தேவனிடம் திரும்பும் வழியை கண்டறிதல்மாதிரி

Finding Your Way Back To God

5 ல் 5 நாள்

இதுவன்றோ வாழ்வு!

ஆண்டவருக்கு இவ்வுலகத்தை பற்றி ஒரு கனவு உள்ளது, அதில் நீங்களும் ஒரு அங்கம் வகிக்க அழைக்கப்பட்டுள்ளீர்கள் மீண்டும். இது நித்தியமான எல்லாவற்றிற்கும் ஆண்டவர் கொடுத்திருக்கும் ஒரு தவிர்க்கமுடியாத கனவு. உங்கள் வாழ்க்கை, உங்கள் சமூகம், மற்றும் உங்களை சுற்றியிருக்கும் உலகத்தை உள்ளடக்கிய கனவு அது.

நீங்கள் வாழும் ஒவ்வொரு வினாடியும், உங்களை ஆண்டவர் உணர்வுபூர்வமாய் அயராது நேசிக்கிறார் என்பதை நீங்கள் திடமாய் நம்ப வேண்டும் என்பதே அவர் கனவு. அவர் எப்படி உங்கள் குற்றங்குறைகளை மன்னித்து உங்களை மனப்பூர்வமாய் நேசிக்கிறார் என்பதை நம்புகிறீர்களோ அதே போல் மற்றவர்களின் குற்றங்குறைகளை மன்னித்து அவர்களை நீங்கள் நேசிப்பீர்கள் என்பதே உங்களைப்பற்றிய ஆண்டவரின் கனவு.

நீங்கள் ஆண்டவரிடம் திரும்பவும் நாடி ஓடி வர எதுவாக, இந்த பயணத்தில் நீங்கள் இறுதி முறையாய் முழித்து கொள்வது அவசியமாகிறது. ஆண்டவர் தன்னுடைய நித்திய வீட்டில் நமக்கு குடுக்க இருக்கும் புதிய வாழ்க்கையை பற்றி நாம் உண்மையாய் விழித்துணரும் வேளையில் தானே நம் எதிர்காலத்தை பற்றிய சாத்தியங்களை குறித்த புதிய நம்பிக்கையை காணமுடிகிறது. இதனால் நாம் வியப்படைந்து கூறுவோம், “ இதுவன்றோ வாழ்வு” ஆனால் “வாழ்வு” என்ற வார்த்தை வேறு எதோ ஒன்றை குறிக்கிறது எனபதை உணருகிறோம். இன்னும் நல்ல, பெரிய, அர்த்தமுள்ள வாழ்க்கை என்பதை உணருகிறோம்.

இயேசுவுடனான இந்த புதிய நீடிய வாழ்க்கை நடைபயணத்தில் நீங்கள் தனியே பயணிக்க வேண்டிய அவசியமேயில்லை. திரும்பவும் உங்கள் பரம பிதாவை விட்டு தள்ளி வாழ வேண்டிய அவசியமேயில்லை. மெத்தனமான ஒரு வாழ்க்கையை நோக்கி திரும்பவும் உங்கள் கவனம் போகுமேயானால்,மாற்று காரியங்களை உங்கள் மனம் திரும்புமேயானால், எல்லாவற்றிற்கும் பதில் என்னிடமே உள்ளது என்று நினைப்பீர்களேயானால்... அப்படிப்பட்ட தருணத்தில் என்ன செய்ய வேண்டும் என்று உங்களுக்கே தெரியும்.

நித்திய வாழ்வை வாழ மீண்டும் வாருங்கள்!அதற்கான பாதையும் அறிவீர்கள், நீங்கள் வாழ வேண்டிய வீடு, அந்த வீடு ஒன்று மட்டுமே.

ஆண்டவரிடம் உதவி கேட்டபோது நீங்கள் வாழ்ந்து கொண்டிருந்த வாழ்க்கையை விட, வரப்போகும் காலங்களில் நீங்கள் நினைத்து கூட பார்க்க முடியாத ஒரு வித்தியாசமான வாழ்க்கையை வாழ தயாராகுங்கள். வாழ்க்கையை பற்றின தெளிவை பெற்றதோடு, அதன் கூடவே செல்வாக்கான காரியங்களையும், வாய்ப்புகளையும் பெறுவீர்கள். இது எப்படி சாத்தியம்? ஏனெனில் கிறிஸ்து உங்களில் வாசமாயிருக்கிறார், அது சுத்தமாக எல்லாவற்றையும் மாற்றிவிடுகிறது. சோர்வு இருந்த இடத்தில் நீங்கள் நம்பிகையை கொண்டு வர முடியும். சிறைகைதியை போன்ற உணர்விலிருகிறவர்களுக்கு, விடுதலைக்கான வழியை காண செய்ய முடியும். இருளில்,நீங்களே வெளிச்சமாய் இருக்க முடியும்.

இதுவன்றோ வாழ்வு

சமூகத்தில் உங்களை போன்றே ஆண்டவரிடம் நன்றியோடிருக்கும் சகோதர சகோதரிகளை கண்டறியுங்கள். அவர்களோடு சேர்ந்து,கற்று,படித்து, மற்றவர்களின் திருமண வாழ்க்கைகளில், வீடுகளில், பள்ளிகூடங்களில், வேலை ஸ்தலங்களில் மற்றும் சமூகத்தில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்துங்கள்.

ஆண்டவரிடம் மற்றவர்களை கிட்டி சேர, நாம் உதவி கொண்டே இருப்போம். உண்மையான கொண்டாட்டம் அங்கேதான் காத்து கொண்டிருக்கிறது.

விழித்து கொள்ளுதல் என்றால் என்ன என்ற இந்த ஐந்து நாள் பாடதிட்டத்தில், எது உங்களுக்கு அதிகபட்ச தாக்கத்தை ஏற்படுத்தியது? ஆண்டவர் அடுத்ததாக எந்த காரியத்திற்காக உங்களை கூப்பிடபோகிறார் என்று நினைக்கிறீர்கள்?

வேதவசனங்கள்

நாள் 4

இந்த திட்டத்தைப் பற்றி

Finding Your Way Back To God

வாழ்க்கையில் இன்னும் அதிகமாக எதிர்ப்பார்க்கிறீர்களா? தேவனுடன் உள்ள உங்கள் உறவு எங்கு இருந்தாலும், இன்னும் அதிகமாக வேண்டும் என்ற உணர்வு தேவனிடம் திரும்புவதற்கான ஏக்கம் தான். நாம் தேவனிடம் திரும்பும் வழியை கண்டறிகையில், நாம் அனைவரும் மைல் கற்கள் அல்லது விழிப்புணர்வுகளை சந்திக்கிறோம். இந்த விழிப்புணர்வுகள் ஒவ்வொன்றன் வழியாகவும் பயணம் செய்து, நீங்கள் இப்போது இருப்பதற்கும் நீங்கள் இருக்க வேண்டும் என்று விரும்பும் இடத்திற்கும் உள்ள இடைவெளியை நிரப்புங்கள். நாம் தேவனை கண்டடைய விரும்புகிறோம், அவர் கண்டடையப்பட இன்னும் அதிகமாக விரும்புகிறார்.

More

இந்த திட்டத்தை வழங்குவதற்காக, டேவ் பெர்குசன், ஜான் பெர்குசன், மற்றும் வாட்டர்ப்ரூக் முல்ட்நோமா வெளியீட்டு குழுவுக்கு நன்றி தெரிவிக்கிறோம். மேலும் தகவலுக்கு, http://waterbrookmultnomah.com/catalog.php?work=235828 ஐ பார்க்கவும்.