின்மையால் அவைகளை நாம் நெருங்கவிட்டால், பாதிப்பு நமக்கே. பூரண விடுதலை பெற விரும்பினால், நம்மை தூண்டும் காரியங்களை விட்டு ஓடுவது மிக அவசியம்.

நாள் 3நாள் 5

இந்த திட்டத்தைப் பற்றி

Porn Free With John Bevere

இந்த தியானம் உங்களை குற்றப்படுத்துகிற ஒன்றோ ஆக்கினைக்குள்ளாக்கி பேசுகிற ஒன்றோ அல்ல. உங்கள் சுயமுயற்சியை சார்ந்து வெளிவர முயற்சித்து நீங்கள் தோற்றிருக்கலாம். நீங்கள் இருக்கும் நிலைமைக்கே உங்களிடம் வந்து, அன்பாய் உங்கள் கரங்களை பிடித்து, கிருபையும் சாத்தியமுமாம் இயேசுவினிடத்தில் உங்களை அழைத்து வந்து விடுதலையை அனுபவிக்க செய்வதே இந்த தியானத்தின் நோக்கம்.

More

இத்திட்டத்தை வழங்கியமைக்காக ஜான் மற்றும் லிசா பெவெரே அவர்களுக்கு எங்கள் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். மேலும் தகவல் அறிய, https://www.messengercourses.com/porn-free க்கு செல்லவும்