தேவனிடம் திரும்பும் வழியை கண்டறிதல்மாதிரி
"தேவன் என்னை ஆழமாக நேசிக்கிறாரே"
பிதாவுடன் புதிய வாழ்வு என்னும் இந்த சுழலில், அடுத்த எழுச்சு ஒரு முன் செல்லும் படியை விட பின் செல்லும் படியை போல தோன்றும். உங்களுக்கு வேண்டிய, தேவைப்படுகிற ஒன்றை தேவன் உங்களுக்கு அளிக்கிறார். ஒரு வரவேற்கும் வீடு. ஆனால் உங்களுக்குள் ஒன்று அதனை தடுக்க செய்யும். எந்த கேள்வியும் கேட்காமல் உங்கள் பரலோக பிதாவால் வீட்டிற்கு வரவேற்கப்பட்டு குடும்பத்திற்குள் அழைக்கப்படுவது வெகு தூரம் அனேக நாட்கள் சுற்றி திரிந்த ஒருவருக்கு சாத்தியமற்றதாக தோன்றலாம்.
அன்பிற்கான எழுச்சி என்று உங்கள் பயணத்தின் இந்த கட்டத்தை அழைக்கிறோம். இந்த கட்டத்தில், "எனக்கு இதற்கு தகுதி இல்லை" என்று சொல்லி ஆரம்பிக்கிறோம். தேவன் நம்மை ஏற்றுக்கொள்வது நம்ப முடியாத அளவிற்கு இருக்கிறது. தேவன் சொல்வதும் செய்வதும் நாம் நினைக்கும் தகுதிக்கு நேர்மாறாக இருப்பது "தேவன் என்னை ஆழமாக நேசிக்கிறார்" என்ற ஒரு ஆச்சரியமான உணர்வுக்கு நேராக நம்மை வழிநடத்துகிறது.
ஒரு ஆவிக்குரிய இழுபறி என் நாம் வீடு திரும்பும் போது ஏற்படுகிறது என்று இப்போது நீங்கள் பார்க்கலாம். நாம் நம்மை பற்றி ஒரு சில நம்பிக்கைகளை வைத்திருக்கிறோம், ஆனால் தேவன் நம்மை பற்றி வேறு சில நம்பிக்கைகளை வைத்திருக்கிறார். நாம் தோல்வியும் அவமானமும் நிறைந்த நம் கடந்தக்காலத்தை பார்க்கிறோம். ஆனால், தேவன் நாம் எப்படிப்பட்டவர்கள் என்று அன்புடனும் கனிவுடனும் பார்க்கிறார்.
அதனால் தான் இந்த எழுச்சி ஒரு பெரிய திருப்புமுனையாக இருக்கிறது. நம்மில் யாரும் இரண்டாவது வாய்ப்புக்கு தகுதியுள்ளவர்கள் அல்ல என்றும், நம்மில் யாருக்கும் மன்னிக்கப்பட தகுதி இல்லை என்றும், நாம் நிபந்தனையின்றி நேசிக்கப்பட நிச்சயமாக தகுதியுள்ளவர்கள் இல்லை என்று நாம் ஒரு வேளை முதல் முறையாக உணருகிறோம். ஆனால் நாம் அவற்றை பெற்றிருக்கிறோம்! நீங்களும் தான்! உங்களுக்கு அதற்கு தகுதி இல்லை, ஆனால் தேவன் உங்களுக்கு கொடுக்கிறார்.
நீங்கள் நம்மில் அநேகரை போன்றவராக இருந்தால், அவமானத்தின் சத்தத்தை நன்றாகவே அறிந்திருக்கிறீர்கள். "உன்னை பொருட்படுத்த தேவை இல்லை" என்றும் "நீ நேசிக்கப்படும் படி இல்லை" எம்ரும் அவமானம் கிசுகிசுக்கிறது. "இனி உனக்கு வாய்ப்பு இல்லை" என்று அவமானம் சத்தமிடுகிறது. அவமானம் சுய கண்டனத்தை கொண்டு வருகிறது. எனவே தான் நாம் கிருபையை முதலில் சந்திக்கும் போது "எனக்கு இதற்கு தகுதி இல்லை" என்று அடிக்கடி சொல்வதை காண்கிறோம்.
உங்கள் கடந்தக்கால தவறுகளும் தோல்விகளும் உங்களை வரையறுக்க விடாதீர்கள். அது அவமானத்தின் சத்தம். நீங்கள் செய்ததோ செய்யாததோ நீங்கள் அல்ல. உங்களுக்கு செய்யப்பட்டதும் நீங்கள் அல்ல. உங்களை தேவன் என்ன சொல்லுகிறாரோ, அதுவே நீங்கள். அவரது பிள்ளை.
உங்களுக்குள் ஒரு ஆவிக்குரிய இழுபறி இருப்பதாக உணருகிறீர்களா? அப்படியானால், அதனை எப்படி விவரிப்பீர்கள்?

வேதவசனங்கள்
இந்த திட்டத்தைப் பற்றி
வாழ்க்கையில் இன்னும் அதிகமாக எதிர்ப்பார்க்கிறீர்களா? தேவனுடன் உள்ள உங்கள் உறவு எங்கு இருந்தாலும், இன்னும் அதிகமாக வேண்டும் என்ற உணர்வு தேவனிடம் திரும்புவதற்கான ஏக்கம் தான். நாம் தேவனிடம் திரும்பும் வழியை கண்டறிகையில், நாம் அனைவரும் மைல் கற்கள் அல்லது விழிப்புணர்வுகளை சந்திக்கிறோம். இந்த விழிப்புணர்வுகள் ஒவ்வொன்றன் வழியாகவும் பயணம் செய்து, நீங்கள் இப்போது இருப்பதற்கும் நீங்கள் இருக்க வேண்டும் என்று விரும்பும் இடத்திற்கும் உள்ள இடைவெளியை நிரப்புங்கள். நாம் தேவனை கண்டடைய விரும்புகிறோம், அவர் கண்டடையப்பட இன்னும் அதிகமாக விரும்புகிறார்.
More
இந்த திட்டத்தை வழங்குவதற்காக, டேவ் பெர்குசன், ஜான் பெர்குசன், மற்றும் வாட்டர்ப்ரூக் முல்ட்நோமா வெளியீட்டு குழுவுக்கு நன்றி தெரிவிக்கிறோம். மேலும் தகவலுக்கு, http://waterbrookmultnomah.com/catalog.php?work=235828 ஐ பார்க்கவும்.