தேவனிடம் திரும்பும் வழியை கண்டறிதல்மாதிரி

Finding Your Way Back To God

5 ல் 1 நாள்

"இன்னும் அதிகமாக ஏதோ இருக்கிறது"

உங்களை முழுமையாக திருப்திப்படுத்த முடியாத ஏதோ ஒன்றை நீங்கள் பின்தொடருவதாக எப்போதாவது வாழ்க்கையில் உணர்ந்திருக்கிறீர்களா? அந்த உணர்வுக்கு கவனம் செலுத்துங்கள். அது தேவனிடமிருந்து வருகிறது.

குடிப்பதும் மற்ற அடிமைப்படுத்தும் பழக்கங்களும் வீணானவற்றின் பின் செல்லும் வழிகளாக இருந்தாலும், போதை பொருளின் துர்பிரயோகத்தை பற்றி மட்டும் நாம் இங்கு பேசவில்லை. ஒவ்வொரு வாரமும் ஆலய ஆராதனையில் பங்கு பெறும், அல்லது பங்கு பெறுவோருக்கு மேடையிலிருந்து பிரசங்கிக்கும் "திருச்சபைக்கு செல்லும் நல்ல மக்கள்" கூட அனேக நேரங்களில் தேவனிடமிருந்து தூரமாக இருப்பதாக உணர்வதை நாம் அறிந்திருக்கிறோம். அவர்கள் "வெற்றியுள்ளவர்கள்" அல்லது "நீதிமான்களாக" வெளியே தென்படுகிறார்கள், ஆனால் உள்ளே தேவன் இல்லாமல் இருக்கிறார்கள். மதம் சார்ந்த வழக்கங்கள், வேலை, பள்ளி, குடும்பம் என மிகுவேலையாக தங்களை வைத்து கொண்டாலும் அது மாத்திரம்போதுமானதல்ல. தேவனை அவர்கள் நிஜமாக உணர வேண்டும் என்று ஏங்குகிறார்கள்.

அந்த ஏக்கம் தான் நாம் தேவனிடம் திரும்புவதற்கான வழியை கண்டடைவதில் முதல் விழிப்புணர்வு. "இன்னும் அதிகமாக ஏதோ இருக்க வேண்டும்."

ஆழமாக திருப்திப்படுத்தும் அன்புக்காக நீங்கள் ஏங்கும் போது, உண்மையாகவே மாற்றத்தை ஏற்படுத்த கூடிய ஒன்றிற்கு நீங்கள் உங்களையே முற்றிலுமாக கொடுக்க விரும்பும் போது, அல்லது வாழ்க்கையின் மிக கடினமான கேள்விகளுக்கு பதில் தேடும் போது, நீங்கள் தேவனை தேடுகிறீர்கள். உண்மையில், சொல்லப் போனால், இந்த இரண்டில் ஒன்றை நீங்கள் தேர்வு செய்யலாம்: இந்த ஏக்கங்களை நிறைவு செய்ய நீங்கள் தொடர்ந்து சுயமாக தேடிக்கொண்டே இருக்கலாம், அல்லது இந்த ஏக்கங்களை முதலில் கொடுத்த அவரை நோக்கி பார்க்கலாம்.

உண்மையான அன்புக்கான நமது ஏக்கம் மனித குலம் முதன் முதலாக எப்படி படைக்கப்பட்டது என்பதை நோக்கி செல்கிறது. அவரது அன்பை நாம் அவரிடமிருந்து நேரடியாகவும், ஆரோக்கியமான விதத்தில் மற்றவர்களோடு நாம் உறவு கொள்வதன் மூலமாகவும் அவரது அன்பை நாம் அனுபவிக்க வேண்டும் என்று தான் தேவன் விரும்புகிறார். நாம் ஏங்குவதற்கான பதில் தேவனிடம் இருப்பது மட்டும் அல்ல, அவரே அந்த பதில். அவர் அன்பாக இருக்கிறார், அவரது அன்பினால் நம்மை பின்தொடருகிறார்.

விலைமாதரின் கதவை தட்டும் ஒவ்வொரு மனிதனும் உண்மையாகவே கடவுளை தான் தேடுகிறான் என்று சொல்வார்கள். நீங்கள் ஒரு வேளை சீர்குலைக்கும் ஏதாவது பழக்கம் அல்லது உறவின் கதவை தட்டிக்கொண்டிருந்தால், தேவனிடம் திரும்பும் ஒரு முக்கியமான கட்டத்திற்கு நீங்கள் வந்திருக்ககூடும். ஏன்? ஏனென்றால், இந்த தரக்குறைவான மாற்று செயல்களால் வரும் ஏமாற்றம் உண்மையான அன்பை எங்கே கண்டடையலாம் என்று தான் உங்களை வியக்க வைக்கும். நேசிக்கவும் நேசிக்கப்படவும் ஏங்கும்உங்கள் ஏக்கத்தை நிறைவு செய்ய உங்களையே தேவனுக்கு திறந்து கொடுப்பீர்களா?

இந்த வாரத்தின் உங்களது நடவடிக்கைகள் நீங்கள் எதனால் திருப்தி அடைய நினைப்பதாக சுட்டிக்காட்டுகின்றன?

வேதவசனங்கள்

நாள் 2

இந்த திட்டத்தைப் பற்றி

Finding Your Way Back To God

வாழ்க்கையில் இன்னும் அதிகமாக எதிர்ப்பார்க்கிறீர்களா? தேவனுடன் உள்ள உங்கள் உறவு எங்கு இருந்தாலும், இன்னும் அதிகமாக வேண்டும் என்ற உணர்வு தேவனிடம் திரும்புவதற்கான ஏக்கம் தான். நாம் தேவனிடம் திரும்பும் வழியை கண்டறிகையில், நாம் அனைவரும் மைல் கற்கள் அல்லது விழிப்புணர்வுகளை சந்திக்கிறோம். இந்த விழிப்புணர்வுகள் ஒவ்வொன்றன் வழியாகவும் பயணம் செய்து, நீங்கள் இப்போது இருப்பதற்கும் நீங்கள் இருக்க வேண்டும் என்று விரும்பும் இடத்திற்கும் உள்ள இடைவெளியை நிரப்புங்கள். நாம் தேவனை கண்டடைய விரும்புகிறோம், அவர் கண்டடையப்பட இன்னும் அதிகமாக விரும்புகிறார்.

More

இந்த திட்டத்தை வழங்குவதற்காக, டேவ் பெர்குசன், ஜான் பெர்குசன், மற்றும் வாட்டர்ப்ரூக் முல்ட்நோமா வெளியீட்டு குழுவுக்கு நன்றி தெரிவிக்கிறோம். மேலும் தகவலுக்கு, http://waterbrookmultnomah.com/catalog.php?work=235828 ஐ பார்க்கவும்.